நட்சத்திரம் குணங்கள்

ரோகிணி நட்சத்திரத்தின் பொதுவான குணநலன்கள்

கல்வி சிறக்கும் ரோகிணி நட்சத்திரம் பொதுவான குணநலன்கள் 

ரோகிணி நட்சத்திரத்தின் குணநலன்கள் rohini nakshathira characters in tamil ரோகிணி நட்சத்திரம் சிறப்புக்கள் ரோகிணி நட்சத்திரம் பொதுக்குணங்கள் 

ரோகிணி நட்சத்திரம் சிறப்புக்கள் 

rohini nakshatra characters in tamil ரிஷப ராசிக்கு உரிய ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். ரோகிணி என்ற பெயர் பெண்பாலைக் குறிப்பதாக இருந்த போதிலும் இது ஓர் ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. 

ராசிக்கு அதிபதி சுக்கிரன். பரிகார விருட்சம் நாவல் மரம். சந்திரனின் மனைவியாகிய 27 நட்சத்திரங்களில் அவனது மனதுக்குப் பிடித்தவள் இந்த ரோகிணி. 

பெயருக்கு உரிய முதல் எழுத்துக்கள் 

rohini nakshathira characters in tamil இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு வ அல்லது வி என்ற எழுத்தில் துவங்கும் பெயர்களை வைக்கலாம். ஆண்குழந்தைகளுக்கு வடிவேலு, விஜயன், விஷ்ணு வர்த்தன், விமல், விவேக், வீரமணி போன்ற பெயர்களை வைக்கலாம். 

பெண் குழந்தைகளுக்கு விஜயா, விமலா, வனஜா, வசந்தா, வேணி, வான்மதி போன்ற பெயர்களைச் சூட்டலாம். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சரஸ்வதி தேவியின் உருவம் பதித்த டாலரையோ, மோதிரத்தையோ அணிந்து கொண்டால் சிறப்புக்கள் கூடும். இவர்களுடைய ராசிக்கல் முத்து. 

ரோகிணி நட்சத்திரம் பொதுக்குணங்கள் – rohini nakshathira characters in tamil 

 • ஐந்து நட்சத்திரங்களைக் கொண்டு வண்டிச் சக்கர வடிவத்தில் ஒளிரும் குணம் கொண்டது ரோகிணி நட்சத்திரம்.
 • இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம், பொருள், ஆடம்பரம், புகழ் ஆகியவற்றில் நாட்டமிக்கவர்கள்.
 • ஆடம்பரம், சுகபோகமான வாழ்க்கை, சொகுசான பதவி ஆகியவற்றில் ஆசை கொண்டவர்கள்.
 • உழைப்பதற்குத் தயங்குவார்கள். கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருப்பார்கள்.
 • இவர்கள் வஞ்சகம் பேசாதவர்கள், வலுத்த உள்ளங்கால் உடையவர்கள். அதன் காரணமாக நடை கம்பீரமாக உறுதியானதாக இருக்கும்.
 • இவர்கள் நன்றாகப் படித்தவர்களுடன் நட்புக் கொள்ள விரும்புவார்கள்.
 • பயணம் செய்வதில் ஆர்வம் மிக்கவர்கள். ஆசார அனுஷ்டானங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள்.
 • இந்த நட்சத்திரக்காரர்கள் பேசுவதில் சாமர்த்திய சாலிகள், இதனால் இவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் நண்பர்கள் இருப்பார்கள்.
 • இந்தப் பேச்சே இவர்களுக்கு வினையாக முடிவதும் உண்டு, அதனால் எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்வார்கள்.
 • பகைவர்களும் மயங்கும் வண்ணம் பேசும் ஆற்றல் படைத்த இவர்கள், ஒளிவு மறைவு இல்லாமல் தங்கள்
 • உள்ளத்தில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும் குணம் விட்டுக் கொடுக்கின்ற இளகிய உள்ளம் இவர்களுக்கு உண்டு.
 • நேர்மையாக வாழ்வதற்கு ஆசை அதிகம் கொண்ட காரணத்தினால் தவறு செய்யத் தயங்குவார்கள்.
 • ரோகிணி நட்சத்திரக்காரர்கள் ஒரு விஷயத்தில் மிகவும் அதிருஷ்டசாலிகள். இவர்கள் கட்டுகின்ற வீட்டில் தண்ணீர் பஞ்சம் இருக்காது.
 • இவர்கள் நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்பார்கள்.
 • அடையாளத்திற்கு கூட குளக்கரை வீடு என்றோ, அதோ தண்ணி தொட்டி தெரியுது பாருங்க அதுக்குப் பக்கத்துல தான் நம்ம வீடு என்றோ அடையாளம் காட்டும் விதமாக நீரின் தொடர்பு இவர்களது வாழ்க்கையில் தொடரும்.
 • ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கொஞ்சம் தொலைவு என்றாலும் பரவாயில்லை என்று சொல்லி இவர்கள் சகலவசதிகளோடு இருக்கின்ற வீடுகளையே தேர்ந்தெடுப்பார்கள்.
 • இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மற்றவர்களைக் கவரும் அழகைப் பெற்றவர்கள், மூத்தோர்களை மதிக்கும் குணம் உடையவர்கள், நீங்காத செல்வம் பெற்றவர்கள்.

