நட்சத்திரம் குணங்கள்

பூச நட்சத்திரத்தின் குணநலன்கள்

ராசி அளிக்கும் பூச நட்சத்திரம் 

சிறப்புக்கள் 

பூச நட்சத்திரத்தின் குணநலன்கள் pushya nakshatra characters in tamil சிறப்புக்கள் சிறப்பம்சம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய  

pushya nakshatra characters in tamil பூச நட்சத்திரம் கடகராசிக்கு உரியது. ராசி அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரத்திற்கு அதிதேவதை குருபகவான். பரிகாரத்திற்கு உரிய மரம் அரசமரம். இந்த நட்சத்திரம் குரு பார்வை பெற்றது. 

குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும். அரச மரத்தை தலமரமாகப் பெற்ற இடங்களிலும். அரசமரங்களின் அடியிலும் இவர்கள் ஜெபம் செய்தாலும், பிரார்த்தனைகள் செய்தாலும் நல்ல பலன்கள் கிடைக்கும். மரங்களுக்கு எல்லாம் அரசன் அரசமரம். 

அதுபோல கிரகங்களுக்கு எல்லாம் தலைவர் குருபகவான். நவக்கிரகங்களில் பிரகஸ்பதியான வியாழனும், தேவர்களுக்கும் தெய்வங் களுக்கும் குருவான தட்சிணாமூர்த்தியும் இந்த நட்சத்திரத்தின் அதிபதி. இவர்களுடைய ராசிக்கல் நீலம். 

பெயருக்கு உரிய முதல் எழுத்துக்கள் – pushya nakshatra characters in tamil

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஹீ, ஹே, ஆகிய முதல் எழுத்துக்களைக் கொண்ட பெயர்களைச் சூட்டினால் அதிக நன்மைகள் பெறலாம். 

ஹோ, டா ஆண் குழந்தைகளுக்கு ஹேமந்த குமார், ஹேமசந்திரன் என்பது போன்ற பெயர்களையும் பெண் குழந்தைகளுக்கு ஹேமா, ஹீரா, ஹேமாவதி போன்ற பெயர்களையும் வைக்கலாம். பூச நட்சத்திரக்காரர்கள் குரு பகவான் உருவம் பதித்த  டாலரையோ அல்லது மோதிரத்தையோ அணிந்து கொண்டால் பலவகையான மேன்மைகள் உண்டாகும். 

குரு பகவானுக்கு ஏற்ற வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பதும், தட்சிணாமூர்த்தி அஷ்டகம் சொல்வதும், அவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் மேலும் கூடுதல் பலன்களைத் தரும். 

பொதுக்குணங்கள் – pushya nakshatra characters in tamil 

 • இவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள், எதிரிகளை எளிதாக வீழ்த்தும் ஆற்றலும், திறமைகளும் பெற்றவர்கள்.
 • மிகுந்த பொறுமையோடும், நிதானத்தோடும் வாழ்க்கை நிகழ்வுகளை அணுகுவது இவர்களது தனித்தன்மை.
 • பெற்றோர்களை அதிகம் நேசிக்கும் இவர்கள் நட்புக்கும் முன்னுரிமை கொடுக்கும் குணம் கொண்டவர்கள்.
 • தன்னம்பிக்கை கொண்ட இவர்கள், வாழ்க்கையின் எந்தச் சவாலையும் எளிதாகச் சமாளிக்கும் திறன் கொண்டவர்கள்.
 • இவர்கள் பசி பொறுக்கமாட்டார்கள் மற்றவர்களின் விமர்சனங்களையும் தாங்க மாட்டார்கள். பெரியவர்களிடம் மரியாதையோடு பழகுவதும், பேசுவதும் இவர்களது  தனிப்பண்பு.
 • வாசனைப் பொருட்களின் மீது பிரியம் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகானவர்கள்.
 • வீடு வாசல் பங்களா என்று வசதியோடு வாழ்பவர்கள். நம்ம கல்பனாவோட ரிசப்ஷனுக்கு போயிருந்தப்போ, வசந்தி ஒரு சென்ட் போட்டுக்கிட்டு வந்தா பாரு, சான்சே இல்லே, அவ்வளவு சூப்பரா இருந்தது. விசாரிச்சேன் அவங்க பெரியண்ணன் கத்தார்லேந்து கொண்டு வந்தாராம்.
 • எவ்வளவு விலையானாலும் பரவாயில்லே எனக்கும் ஒண்ணு வாங்கி வரச்சொல்லுன்னு சொல்லி இருக்கேன் என்று பேசும் பெண்கள் அநேகமாக பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.
 • ஆடம்பரமாக இருப்பதை விரும்பும் இவர்கள் வைராக்கியம் அதிகம் உடையவர்கள். கவலைகளைக் கண்டு பயப்படாமல் அதைத் துணிவோடு எதிர்க்கும் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள்.
 • என்ன செய்வாரு? மிஞ்சி மிஞ்சி போனா மெமோ கொடுப்பாரு. கொடுக்கட்டும் பாத்துக்கலாம். அதுக்கெல்லாம் பயந்துகிட்டு அவருக்கு ஆமாஞ்சாமி போடமாட்டான் இந்த குமார் என்று பேசுபவர்கள் பூச நட்சத்திரக்காரர்கள்.
 • விரைவில் எந்த முடிவையும் எடுப்பதற்குத் தயங்கும் இவர்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள். இவர்களது எண்ணம் எப்போதும் சுயநலத்தோடு கலந்தே வெளிப்படும்.
 • பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உள்ளம் நினைப்பதை மறைத்து தங்கள் கருத்துக்களை வேறுவிதமாக வெளிப்படுத்துவதில் வல்லவர்கள். இதன் காரணமாக இவர்களின் மனத்தில் ஒரு கருத்து மோதல் எப்போதும் இருந்து வரும்.

