நட்சத்திரம் குணங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தின் குணநலன்கள்

திறமைகள் அளிக்கும் திருவாதிரை நட்சத்திரம் 

சிறப்புக்கள் 

திருவாதிரை நட்சத்திரத்தின் குணநலன்கள் | thiruvathirai nakshatra characters in tamil திருவாதிரை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

thiruvathirai nakshatra characters in tamil சீறும் திரு ஆதிரை என்ற இந்த நட்சத்திரம் சிவனுக்கு உரியது. திரு என்ற அடைமொழி பெற்ற இது ராகுவின் ஆட்சி பெற்றது. ஆகவே செம்பாம்பின் குணமான சீ குணமும், அடிக்கடி கோபப்படும் குணமும் இந்த ராசிக்காரர்களின் பிறவிக்குணமாக இருக்கும். 

பாம்பு புஸ்ஸென்று சீறி தனது கோபத்தை வெளிப்படுத்தி விட்டு, பிறகு சரசரவென்று நகர்ந்து, புதருக்குள் சென்று மறைவதைப் போல இந்த நட்சத்திரக்காரர்கள் 

கோபமும், சீற்றமும் அதிக நேரம் நீடிக்காது. மற்றவர்களை வழிநடத்திச் செல்லவும், குருவாக இருக்கவும், ஏற்ற தலைமைக் குணம் இந்த ராசியில் பிறந்தவர் களுக்கு பிறவியிலிருந்தே வரும். 

அவர்கள் கன ராசிக்கு உரியவர்கள் ராசி அதிபதியாக வாகன இருக்கிறார். பரிகார விருட்சம் செங்காளி மரம் 

பெயர் வைக்கவேண்டிய முதல் எழுத்துக்கள் – thiruvathirai nakshatra characters in tamil 

இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகழைக்கும் பெயர் வைக்கும் போது கம், ஆகிய மால் எழுத்துக்களையும், க. மற்றும் கா ஆகிய தொடர் எழுத்பாளையம் கொட பெயர்களையும் கட்ட வேண்டும். 

என் முதுமைக்கு குமாகுருபான் குமார விஜயன், குலசேகரன், கந்தன், சாதி, சந்திரன். சக்கரபாணி, சந்தானம், சங்கரன் போன்ற பெயர்களையும், 

பெண் குழந்தைகளுக்கு குயிலி, குமுதவல்லி, சாஹானா காந்திமதி, சந்திரா, சாந்தகுமாரி போன்ற பெயர்களையும் வைத்தால் வாழ்க்கை ஒரோடும் சிறப்போடும் அமையும் 

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பைரவர் உருவம் பதித்த மோதிரத்தையோ அல்லது டாலரையோ அணிந்துகொண்டால் சகலவிதமான சம்பத்துக்களும் பெருகும், இவர்களுடைய நட்சத்திரங்கள் கோமேதகம், 