ரோகிணி நட்சத்திரம் பொதுக்குணங்கள்

-rohini nakshathira characters in tamil 

 • ரோகிணி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் 

செல்வம் மிகுந்தவர்கள், அழகுள்ளவர்கள், அலைச்சல் மிக்கவர்கள், கருமியாகவும், மற்றவர்களுக்குத் துன்பம் தருபவர்களாகவும், குரோத குணம் உடையவர்களாகவும், பொறுமை இல்லாதவர்களாகவும், நோய் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்றும்; 

 • இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் 

கருணை உடையவர்கள், சாந்த குணம் கொண்டவர்கள், ஆசாரம் உள்ளவர்கள், உண்மை பேசுபவர்கள், விரும்பிய பெண்ணை எப்பாடுபட்டாவது மணப்பவர்கள் வாய் சாதுர்யம் உள்ளவர்கள் என்றும்; 

 • ரோகிணி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் 

கணித வித்தையில் வல்லவர்கள், சங்கீத ஞானம் உடையவர்கள், மந்திரங்களில் நாட்டம் மிகுந்தவர்கள், சுகபோகிகள் என்றும்; நாலாம் பாதத்தில் பிறந்தவர்கள் உண்மை பேசுபவர்கள், பிறர் சொத்துக்கு ஆசைப்படுபவர்கள், 

சிற்றின்பத்தில் நாட்டம் உடையவர்கள், எந்த வழியிலாவது சுகபோகங்களை அடைய ஆர்வம் காட்டுபவர்கள் என்றும் கூறுகிறது. 

ரோகிணி நட்சத்திரத்தின் குணநலன்கள் rohini nakshathira characters in tamil ரோகிணி நட்சத்திரம் சிறப்புக்கள் ரோகிணி நட்சத்திரம் பொதுக்குணங்கள் 

ரோகிணி நட்சத்திரம் திருமண வாழ்க்கை 

 • இந்த நட்சத்திரக்காரர்கள் பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் அன்பாலோ, பாசத்தாலோ, காதலினாலோ பெண்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பதைப் பார்க்கலாம்.
 • ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்கள் காதலை எப்பாடுபட்டாவது அடித்துப்பிடித்து நிறைவேற்றிக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் கெடாமல் பாதுகாப்பார்கள்.
 • தங்கள் குழந்தை களுக்கும் சுதந்திரம் கொடுத்து வளர்ப்பார்கள். ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல ஒரு கடையில சூடா ஜிலேபி பிழிஞ்சி குடுக்கிறான். ரெண்டு நாளைக்கு முன்னாலே சாப்பிட்டேன், இன்னிக்கு அந்த வழியா வந்தேன்.
 • உனக்குப் பிடிக்குமேன்னு வாங்கிட்டு வந்தேன் என்று தான் ரசித்து சாப்பிட்டதை குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் வாங்கி வந்து அசத்தும் ரசிகத்தன்மை இவர்களிடம் உண்டு.
 • இவர்களுக்கு முதல் குழந்தை பிறப்பதோ, தங்குவதோ சற்று கடினம் தான். ஆனால் அடுத்துப் பிறக்கும் குழந்தைகள் நல்ல அறிவோடும், அழகோடும் பிறக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தின் குணநலன்கள் rohini nakshathira characters in tamil ரோகிணி நட்சத்திரம் சிறப்புக்கள் ரோகிணி நட்சத்திரம் பொதுக்குணங்கள் 