ஜோதிட சாஸ்திரம் இவர்களைப் பற்றி – pushya nakshatra characters in tamil 

பூசம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் 

கோபமுடையவர் உடையவர்கள் மற்றவர்களை புத்திசாலித்தனம் உடையவர்கள் என்றும், எடுத்தெறிந்து பேசுபவர்கள், வயிற்று நோய் கொண்டவர்கள்,தீர்க்கமான ஆயுள்  உடையவர்கள், 

இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் 

எந்தக்காரியத்தை யும் தடுப்பவர்கள், மக்களுக்குத் துன்பம் கொடுப்பவர்கள், நிதானம் மிகுந்தவர்கள், வெளிநாட்டினரிடம் நட்பு கொள்பவர்கள், அள்ளிக் கொடுப்பவர்கள் என்றும், 

மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் 

சுற்றத்தாருக்கு இனியவர்கள், மகிழ்ச்சியில் நாட்டம் உடையவர்கள், சத்வகுணம் மிகுந்த ஞானிகள், மிருகங்களிடம் பாசம் உடையவர், தன்னைச் சுற்றி இருப்பவர்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்றும், 

நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் 

சண்டைக்காரர்கள், கோபம் உடையவர்கள், பெண்களிடம் அன்பு கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கின்றன. 

திருமண வாழ்க்கை – pushya nakshatra characters in tamil

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வார்கள். மிகவும் அடங்கிப் போகும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதன் காரணமாக அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாவார்கள். மிகுந்த நேர்மையும், நேசிப்பும் கொண்டவர்கள் . 

ஆன்மீக ஈடுபாடு அதிகம் இருக்கும். கடவுளுக்குப் பயந்து வாழ்வார்கள். அடிக்கடி தனிமையை விரும்பும் குணம் கொண்டவர்கள். குடும்பத்தில் என்னுடைய அதிருஷ்டமே இதற்குக் காரணம் என்று எந்த நல்லது நடந்தாலும் என்னால் தான் நடந்தது, பேசுவார்கள். 

பூச நட்சத்திரக்காரர்கள் காதலித்தாலும் கைபிடிப்பது வேறொருவராக இருப்பதைக் காணலாம். பெண்கள் தங்கள் கணவரின் கையைக் கோர்த்துக் கொண்டும். 

இளவயதில் நடுத்தர வயதில் கையை பிடித்துக் கொண்டும் நடப்பதற்கு விரும்புவார்கள். இவர்களுக்குத் தாம்பத்தியத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். இருந்தாலும் அதைக் கட்டுப்படுத்தி, மறைத்துக் கொண்டு கௌரவமாகவும், கூட்டுக் குடும்பமாகவும் இருப்பதற்கே விரும்புவார்கள். 