பொதுக்குணங்கள் – thiruvathirai nakshatra characters in tamil 

 • பாம்பு என்று சொன்னதற்கு ஏற்ப இவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சந்தர்ப்ப சூழ்நிலைகளை அனுசரித்து பேசுவார்கள். 
 • இதனால் அடிக்கடி எதிரிகளை சம்பாதித்துக் கொள்வார்கள் இவன் என்னப்பா அங்கிட்டு ஒண்ணு சொல்றான், இங்கிட்டு வந்தா ஒண்ணு சொல்றான். 
 • இரட்டை நாக்கோ, நம்பமுடியலியே என்று மற்றவர்கள் அங்கலாய்த்தும் கொள்ளும் விதமாக இவர்களது பேச்சு அமைந்திருப்பது இயல்பு. 
 • தற்காலத்தில் இவர்களுக்கு காரியவாதிகள் என்றும், சந்தர்ப்பவாதிகள் என்று பெயரிடலாம்.
 • எதிரிகளை அடக்கும் துணிச்சலும், பத்திராவித்தனமும் மிருந்தவர்கள். சிறிய வயதிலேயே குடும்பப்பாதை சுமக்கும் அகிலைக்குத் தள்ளப்படுவதும் உண்டு. 
 • எப்பாடு பட்டாவது எடுத்த காரியத்தை முடித்து விடுவார்கள் இவர்களது அறிவாற்றலும் முரட்டுத்தனமும் காடு பென்கள் விரும்புவார்கள் 
 • அன்னிக்கு பஸ்ஸல ஒருத்தன் என்மேலே இடிச்சான்னு அவன் கிட்ட சண்டைக்குப் போனீங்களே அது எனக்கு ரொம்பப் பிடிச்சிது என்று ஒரு பெண் சொல்லும் அளவுக்கு நடந்து கொள்வார்கள். 
 • அதேநேரத்தில் அவர்கள் விருப்பப்படி எப்போதும் நடக்கமாட்டார்கள், குடும்பத்திற்காக காதலித்த பெண்ணைக் கைவிடுவார்கள், புரட்சி செய்கிறேன் என்று ஏடாகூடமாக வம்பில் மாட்டிக் கொள்வார்கள். 
 • இதனால் இந்த நட்சத்திரக் காரர்கள் ஏதாவது ஒரு வகையில் பெண்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும். 
 • இந்த நட்சத்திரத்துப் பெண்கள் தங்கள் பெருமையைப் பேசுவதிலும், கேட்பதிலும் ஆர்வம் உள்ளவர்கள். இதன் காரணமாக நட்பு வட்டாரத்தில் அடிக்கடி சச்சரவு ஏற்படும். 
 • நல்ல நண்பர்களை விட்டுப் பிரியும் நிலைமையும் உண்டாகும். இவர்கள் நயவஞ்சகமாகப் பேசி குடும்பங்களில் கலகம் செய்வதை விரும்புவார்கள், வீண் செலவு செய்துவிட்டு புலம்புவார்கள். 
 • பக்கத்து வீட்டு வேணி அம்மாதான், சரவணா ஸ்டோருக்கு போறேன், நீங்களும் வாங்கன்னு கூட்டிட்டு போனாங்க. அவங்க கூட போயிட்டா சும்மா வரமுடியுதா? 
 • தேவையில்லையோ சில சாமான்களை வாங்கிட்டேன். இரண்டாயிரம் ரூபாய் செலவு. இப்படித்தான் எனக்கு செலவு வீடுதேடி வருது. எல்லாம் நேரம் என்று மற்றவர்களைக் குற்றம் சொல்லும் குணம் கொண்டவர்கள். 
 • தேவையோ நீண்ட ஆயுள் உடைய இவர்கள், சமுதாயத்திற்குப் பயன்படும் சேலைகள் செய்லக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்வாள் தலைவர்களாக ஆசிரமத்தின்  துறவிகளாக  இருப்பதில் வல்லவர்கள் பெரிய கூட்டதை நிர்வாகம் செய்யும் திறமை படைத்தவர்கள். 

ஜோதிட சாஸ்திரம். இவர்களைப் பற்றி 

திருவாதிரை முதல் பாதத்தில் பிறந்தவர்கள் 

இனிய மொழிகளைப் பேசுபவர், நல்லகுணம் உள்ளவர் மகான்கள், பெண்களின் மனத்துக்கினியவர்கள் 

திருவாதிரை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் 

வாதத்திறமையில் வல்லவர்கள். இரக்கம் காட்டாதவர்கள், விதண்டாவாதம் செய்பவர்கள், அதிகன் கல்வி பெறாதவர்கள், பெண்போகத்தில் விருப்பம் கொண்டவர்கள். 

மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

முடக்குவாதம், கீல்வாதம் போன்றவற்றினால் பாதிக்கப்படுபவர்கள், சட்டென்று கோபப்படும் குணம் கொண்டவர்கள், முரட்டுத்தனமாக நடந்து கொள்பவர்கள். 

பிறரைப்பற்றி குறைசொல்லி கலகம் செய்பவர்கள் பெண்களுக்குப் போகத்தை தராதவர்கள், பேச்சின் மூலமாக பிறரைக் கவர்ந்து பொருள் சம்பாதிப்பவர்கள், 

நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் 

மிக அழகானவர்கள், சுற்றத்தாரை எதிர்ப்பவர்கள், தீய குணங்களைக் கொண்டவர்கள், பேச்சுத்திறமை மிக்கவர்கள் புத்திசாலித்தனத்தை சுயலாபத்திற்காகப் பயன்படுத்துகிறவர்கள் என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது. 