ரோகிணி நட்சத்திரம் தொழில் 

 • இவர்களில் சிலருக்கு நிர்வாகத்திறமை இல்லாத போதிலும் தொழிலதிபர்களாக இருப்பார்கள்.
 • கவிஞர்களாக வும், எழுத்தாளர்களும் இருப்பவர்கள் முதலாளி தொழிலாளி என்ற பேதம் பார்க்காமல் எல்லோருடனும் இனிமையாகப் பழகுவார்கள், என்ன வாட்ச்மேன் ஊருக்குப் போயிட்டு வந்தீங்களா?
 • பசங்க எப்படிப் படிக்கிறாங்க என்று லிப்டில் போகும் போதே குசலம் விசாரிக்கும் பண்பு நிறைந்தவர்கள். பணவிஷயத்தில் அடிக்கடி ஏற்ற இறக்கங்களை இவர்கள் சந்திப்பார்கள்.
 • அதற்காக பாடுபட்டும் உழைப்பார்கள். நிலைமை சீராவதற்காக இரண்டு மூன்று வேலைகளை ஒரே நேரத்தில் செய்து வருமானம் பெருக்கும் அசகாய சூரர்கள் இவர்கள். வாட்டர் கேன் விற்கும் இடத்தில் நிற்பார்கள்.
 • என்ன மூர்த்தி இந்த இடத்துல? என்று கேட்டால் டூட்டிக்குப் போயி ஐந்து மணிக்கு வந்துட்டா கம்மா வீட்டுல இருக்கோமேன்னு இந்த வேலை செய்யறேன் சார்;
 • நானே கொண்டாந்து போடறேன்; உங்களுக்கு வேணுமினா சொல்லுங்க என்பார்கள். அடேங்கப்பா அசத்திறியே என்றால் புன்னகையோடு கேட்டரிங் கூட ஏற்பாடு செய்யறேன்,
 • பத்து இருபது போனா செஞ்சி குடுத்திடறேன். வீட்டுல சின்ன விசேஷம்னா சொல்லுங்க என்று பிரமிப்பின் உச்சத்திற்குக் கொண்டு செல்வார்கள். சமையல் கலை நிபுணர்களாகவும்,
 • உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் நடத்துபவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கலைகளில் அதிக நாட்டமும் ஈடுபாடும் இருக்கும்.
 • அதோடு இந்த நட்சத்திரம் சகலசம்பத்திற்கும் உரிய சுக்கிரனின் ராசியான ரிஷிபத்தில் வருவதால் ரோகிணியில் பிறந்தவர்கள் எந்தக் கலையாக இருந்தாலும் அதைச் இலபமாகக் கற்றுக் கொள்வார்கள்.
 • கற்பனை உலகில் சஞ்சாரம் செய்வது இவர்களுக்குப் பிடித்தமானது. இசை, நாட்டியம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்வதற்கும், காண்பதற்கும் ஈடுபாடு காட்டுவார்கள்.
 • பொதுவாக உலகப் புகழ் பெற்ற பாடகர்கள், கலைஞர்கள், எழுத்தாளாகள் கவிஞர்கள் நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருப்பதைப் பார்க்கலாம். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் சில நேரங்களில் தங்களுக்குப் பிடிக்காதவற்றைச் செய்ய வேண்டிய,
 • நெருக்கடி  நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள். இதன் காரணமாக இவர்களது உள்ளமும் உடலும் நொந்து போகும். மனஉளைச்சல் அதிமாகும். உடல் சோர்வு தலை தூக்கும்.
 • இது கிரகதோஷம் எனப்படும். இவர்களுக்கு அடிக்கடி ஜலதோஷம், தொண்டைக்கட்டு, கண், மூக்கு ஆகியவற்றில் நோய்கள் உண்டாகும். நடுத்தர வயதில் மூட்டுவலியும் சேர்ந்து கொள்ளும்.
 • ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தல விருட்சமாக நாவல் மரம் சாஸ்திரங்களில் சொல்லப் பட்டுள்ளது. இந்த மரத்தை முறைப்படி நீருற்றி, வணங்கி வந்தால் சகல துன்பங்களும் நீங்கும்.
 • இவர்கள் சில நேரங்களில் தீராத நோயினால் பாதிக்கப்படுவதுண்டு. தோல்விகளைச் சந்தித்து துவண்டு போவதும் உண்டு. தேவையற்ற நண்பர்களினாலும்,
 • வீண் வாக்கு வாதங்களினாலும் வழக்குகளில் மாட்டிக்கொள்வதும் உண்டு. எத்தனை நல்லவராக நடந்து கொண்டாலும் சில நேரங்களில் வீண்பழியைச் சுமப்பதும் உண்டு.
 • இது போன்ற நேரங்களில் இவர்கள் பரிகாரம் செய்து கொள்வது சங்கடங்களைக் குறைத்து, மன அமைதியை ஏற்படுத்தும்.