காய்ச்சல் அடிக்குதா டல்லா இருக்கீங்களே கிட்டவாங்க என்று கணவனை அருகில் இழுத்து பலபேர் இருக்கும் இடத்தில் கூட கணவருக்கு காய்ச்சல் அடிக்கிறதா என்பதை சங்கோஜம் இல்லாமல் கழுத்தில் நெற்றியில் கைவைத்துப் பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்வார்கள். 

குடும்பத்திற்காக உழைப்பதை பெருமையாக எண்ணுவார் கள். தங்களுக்குக் கிடைத்ததை மற்றவர்களுக்குப் பங்கு வைத்துவிட்டே பிறகு எடுத்துக் கொள்ளும் தயாள குணம் கொண்டவர்கள். 

சொத்து பிரிக்கும் போது கூட சகோதர சகோதரிகளுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் இவர் களுக்கு உண்டு. 

தொழில் – pushya nakshatra characters in tamil 

பொதுவாக பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பதினைந்து வயது வரையில் வறுமையில் வாடுவதைப் பார்க்கலாம். அது வசதிக்குறைவான வறுமையாகவோ, கல்விக்குறைவான வறுமையாகவோ இருக்கும். 

சிலருக்கு பாசம் அன்பு போன்றவை கிடைக்காமல் ஏங்கும் வறுமையாக இருக்க வாய்ப்பு உண்டு. இந்த நட்சத்திரக்காரர்கள் தொழில் செய்வதற்கோ அல்லது சம்பாதிப்பதற்கோ குடும்பத்தைப் பிரிந்திருப்பதை பார்க்கலாம். 

இவர்கள் பிறரு முன்னேற்றம் காண்பார்கள். கெட்டதும் கொண்ட வாழ்க்கையை அனுபவித்து அதற்குப் வயது வரையில் நல்லதும் உணவு விடுதிகள் நடத்துவது, பல்பொருள் அங்காடி உத்துவது போன்ற தொழில்கள் வளம் தரும். 

பல் மருத்துவம், பருப்பு மண்டி, பிளம்பிங் தொழில், பத்திரிக்கைத் தொழில், நிலத்தடி சுரங்க ஆராய்ச்சி, யோகா கற்றுத் தருதல் போன்ற தொழில்களை மேற்கொண்டால் வருமானம் பெருகும். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிகவும் நம்பிக்கைக்கு உரிய தொழிலில் ஈடுபட்டு நல்ல பெயரும், வருமானமும் பெறுவார்கள். மற்றவர்களின் நம்பிக்கையை மூலதனமாக வைத்து செய்யப்படும் 

தொழில்களில் இவர்கள் நட்சத்திரமாக ஜொலிப்பார்கள். விவசாயம், விவசாயம் தொடர்பான தொழில்கள், நிலம் சம்பந்தப்பட்ட வியாபாரம் ஆகியவற்றில் இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சிறந்து விளங்குவதைக் காணலாம். 

இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனிபகவான் என்பதால் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பது வாங்குவது, கப்பல் தொடர்பான தொழில், கருப்பு நிற பொருட்களை விற்பது, வாங்குவது, குளிர்பானங்கள் தயாரித்து விற்பது போன்ற தொழில்கள் கைகொடுக்கும். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலங்கள் 

 1. திருச்சேறை சாரநாதப் பெருமாள் விளங்குளம் அட்சயபுரீஸ்வரர், 
 2. புதுக்கோட்டை ஒழுந்தியாப்பட்டு அரசலிநாதர் – விழுப்புரம் மாவட்டம்; திண்டிவனம் புதுச்சேரி சாலை 
 3. ஆவூர்  பசுபதீஸ்வரர் – தஞ்சை மாவட்டம், குடந்தை திருக்கருகாவூர் சாலை 
 4. கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் திருவாரூர் மாவட்டம், குடந்தை காரைக்கால் சாலை 
 5. பரிதிநியமம் பருத்தியப்பர் தஞ்சை மாவட்டம், ரத்தநாட்டுக்கு வடக்கே 4 கிமீ 
 6. திருச்சுழி திருமேனிநாதர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகில் 
 7. அழகர் கோயில் – பரமசுவாமி மதுரை மாவட்டம், மதுரைக்கு வடகிழக்கில் 20 கிமீ. 

அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில் குச்சனூர். திண்டுக்கல் தேனி கம்பம் சென்று அங்கிருந்து குமுளி செல்லும் பாதையில் சின்னமனூரில் இறங்கி குச்சனூரை அடையலாம். இங்கு சனீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார். 

இப்போது இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய முக்கியமான தலமான பருத்தியப்பர் ஆலயம் பற்றி அறிந்து கொள்வோம். 

பருத்தியப்பர் ஆலயம் 

தஞ்சாவூரில் உள்ள மேதவூரில் உள்ள மங்களாம்பிகை உடனுறை பருத்தியப்பர் ஆலயம் சூரிய குலத்தில் தோன்றிய சிபிச்சக்கரவர்த்தியால் இந்த ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டது. 

அவரால் இந்த ஆலயம் ஈடும் எடுப்பும் இல்லாத வகையில் மிகச் சிறப்பான முறையில் கட்டப்பட்டது. பரிதி என்பது சூரியனைக் குறிக்கும். இங்கே இறைவன் சூரியனாக இருப்பதோடு, சூரியனால் வணங்கவும் படுகிறார். 

ஆகவே பெற்றிருக்கிறார். பரிதியப்பர் என்ற திருநாமம் சூரிய பகவான் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 18. 19 20 ஆகிய தேதிகளில் தன் கதிர்களினால் அபிஷேகம் செய்வதைப் போல சிவலிங்கத்தின் மீது சூரிய வெளிச்சம் பரவுகிறது. 

மூலவர் பரிதியப்பரின் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தியின் பின்னால் சூரிய பகவான் நின்ற நிலையில் இருந்து சிவபெருமானை பக்தியோடு வழிபடுவதைப் பார்க்கலாம். 

இந்தத் தலத்ததில் தான் சூரியனுக்கு தோஷம் நிவர்த்தியானது. ஆகவே பிதுர்தோஷ நிவர்த்தி காரியங்களை இந்தத் தலத்தில் செய்வது விசேஷம். தமிழ் மாத வளர்பிறையில் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில், இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனை தரிசித்தால் அவர்களுக்கு உள்ள சூரிய கிரகத்தினால் ஏற்பட்ட தோஷம் விலகும். 

கோயிலின் பின்னால் உள்ள சந்திர தீர்த்தத்திலும், முன்னால் இருக்கும் சூரிய தீர்த்தத்திலும் நீராடும் பக்தர்கள் பலவகையான தோஷங்களில் இருந்தும், உடல் நோய்களில் இருந்தும் விடுபடுகிறார்கள். 

மேலும் நீராடும் பக்தர்களின் நாட்பட்ட சரும நோய்கள் படிப்படியாகக் குறைந்து வருவதையும் காணமுடிகிறது. 

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய மற்றொரு முக்கிய தலம் கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் ஆலயம் நாகபட்டினம் மாவட்டம், குடந்தை காரைக்கால் சாலை தீராத நோய் தீர்த்த இறைவன் ஒரு காலத்தில் புரூரவஸ் என்ற மன்னனுக்கு தொழுநோய் ஏற்பட்டது. 

அளவுக்கு மிஞ்சிய மாதர் போகத்தில் ஈடுபட்ட காரணத்தினால் அவனுக்கு இந்த தோல் தைபட்டது என்ற சொல்லிய வைத்தியர்கள் தங்களால் டேத்த லெவங்க வைத்தியம் செய்தனர். 

அரசனும் தன் தவறை உரைத்து கட்டுப்பாடு ஒழுக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து சில எடுக்கும் கொண்டான். ஆனால் வருடங்கள் பல கடந்தும் கூட உடனே இறைவனை சரண் அடைந்தான். 

ஊர் ஊராகச் சென்று அங்கே கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கின்ற ஈசனை தரிசனம் செய்து தனது தீராத நோயைத் தீர்க்கும்படியாக வேண்டினான். 

பல தலங்களுக்குச் சென்ற மன்னன், நோய் தீராத நிலையில் கோனேரிராஜபுரத்தில் உள்ள உமாமகேஸ்வரர் ஆலயம் வந்து எம்பெருமானைத் தரித்தான். ஆச்சரியப்படும் விதமாக சில நாட்களிலேயே நோய் தீர்ந்தது. இதனால் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்த மன்னன் சிவசந்நிதி இருக்கின்ற கோபுரத்தை பொன்தகடு கொண்டு மூடினான் என்று தலவரலாறு தெரிவிக்கிறது. 