திருவாதிரை நட்சத்திரத்தின் குணநலன்கள் | thiruvathirai nakshatra characters in tamil திருவாதிரை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

திருமணவாழ்க்கை – thiruvathirai nakshatra characters in tamil

இவர்கள் விரும்பியபடியே கைகூடும். காதலும் அதற்குத் தேவையான கற்பனை வளமும் மிகுந்த இவர்கள் பெரும்பாலும் காதலித்தே கலியாணம் செய்வதை விரும்புவார்கள் தான் துணையை  பெரிதும் நேசிப்பார்கள். 

பிள்ளைக்கு ஏறாவது முறை தபால் அதை எப்பாடுபட்டாவது நாற்றுவிட்டுக்காக ம பார்ப்பார்கள். மனைவிக்கு ஒருதரைவும் இல்லாமல்  பாத்தும் கொள்வார்கள் 

வனஜா உனக்கு வீடு பிடிக்கவே, காட உயரத்துக்கு தகுந்தா மாதிரி சமையல் மேடையை கட்ட  சொன்னேன் என்று மனைவியிடம் பேசுவார்கள், வீடு, சமையல், சொத்துக்களா என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து நிர்வாகம் செய்வதோடு அதை ரசித்து அனுபவித்து மகிழ்ச்சி அடைவார்கள், 

பொதுவாக திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் பிள்ளைகள் பெறுவதை விரும்புவதில்லை ஒன்றே போதும் என்பார்கள், இவர்களுக்கு 14 வயது முதல் 32 வயதுக்குள் திருமணம், குழந்தைப் பாக்கியம் வாய்க்கும். 

திருவாதிரை நட்சத்திரத்தின் குணநலன்கள் | thiruvathirai nakshatra characters in tamil திருவாதிரை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

தொழில் 

thiruvathirai nakshatra characters in tamil திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நிர்வாகத்திறமையும், அறிவாற்றலும், நினைவாற்றலும் அதிகம் சற்று கர்வமும் கூடப்பிறந்ததே. 

இவர்கள் அரசுப் பணியவோ அல்லது தனியார் துறையிலோ தங்கள் திறமையை வெளிப்படுத்தி மேதிைகாரிகளை வியக்கவைப்பதோடு, பதல் உயர்வையும் எளிதாகத் தட்டிச் செல்வார்கள், 

பொதுநலசேவை, சுகாதாரத்துறை, அரசியல், மருந்து விற்பனை, மூலிகைப்பண்ணை விவசாயம் போன்றவை இவர்களுக்கு ஏற்றம் தரும். மதபோதகராக இருயது, 

கல்லுரி , பள்ளி, பல்கலைக்கழகங்கள், படங்களை நிர்வாகம் செய்வது புனித யாத்திரைகளை ஏற்பாடு செய்வது, வெளிநாட்டும் பொருட்களை விற்பது, தெய்வீகத் தொடர்பான பொருட்பாரின் விற்பனை ஆகியவற்றைச் செய்தால் வருமானம் அதிகரிக்கும், வாழ்வு வளமாகும். 

இவர்கள் 40 வயதுக்கு மேல் சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிமாகப் பெற்று சகல சௌபாக்கியங்களையும் கொண்டவர்களாகி சக்கரவர்த்தி போல வாழ்வார்கள். 

நாம் ஏற்கெனவே அறிந்ததைப்போல திருவாதிரை சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம். இதன் அதிதேவதை அவரே. சாம்பல் பூசிய வெண்ணிறத்துடன், ஜடாமுடி தாங்கி, கையில் சூலாயுதம் ஏந்தி, ரிஷப வாகனராகக் காட்சிதரும் சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. 

இதனால் நமது முன்னோர் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் சிவனுக்குரிய ஆருத்ரா தரிசனத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளனர். 

சிவனுக்குரிய நட்சத்திரமான திருவாதிரையில் தான் வைணவத்தில் பெரிய திருவடி என்று பக்தர்களினால் போற்றப்படும் கருடாழ்வாரும் தோன்றி இருக்கிறார். 

ஆகவே சிவன் கோயிலுக்குச் செல்லும் திருவாதிரை நட்சத்திரக் காரர்கள் அங்கே சிவனை வழிபடவேண்டும். பெருமாள் கோயிலுக்குச் செல்லும் போது மறக்காமல் கருடாழ்வாரை வழிபட்டு, தங்கள் மனக்குறைகளை தீர்த்துவைக்குமாறு வேண்டிக்கொள்ள வேண்டும். 