ரோகிணி நட்சத்திரம் வழிபட வேண்டிய தலங்கள் 

 • கழுகுமலை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு மேற்கே 19 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ஜம்புநாத ஈஸ்வரர், கோயிலில் உள்ள நாவல்மரம்.
 • செங்கல்பட்டு திருப்போரூர் சாலையில் செம்பாக்கத்தில் உள்ள ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்.
 • சென்னைக்கு மேற்கே 10 கிமீ தொலைவில் கொரட்டூரில் அமைந்திருக்கும் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்.
 • திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர். காஞ்சிபுரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ பாண்டவ தூதப் பெருமாள்.

ரோகிணி நட்சத்திரத்தின் குணநலன்கள் rohini nakshathira characters in tamil ரோகிணி நட்சத்திரம் சிறப்புக்கள் ரோகிணி நட்சத்திரம் பொதுக்குணங்கள் 

பாண்டவதூதப் பெருமாள் 

rohini nakshathira characters in tamil இந்தக் கோயில் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு எதிரில் உள்ள சாலையில் அமைந்திருக்கிறது. பெருமாள் பாண்டவ தூதர் என்ற திருநாமத்தோடு, ருக்மணி, சத்யபாமாவுடன் எழுந்தருளி இருக்கிறார். 

ஸ்ரீ கிருஷ்ணர் இந்தத் தலத்தில் 25 அடி உயரத்தில் மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். சந்திரனின் மனதுக்குப் பிடித்த மனைவியாகிய ரோகிணி நட்சத்திரதேவி இந்தத் தலத்திற்கு வந்து பெருமாளைத் தரிசித்து சந்திரனை மணந்து கொண்டாள். 

இவள்தான் ஞானசக்தி, இவளை மணந்த பிறகே சந்திரன் மற்ற நட்சத்திரப் பெண்களை மணந்து கொண்டான். 

தனக்கு ஞானசக்தியைக் கொடுத்து, மனதுக்குப் பிடித்த கணவனையும் அளித்த காரணத்தினால் இத்தலத்துப் பெருமாளை ரோகிணி தினமும் வந்து வழிபடுவதாக தலவரலாறு தெரிவிக்கிறது.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனது ஜென்ம நட்சத்திரம் வருகின்ற நாட்கள், அஷ்டமி திதிகள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகள், எட்டாம் தேதிகள் ஆகியவற்றில் இங்கு வந்து பெருமானைத் தரிசனம் செய்தால் குறைகள் நீங்கப் பெறுவது உறுதி. 

ஸ்தல புராணம் 

பாண்டவர்கள் சூதாட்டத்தில் தங்கள் நாடு நகரங்கள் அரசாட்சி அத்தனையையும் இழந்து பன்னிரண்டு வருட வனவாசமும், ஒரு வருடம் அஞ்ஞாத வாசமும் செய்து முடித்தனர். 