மேலும் வருடாவருடம் வைகாசி மாதத்தில் விசாக தினத்தன்று திருவிழா நடைபெறவும் ஏற்பாடுகள் செய்தான். 

சிறப்பம்சம் 

வரகுண பாண்டியன் என்ற மன்னன் ஆசைப்பட்டான் பேரில் சிவபெருமானும், பார்வதி தேவியும் பஞ்ச லோகத்தினால் உருகிய குழம்பைக் குடித்து காயு மூர்த்தியாக நடராஜர் சிவகாமி சமேதராகக் காட்சி கொடுக்க தலம் இது மதுரை, 

உத்தரகோசமங்கை கோவேரிராயுரம் அயே மூன்று தலங்களிலும் நடராஜப் பெருமான் திருவி உலா நடைபெறுவதில்லை. 

இத்தலத்தில் எழுந்தருளி உள்ள பிரம்மாண்டமான நடராஜருக்கு மனிதருக்கு இருப்பதைப் போலவே ரோமம் மச்ச ரேகை நகம் ஆகிய அனைத்தும் அமைத்திருப்பது பார்த்துப் பார்த்து ரசிக்க வேண்டிய அம்சங்களில் ஒன்று. 

இத்தலத்தில் உள்ள இறைவன் நாலரை அடி உயர சயம்பு மூர்த்தியாக தரிசனம் தருகிறார். ஒரே கொப்பில் தளம் உள்ள வில்வ இலை கோயில் தலவிருட்சமாக உள்ளது

இறைவனைத் தரிசித்தால் 

இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வணங்கி சகலவிதமான சரும நோய்களும் நீங்கும். நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தால் தோஷநிவர்த்தி ஏற்படும். வெண்குஷ்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களும், 

வேறு பலவிதமான தோல் நோய்களினால் அவதிப்படுபவர்களும் இத்தலத்து இறைவனை மனமுருகி வேண்டி வழிபட்டால் நன்மைகள் அடையலாம். 16 சித்தர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டு ஆன்மிக முன்னேற்றம் பெற்றுள்ளனர். 

பார்வதி தேவியை பெருமாள் சிவபெருமானுக்குத் தாரை வார்த்து கொடுக்க சிறப்பாக நடந்தேறிய திருமணத்தை அகத்திய முனிவர் இத்தலத்தில் தரிசனம் செய்திருக்கிறார். 

மேலும் பூமாதேவி இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டு இருப்பதால் இறைவனுக்கு பூமிநாதர் என்ற திருநாமம் உண்டு. பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீடு கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது நிலம் வாங்கி, 

விற்பதில் பிரச்சனை ஏற்பட்டாலோ இத்தலத்துக்கு வந்து இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டால் பிரச்சனைகள் தீரும். நீண்ட காலமாக குழந்தைப்பேறு வாய்க்காமல் கவலைப் படுபவர்கள், 

திருமணம் தடைப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானவர்கள், தொழில் முடக்கம் உடையவர்கள், முன்னேற முடியாமல் திணறுபவர்கள், படித்துவிட்டு நல்லவேலை கிடைக்காமல் அவதிப்படுபவர்கள், 

திங்கட் கிழமைகளில் விலகி, நன்மைகள் உண்டாகும். மேலும் வசதி இருப்பவர்கள் இறைவனைத் தரிசித்து அபிஷேகம் செய்தால் தோஷங்கள் சிவனுக்கும் பார்வதிக்கும் அபிஷேகம் செய்து வசுதரா என்ற யாகத்தை செய்தால் பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம். 

திரிபுர சம்ஹார மூர்த்தி இந்த ஆலயத்தில் தனியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 

அவரை தேய்பிறை அஷ்டமி அன்றோ அல்லது பூச நட்சத்திரத்து அன்றோ இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபாடு செய்தால் எதிரிகளினால் ஏற்பட்ட தொல்லைகளும், மரண பயமும் நீங்கும். இக்கோயிலில் உள்ள சனி பகவானை வணங்கினால் சனிக்கிரகத்தினால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். 

மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் குணநலன்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button