பரிகார விருட்சம் 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய மரம் செங்காலி மரமாகும். திருவாதிரை நட்சத்திரத்தன்று செங்காலி மரம் தலவிருட்சமாக உள்ள தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். 

பிறகு தலவிருட்சத்தைச் சுற்றிவந்து தூப தீப ஆராதனைகள் செய்து, இயன்ற நைவேத்தியங்களைப் படைத்து, மரத்திற்கு பக்தியோடும், அன்போடும் நீருற்ற வேண்டும். 

திருவாதிரை நட்சத்திரத்தின் குணநலன்கள் | thiruvathirai nakshatra characters in tamil திருவாதிரை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

மேலும் பரிகாரப் பூசைகள் ஏதாவது தேவைப் படுமானால் அவற்றையும் செய்து கொள்ள வேண்டும். பிறகு மரத்தின் அருகே அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். 

இவ்வாறு செய்வதால் திருவாதிரை நட்சத்திரக்காரர் களுக்கு ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். கடன் தொல்லைகள் தீரும், ஆயுள் விருத்தி ஏற்படும், 

நோய் நொடிகள் நீங்கி தேக ஆரோக்கியம் உண்டாகும், மனத்தில் சந்தோஷமும், அமைதியும் வளரும். குறையாத செல்வமும், நிறைவான வளமும் வந்து சேரும். 

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சென்று வழிபடவேண்டிய தலங்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். வழிபடவேண்டிய தலங்கள் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் 

வழிபடவேண்டிய பரிகாரத்தலம் 

திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரத்தில் அமைந்திருக்கும் சோழீஸ்வரர் திருக்கோயில், 

தலச்சிறப்புக்கள் 

இங்கு சிவனும், தேவி பராசக்தியான அம்பிகையும் பக்தர்களின் குறை தீர்க்கும் பொருட்டு சேர்ந்து வந்து அருள் புரிந்தனர். “உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு” என்று அபிராமி பட்டர் தனக்கு அம்மையும் அப்பனும் ஒரே உருவத்தில் வந்து தரிசனம் அளித்ததைத் தெரிவிக்கிறார். 

திருவாதிரை நட்சத்திரத்தின் குணநலன்கள் | thiruvathirai nakshatra characters in tamil திருவாதிரை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

அதைப் போல இத்தலத்தில் அம்மையும் அப்பனும், சேர்ந்துவந்து கோயில் கொண்டு தரிசனம் தருகின்றனர். இந்தக் காரணத்தினால் ஆதி காலத்தில் சிவன்காளிபுரம் என்று அழைக்கப்பட்ட இத்திருத்தலம் நாளடைவில் சேங்காளிபுரம் என்றும், 

தற்போது சேங்காலிபுரம் என்றும் மருவி வழங்கப் படுகிறது என்பது அறிஞர் கருத்து. மேலும் இந்தக் கோயிலை புனருத்தாரணம் செய்து, பணிகள் செவ்வனே நடைபெற ஏராளமான நிலங்களை நிவந்தமாக அளித்தவர் விக்கிரமசோழன். 

ஆகவே அவனது பெயரால் இங்குள்ள இறைவருக்கு சோழ ஈஸ்வரன் என்று பெயர் ஏற்பட்டதையும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. தேவியின் பெயர் நிஸ்துலாம்பிகை என்பது. இதற்கு வடமொழியில் அருள் வழங்குவதில் ஒப்பில்லாதவள் என்பது பொருள். ஆகவே தமிழலும் அன்னையின் பெயர் இங்கு ஒப்பிலாமணி அம்மை என்பதே  

தீர்த்தப் பெருமை 

சிவபெருமான் தனது தலையிலிருந்து பெருகும் கங்கையின் புனிதநீரை சிறிது எடுத்து அதை மகாவிஷ்ணு மூலமாகக் கொடுத்தனுப்பினார். மகாவிஷ்ணுவும் அந்தத் தீர்த்தத்தைக் கொண்டு வந்து இத்தலத்தில் குளமாக பிரதிஷ்டை செய்து விநாயகரிடம் கொடுத்தார். 

பிறகு விநாயகப் பெருமான் அந்தத் தீர்த்தத்தில் நீராடினார். அவருக்கு பார்வதி பரமேஸ்வரன் இருவருமே நேரில் தரிசனம் தந்து ஆசிவழங்கியதாக தலபுராணம் தெரிவிக்கிறது. 