தங்களுக்குச் சேரவேண்டிய நாட்டை திருப்பித் தரும்படியாக துரியோதனனிடம் கேட்பதற்கு ஸ்ரீ கிருஷ்ணனை துது அனுப்பினர். 

கிருஷ்ணரை ஏற்கெனவே வேம்பாக வெறுத்த துரியோதனன் இப்போது பாண்டவர்களுக்குத் தூதனாக அவர் வருவதைக்கண்டு கொதிப்படைந்தான். அவரையும் கொல்வதற்குத் திட்டமிட்டான். 

பல தரைக்கு கீழே ஒரு பாதாள அறையை ஏற்படுத்தி அதில் மல்லர்களை பலவிதமான ஆயுதங்களோடு நிற்க வைத்தான். மேலே ஒரு ஆசனத்தை வைத்து அதில் ஸ்ரீ கிருஷ்ணர் அமரும்படியான ஏற்பாட்டை செய்திருந்தான். 

அவர் அமர்ந்ததும் அந்த ஆசனம் கவிழ்ந்து நிலவறைக்குள் விழும். அங்கே தயாராக இருக்கின்ற வீரர்கள் அவரைக் கொன்று விடுவார்கள் இது தான் திட்டம் தன் உலகையே வாய்க்குள் அடக்கிக்காட்டிய மாயக்கண்ணனுக்கு இது தெரியாதா என்ன? 

அவர் எல்லாம் அறிந்தவர் இருந்தாலும் எதையும் அறியாதவராகவே அங்கு வந்தார். பாண்டவர்களுக்குச் சேரவேண்டிய பங்கை திருப்பித் தரும்படியாகக் கேட்டார். 

இல்லாவிட்டால் போர்தான் என்பதைத் தெரிவித்தார். நாடு நகரங்களை அல்ல அவர்கள் இருப்பதற்கு ஆளுக்கொன்றாக ஐந்து வீடுகளைக் கூட கொடுக்கமாட்டேன்.

அவ்வளவு ஏன் ஊசி முனை அளவு இடம்கூட பாண்டவர் களுக்கு விட்டுத்தர விருப்பமில்லை, போருக்கு நாங்கள் தயார் என்றான் துரியோதனன். பேசிக்கொண்டே அவர் ஆசனத்தில் அமர்ந்தார், 

அது சரிந்து அவரை பாதாள அறைக்குள் தள்ளியது. அங்கிருந்த மல்லர்களைக் கொன்ற ஸ்ரீ கிருஷ்ணர், தனது விஸ்வரூப தரிசனத்தை அனைவருக்கும் காட்டினார். 

பகைவர்கள் கதிகலங்கினர், பக்தர்கள் தொழுதனர். பாண்டவர்களுக்காக தூது சென்ற கிருஷ்ணன் பாண்டவதூதப் பெருமாள் என்று இத்தலத்தில் எழுந்தருளி இருக்கிறார். 

பாரத யுத்தம் முடிந்து வெகுகாலத்திற்குப் பிறகு ஜனமேஜயர் என்ற மகரிஷி வைசம்பாயனர் என்ற முனிவரிடம் பாரதக்கதையைக் கேட்டார். 

ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களுக்காக தூது சென்றபோது விஸ்வரூபம் எடுத்த கோலத்தில் அவரைத் தரிசிக்க வேண்டும் அதற்கு என்ன செய்வது என்று முனிவரிடம் கேட்டார். 

அதற்கு காஞ்சி மாநகரம் சென்று அவரை நோக்கி தவம் செய்வாயாக என்றார் வைசம்பாயனர். ஜனமேஜயர் இத்தலத்திற்கு வந்து கடுமையான விரதத்தோடு தவம் செய்தார். 

அவரது தவத்திற்குப் பலனாக இக்கோயிலில் ஸ்ரீ கிருஷ்ணர் தனது விஸ்வரூப தரிசனத்தை மற்றொரு முறை ஜனமேஜயருக்காகக் காண்பித்து அருள் செய்தார் என்பது வரலாறு. 