மகாவிஷ்ணுவினால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தீர்த்தம் அவருடைய சுதர்சன சக்கரத்தின் பெயராலேயே சக்கர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. 

இந்தத் தீர்த்தத்தில் அமாவாசை சோமவாரம், பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தியோடு நீராடி, தலத்தில் எழுந்தருளி இருக்கும் சோழீஸ்வரைத் தரிசித்தால் எப்படிப்பட்ட தோஷமும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

இதனைப் பிரம்மாண்ட புராணமும் தெரிவிக்கிறது. இங்குள்ள பெருமான் பிரம்மதேவருக்கு மிக அதிசயமான முறையில் தரிசனம் கொடுத்துள்ளார். ஒரு காலத்தில் உலக நன்மையின் பொருட்டு பிரம்மா இத்தலத்தில் தங்கி கடுமையான தவம் செய்தார். 

தவத்தை மெச்சிய சிவபெருமான் அவருடைய ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு திசையில் நான்கு லிங்கங்களாக தரிசனம் தந்தார். அவை பிரம்மலிங்கம், வேதலிங்கம், ஜோதிலிங்கம், சோளேஸ்வரலிங்கம் என்ற பெயரில் இன்றும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி வருகின்றன. 

ஒரே வரிசையில் நவக்கிரகங்கள் 

திருவாதிரை நட்சத்திரத்தின் குணநலன்கள் | thiruvathirai nakshatra characters in tamil திருவாதிரை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

சக்கரதீர்த்தம் நோக்கி கிழக்கு முகமாக தரிசனம் தருகிறார் சோழேஸ்வரப் பெருமான். அவரது எதிரில் ஒன்பது நவக்கிரகங் களும் ஒரே நேர்க்கோட்டில் நின்று அவரைத் தரிசிப்பது போல அமைந்திருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். 

இங்கு சோழீஸ்வரருக்கு மிஞ்சிய ஆற்றல் பெற்ற தெய்வமோ அல்லது கிரகங்களோ எதுவும் இல்லை. இத்தலத்தில் மனிதர்களை ஆட்டிப் படைக்கும் நவக்கிரகங்கள் தங்களது இடத்தை விட்டு வரிசையில் நின்று அவரைத் தரிசனம் செய்கின்றன. 

ஆகவே எந்தக் கிரக தோஷமாக இருந்தாலும் இங்கு வந்து சோழீஸ்வரரைத் தரிசனம் செய்தால் அது நீங்குவது உறுதி. 

தரிசனப் பலன்கள் 

தன்னுடைய பெயர் உயர் அதிகாரிகளினால் பரிந்துரை செய்யப்படாமல், பதவி உயர்வு கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் திருமணத்தடையை வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் கள் ஆகியோர் இத்தலத்துக்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராட வேண்டும். 

சக்கர தீர்த்தக்கரையில் உள்ள கல்யாண வரசித்தி விநாயரை வழிபாடு செய்ய வேண்டும். பிறகு இறைவனைத் தரிசித்து அர்ச்சனை செய்து மனமுருகி வழிபடவேண்டும். 

இப்படிச் செய்தால் துன்பங்கள் விலகி, தோஷநிவர்த்தி உண்டாகும். இதுவரையில் இருள் மண்டிக்கிடந்த வாழ்க்கை பிரகாசம் அடையும். தாய்வழியில் சொத்து கிடைக்காமல், 

வழக்கில் சிக்கி இருப்பவர்கள், தள்ளிப் போகின்ற சுப நிகழ்ச்சிகளினால் மன வேதனைப்படுகிறவர்கள் ஆகியோர் அடிக்கடி சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்து அபிஷேக அர்ச்சனைகள் செய்து வழிபட்டால் எல்லாவகையான துன்பங்களும் விலகி நன்மைகள் பெருகும். 

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி சிவலிங்க தரிசனம் செய்ய வேண்டும். பிரதோஷ வழிபாடு செய்வது மிகவும் அவசியம். 

சிவபெருமானுடைய அபிஷேகத்திற்கு பால், தயிர், இளநீர், தேன் ஆகியவற்றைக் காணிக்கை யாகக் கொடுப்பதும், நந்தியை வணங்குவதும், சிவனடி யார்களுக்கு அன்னதானம் செய்வதும் மேன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். 