இந்த தலத்திற்குச் சென்று எம்பெருமானை வழிபட்டால் ரோகிணி நட்சத்திரக்காரர்களின் சகலவிதமான குறைகளும் நீங்கும். இவர்கள் செல்ல வேண்டிய மற்றொரு கோயிலைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

ரோகிணி நட்சத்திரத்தின் குணநலன்கள் rohini nakshathira characters in tamil ரோகிணி நட்சத்திரம் சிறப்புக்கள் ரோகிணி நட்சத்திரம் பொதுக்குணங்கள் 

திருக்கண்ணமங்கை கோயில் 

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்வதற்குச் செல்ல வேண்டிய கோயில்களுள் முக்கியமானது திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சலப் பெருமாள் கோயில். 

இங்குள்ள தாயாருக்கு அபிஷேகவல்லித் தாயார் என்பது பெயர். இந்த தலம் 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார் இப்பெருமானை 14 பாசுரங்களினால் மங்களாசாசனம் செய்திருக்கிறார். 

பெரும்புறக்கடலை, அடல் ஏற்றினை 

பெண்ணை, ஆணை, எண்இல் முனிவர்க்கு அருள் 

தரும் தவத்தை, முத்தின் திரள்கோவையை, 

பத்தர் ஆவியை, நித்திலத்தொத்தினை, 

அரும்பினை மலரை அடியேன் மனத்து 

ஆசையை அமுதம்பொதி இன்சுவைக் 

கரும்பினைக் கனியை – சென்றுநாடிக் 

கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே ! 

என்பது ஒரு பாசுரம். 

தல வரலாறு 

பாற்கடலைக் கடைந்தபோது அதில் இருந்து காமதேனு, கற்பகவிருட்சம், அமுதகலசம் ஆகியவை வெளிப்பட்டன. இவற்றோடு மகாலட்சுமியும் வந்தாள். 

அவள் இந்த உலகத்திற்கு வந்ததுமே பார்த்த முதல் ஆடவன் பெருமாள் தான். அவரது அழகான அமைதியான தோற்றம் அவளுடைய மனத்தை ஈர்த்தது. அந்த ரூபத்தை மனத்தில் வைத்து இந்தத் தலத்திற்கு வந்து தியானம் செய்தாள். 

அவளது விருப்பம் அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான். எம்பெருமானும் அவளை மணம் செய்து கொள்ள விரும்பி ஒரு நல்ல முகூர்த்தநாளைக் குறித்து தனது மெய்க் காவலரான விஷ்வக்சேனரை அனுப்பிவைத்தார். 

இந்தத் தலத்திற்கு வந்து முகூர்த்தத் தேதியைத் தெரிவித்தார். பொதுவாக எல்லா கோயில்களிலும் விஷ்வக்சேனருக்கு நான்கு கரங்கள் இருப்பதுண்டு. 

இந்தத் தலத்தில் மட்டும் அவர் பெருமாளின் தகவலைச் சேர்க்கும் அஞ்சல்காரராக வந்த காரணத்தினால் இரண்டு கரங்களோடு அருள்பாலிக்கிறார். 

மகாலட்சுமித் தாயாரை எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் இந்த தலத்தின் திருக்குளத்து நீரால் அபிஷேகம் செய்து பட்டமகிஷி ஆக்கியதால் தாயாருக்கு அபிஷேகவல்லித் தாயார் என்று பெயர் ஏற்பட்டது. 

மகாலட்சுமி தவம் இயற்றிய காரணத்தினால் லஷ்மிவனம் என்று போற்றப்படும் இத்தலத்தில் மகாவிஷ்ணு, லட்சுமி கலியாண வைபவத்தைக் கண்டு கதிமோட்சம் பெறுவதற்காக முப்பத்து முக்கோடி தேவர்களும், 

பிரம்மா, சிவன் ஆகியோரும் வந்தனர். திருமணம் இந்தத் தலத்தில் கோலா கலமாக நடைபெற்றது. ஆகவே இத்தலம் கிருஷ்ணமங்கள க்ஷேத்திரம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 

இந்த தலத்தில் தான் நாதமுனிகளின் சீடரான திருக்கண்ணமங்கையாண்டான் என்பவர் பிறந்து வளர்ந்தார். பெருமாளின் மீது அளவுகடந்த பக்தியோடு வாழ்ந்தார். 