விரும்பத்தகுந்த மாற்றங்கள் ஏற்படும், தனவரவு உண்டாகும். தடைகள் நீங்கி தொழில் விருத்தியாகும். இத்தலம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் இருக்கிறது. திருவாரூர் கும்பகோணம் சாலையில் உள்ள குடவாசலில் இருந்து 5 கிமீ தொலைவில் இத்தலம் அமைந்திருக்கிறது. 

அபயவரதீஸ்வரர் கோயில் 

அபயவரதீஸ்வரர் கோயில் 

thiruvathirai nakshatra characters in tamil திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய மற்றொரு பரிகாரத்தலம் தஞ்சை மாவட்டம், அதிராம் பட்டிணத்தில் உள்ள அபயவரதீஸ்வரர் கோயில். 

மூலவர் அபயவரதீஸ்வரர், அம்பாள் ஸ்ரீ சுந்தரநாயகி. தலவிருட்சம் வில்வம் மற்றும் வன்னிமரங்கள். அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் எப்போதும் பகை உண்டு. 

அவர்கள் எப்போதும் பகைமை பாராட்டி போரிடுவது வழக்கம். சில சமயங்களில் தேவர்கள் வெற்றி பெறுவார்கள். சில சமயங்களில் அசுரர்கள் வெற்றிபெறுவார்கள். 

ஒரு சமயம் தேவர்கள் தோல்வி கண்டனர். அசுரர்களை தேவர்களை விடாமல் துரத்தி அடித்தனர். பயந்து நடுங்கிய தேவர்கள் திருவாதிரை மண்டலத்தில் தஞ்சம் அடைந்தனர்.

 பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களிலும் சிவபெருமான் உலாவருகின்ற மண்டலங்களில் திருவாதிரை மண்டலம் என்பதும் ஒன்று. 

இது அவருடைய ஆளுகைக்கு உட்பட்டது. இதற்குள் நுழைந்தவர்களை எந்தவிதமான துன்பமும் தீண்ட முடியாது. இதை அறிந்த தேவர்கள் அங்கே அபயம் புகுந்தனர். 

அங்கே செல்வதற்கு அசுரர்கள் பயந்து பின்வாங்கினார்கள் இறைவனுக்கு அபயவரதீஸ்வரர் என்ற பெயர் இப்படித்தான் ஏற்பட்டது. அவரே இந்தப் பூமியில் அதிராம்பட்டிணத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

இப்படிப்பட்ட பெருமைகள் கொண்ட திருவாதிரை நட்சத்திரத்தன்று அபயவரதீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அவரைத் தரிசனம் செய்தால் எதிரிகளினால் ஏற்பட்ட பயம் ஒழியும். 

பொருளாதாரத் தடைகள் அகலும். மரண பயம் நீங்கும். மனத்தில் தோன்றி அச்சமூட்டும் பயங்கரக்காட்சி களின் தொல்லைகள் நீங்கி, அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். 

திருக்கடையூருக்கு அடுத்தபடியாக எமபயமும், எமவாதனைகளும் நீக்கும் திருத்தலம் இது தான். 

இழைக்கின்ற விதிவழியே அடுங்காலன் எனை நடுங்க 

அழைக்கும் பொழுது அஞ்சல் என்பாய் அத்தர் சித்தமெல்லாம் 

குழைக்கும் குவிமுலை நாயகியே 

என அபிராமி பட்டர் திருக்கடையூர் அபிராமியைக் குறித்து பாடுகிறார். நமது கர்ம வினைகளின் படி காலம் முடியும் தறுவாயில் எமன் வந்து வா போகலாம் என அழைக்கிறான்.. மரணபயம் மண்டையைப் பிடித்து உலுக்குகிறது. 

இந்த உடலைவிட்டு உயிர் போக மறுக்கிறது. அந்த நேரத்தில் அஞ்சாதே நான் இருக்கிறேன் என்று அபயம் அளிக்கிறாள் அன்னை பராசக்தி என்பது இப்பாடலின் பொருள். 

இந்த வகையில் எமபயம் போக்கும் தலமாகவும் அதிராம்பட்டிணம் விளங்குகிறது திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட தோஷங்களினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இத்தலத்திற்கு வந்து இறைவனைத் தரிசித்து, வழிபாடு மற்றும் பூசைகள் செய்தால் தோஷம் நிவர்த்தியாகும். 

பெண்களின் திருமணத்தடைகள் விலகும். நீண்டகால நோய்கள் நீங்கும். பக்தர்கள் இத்தலத்து இறைவனுக்கும் தேவிக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள். 

ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தில் ஞானிகளும், சித்தர்களும் இக்கோயிலுக்கு அரூபமாக வந்து இறைவனை தரிசிப்பதாக ஊர்மக்கள் நம்புகிறார்கள். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இக்கோயிலுக்கு ஒருமுறை வந்து தரிசனம் செய்தால் துன்பங்கள் விலகும், புதியபாதை திறக்கும். 

வழிபடவேண்டிய இதர தலங்கள் 

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில். திருத்துறைப்பூண்டி வட்டம், கீராலத்தூர் அஞ்சல், திருநெல்லிக்காவல் வழி, திருக்கொள்ளிக்காடு அருள்மிகு அக்னீஸ்வரர் ஆலயம். 

திருவாரூர் திருத்துறைப்பூண்டி இடையே உள்ளது திருக்கொள்ளிக்காடு. இங்கே எழுந்தருளி இருப்பவர் பொங்குசனி பகவான். ஆகவே இவருக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை எடுத்துக் கொண்டு வரலாம். 

இரும்புச் சட்டியில் எட்டு நாணயங்களைப் போட்டு அதில் நல்லெண்ணெயை நிரப்பி உங்கள் முகத்தை அதில் பார்க்க வேண்டும். இப்படிச் செய்தபிறகு தானம் அளிக்க வேண்டும். 

இவ்வாறு செய்வதால் சனிதோஷம் விலகும். சனிதோஷம் போக்குவதில் திருநள்ளாறையும் விட சிறப்புப் பெற்றதாக இத்தலம் கருதப்படுகிறது. சனி பகவானால் உண்டாகும் அனைத்து தோஷங்களும் இந்தத் தலத்திற்குச் சென்று வந்தால் நீங்குவது உறுதி.

சனிக்கிரகத்தினால் ஏற்படும் பீடைகள், தொழில் மந்தம், கொடிய நோய்கள், கண்பார்வை மங்குதல், சரரத்தில் வலி உண்டாதல், கல்வியில் தடை, ஆசைகள் நிறைவேறாமல் போதல், 

திருமணத்திற்குப் பிறகு வரும் தொல்லைகள், துன்பங்கள், உடலின் அங்கங்களில் குறைபாடு ஏற்படுதல், திருடர்களினால் அச்சம், ரத்தகாயம் ஏற்படுதல், 

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் ஆகிய அத்தனை பிரச்சனைகளும் திருக்கொள்ளிக்காட்டில் எழுந்தருளி இருக்கும் அக்கினீஸ் வரரைத் தரிசித்து விட்டு வந்தால் மறைந்து விடும் என்பது பெரியோரின் நம்பிக்கை. 

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் பரிகாரத்தலமான திருக்கொள்ளிக்காடு சென்று வழிபட்டு வருவது சனிதோஷத் தின் கடுமையைக் குறைக்கும். 

நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் இந்த மூன்று வகை எண்ணையும் கலந்து ஒரு இரும்பு விளக்கில் எட்டுத்திரி இட்டு சனீஸ்வரனுக்கு விளக்கேற்றி வழிபடுவது அஷ்டமச்சனியினால் ஏற்படும் கஷ்டங்களைத் தீர்க்கும், 

நிம்மதியை ஏற்படுத்தும், வாழ்க்கை பிரகாசமாகும். இந்த தலம் திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கிமீட்டர் தொலைவில், அதாவது திருவாரூர் திருத்துறைப்பூண்டி மெயின்ரோடில் நெல்லிக்கா என்று கைகாட்டி உள்ள திசையில் சென்று 

திருநெல்லிக்கா தெங்கூர் அடைந்து அங்கிருந்து கொள்ளிக் காடு செல்லும் பாதையில் 5 கிமீ சென்று கீராலத்தூர் கிராமத்தை அடைந்து சிறிது தொலைவு சென்றால் சாலையோரத்தில் தாமரைக்குளத்தையும், கோயிலையும் அடையலாம். பேருந்து, மினிபஸ் வசதிகள் இருக்கின்றன. 

மேலும் சில பரிகாரங்கள் 

ஒவ்வொரு சனிக்கிழமையிலும் பூரண உபவாசம் இருந்து காகத்திற்கும் ஏழைகளுக்கும் உணவளிக்கலாம். ஒவ்வொரு சனிக்கிழமையிலும் ஒருவேளை உணவோடு விரதம் இருந்து சனிபகவானை ஸ்தோத்திரங்கள் சொல்லி வழிபடலாம். 