எப்போதும் எம்பெருமானின் நினைவாகவே இருந்தார், கோயிலைச் சுத்தம் செய்து அங்கேயே உண்டு, உடுத்து, வாழ்ந்தார். ஒருநாள் வேதபாராயணம் செய்து கொண்டே நாய்வடிவம் பெற்று திடுதிடுவென கருவறைக்குள் புகுந்தார். 

அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்க அவர் எம்பெருமான் திருவடிகளில் ஜோதிவடிவத்தில் கலந்து விட்டார். இன்றும் ஆனிமாதம் திருவோண நட்சத்திரம் இவரது ஜென்ம நட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறது.

பரிகாரத்தலம்  

சந்திரன் ஒருமுறை தனது சபலபுத்தியால் குருபத்தினி போடு தகாத உறவு கொண்டதால் குருவின் சாபத்தை அடைந்து தனது கலைகளை இழந்து வருந்தினான். 

திருக்கண்ணமங்கை சென்று அங்குள்ள புஷ்கரணியில் நீராடி, பக்தவச்சலப் பெருமாளைத் தரிசித்தால் பாவம் நீங்கும், இழந்த பிரகாசம் திரும்பவரும் என்று பிரம்மதேவன் சாபவிமோசனத்திற்கு வழிகாட்டினார். 

வாமன இங்குள்ள திருக்குளம் மிகவும் புனிதமானது. பகவான் அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் யாசித்தார். அவனும் கொடுத்தான். 

உடனே வாமனர் பிரம்மாண்டமாக மூதண்டகூட முகடு முட்ட வளர்ந்து திரிவிக்கிரமன் அவதாரம் எடுத்து மூவுலகங்களையும் இரண்டு அடியினால் அளந்து கொண்டார். 

அப்போது அவரது பாதம் பிரம்மதேவன் வசிக்கும் சத்யலோகத்தின் அருகே வந்தது. அவன் தனது கமண்டல நீரால் அவரது பாதங்களைப் புனிதநீராட்டி மகிழ்ந்தான். 

அதில் இருந்து சில துளிகள் தெறித்து பூமியில் விழுந்தது. அதுவே திருக்கண்ணமங்கை திருக்குளம் என்று ஸ்தல புராணம் கூறுகிறது. இப்படிப்பட்ட பெருமையும், புனிதமும் கொண்ட திருக்குளத்தில் நீராடி சந்திரன் குருவின் சாபத்தைப் போக்கிக் கொண்டான். 

தரிசனப் பலன்கள் ரோகிணி நட்சத்திரம் 

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருக்கண்ண மங்கை தலத்திற்குச் சென்று, தர்சன புஷ்கரணி என்ற அந்தத் தீர்த்தத்தில் நீராடி பக்தவச்சலப் பெருமாளைத் தரிசனம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களது குறைகள் விலகும்.

தெரிந்தோ தெரியாமலோ நாம் தினந்தோறும் அடுக்கடுக்காகப் பாவங்களைச் செய்கிறோம். ஒரு ஜாண் வயிற்றுக்காக மற்றவர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறோம். 

அடுத்தவர் மனத்தை நோகச் செய்து நமது வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறோம். இது மற்றவர்களுக்குத் தெரியாது என்று நினைத்து ஆறுதல் அடைகிறோம். 

ஆனால் இதன் கர்மபலன் . நம்மைச் சுற்றும் போது நினைத்த காரியங்கள் நடைபெறாமல் அவதிப்படுகிறோம். விரும்பிய பதவி உயர்வு கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். 

தொல்லைகளும், துன்பங்களும் தாக்கும் போது ஓ என மனத்திற்குள் கதறி அழுகிறோம். இது போன்ற பிரச்சனை களில் சிக்கும் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் 

இந்தத் தலத்திற்குச் சென்று ஒருநாள் இரவு தங்கி, புஷ்கரணியில் நீராடி, பெருமாளைத் தரிசனம் செய்தால் அனைத்து தொல்லைகளில் இருந்தும் நிச்சயமாக விடுபடலாம் rohini nakshathira characters in tamil.

புனர்பூசம் நட்சத்திரத்தின் ஆண் குணநலன்கள்

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button