ஒவ்வொரு நாளும் இரண்டு தேக்கரண்டி எள்ளை ஒரு காகிதத்தில் பொட்டலம் கட்டி அதை இரவில் படுக்கும் போது தலையணைக்குக் கீழே வைத்துக்கொள்ளவும். 

காலையில் அதை சாதத்தில் கலந்து காகத்திற்கு வைக்கவும். இப்படி ஒன்பது நாளோ அல்லது 48 நாட்களோ சனியின் தீவிரத்தைப் பொறுத்து செய்துவரலாம். 

ஒரு முழுத் தேங்காயை சனி பகவான் சந்நிதியில் உடைத்து இரண்டு பகுதியாக்கி அதில் நல்லெண்ணை விட்டு, எள் முடிச்சு போட்டு தீபம் ஏற்றலாம். 

சனி பகவானுக்கு நல்லெண்ணை அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீலநிறத்தில் வஸ்திரம் சார்த்தி, எள் சாதம், வடைமாலை நைவேத்தியத்தோடு வழிபடலாம். பிறகு அவற்றை மற்றவர்களுக்குப் பிரசாதமாகக் கொடுத்து விடவும். 

சனி பகவானுக்கு சாந்தி ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள் பக்தியோடு செய்யலாம். அதைத் தொடர்ந்து மண்டல பூசை செய்தும் அதிகப் பயன் பெறலாம். 

ஆஞ்சநேயர், தர்மராஜன், பிரஜாபதி ஆகியோரை ஆராதனை செய்வதன் மூலமாகவும் சனியின் கொடுமையில் இருந்து தப்பிக்கலாம். அவரவர் பிறந்த தேதி மற்றும் நட்சத்திரங்களில் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யலாம். 

இது தவிர இரும்பு அல்லது ஸ்டீல் டாலர், காப்பு அணிவதும் அதை கருப்பு கயிற்றில் கட்டிக் கொள்வதும் நல்லது. வசதி இருந்தால் நீலக்கல் என்னும் ப்டோபாஸ் கல்லை டாலரில் பதித்து அணிவது நல்ல பலனைத் தரும்.

வசதி இருப்பவர்கள் அந்தக் கல்லில் செய்யப்பட்ட சிலையை வாங்கி அதை வீட்டில் வைத்து மேலும் உடல் ஊனமுற்றவர்கள், பார்வை அற்றவர்கள் ஆகியோருக்குத் தானம் செய்வதும், 

காலணிகள் வாங்கித் தருவதும், உடைகள் வாங்கித் தருவதும் செய்தால் சனி தோஷத்தின் கொடுமைகள் குறையும் thiruvathirai nakshatra characters in tamil

சனீஸ்வர விரதம் 

டிசஅபயவரதீஸ்வரர் கோயில் ம்பர் மாதம் ராசி பலன்கள் - 2021 month rasi palan கும்பம் ராசி மகரம் ராசி தனுசு ராசி கன்னி ராசி துலாம் ராசி சிம்மம் ராசி மிதுனம் ராசி

ஒவ்வொரு சனிக்கிழமையிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் அனுஷ்டிக்கலாம். சனி பகவானுக்குரிய தானியம் எள், நிறம் கறுப்பு, வாகனம் காகம். 

எனவே கரிய பட்டுத்துணியைச் சாத்துவதும், எள்ளுச்சாதம் நிவேதனம் செய்வதும், காகத்திற்கு உணவிடுவ தும், சனிக்கிழமை செய்து வருவது நல்ல பலன்களை ஏற்படுத்தும். 

மற்ற விரத நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது கூடாது, ஆனால் சனீஸ்வர விரதம் இருப்பவர்கள் எண்ணெய் முழுக்கு செய்தல் வேண்டும். புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகள் அனைத்தும் சனீஸ்வரனுக்கு உகந்த நாட்கள். 

எனவே மற்ற மாதங்களில் விரதம் இருப்பதைக் காட்டிலும் புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து சனி பகவானை வழிபட்டால் துன்பங்கள் தீரும். வறுமை அகலும், தொழில் மேன்மை அடையும், தடைகள் நீங்கும்.

புனர்பூச நட்சத்திரத்தின் குணநலன்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button