Saturday, July 2, 2022
Homeராசி குணங்கள்புனர்பூச நட்சத்திரத்தின் குணநலன்கள்

புனர்பூச நட்சத்திரத்தின் குணநலன்கள்

புண்ணியம் சேர்க்கும் புனர்பூச நட்சத்திரம்

சிறப்புக்கள் 

புனர்பூச நட்சத்திரத்தின் குணநலன்கள் punarpoosam nakshatra characters in tamil பொதுக்குணங்கள் திருமணவாழ்க்கை தொழில் வழிபட வேண்டிய பரிகாரத்தலம் 

punarpoosam nakshatra characters in tamil புண்ணிய பலன் மிகுந்தவர்களே புனர்பூச நட்சத்திரத்தில் பிறப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை அதிதீ என்பது. இந்த நட்சத்திரத்தில் ஜனித்தவர்கள் செல்லவேண்டிய பரிகாரத்தலம் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம், திருப்பாசூர் பாசூர்நாதர் சந்நிதி மற்றும் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயம் ஆகியவை. 

இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்களுக்கு மிதுனராசியும், நான்காம் பாதத்திற்கு கடகராசியும் உரியது. மிதுனத்திற்கு ராசி அதிபதி புதன், அவ்வாறே கடகத்திற்கு அதிபதி சந்திரன். பரிகார விருட்சம் மூங்கில் மரம் 

பெயருக்கு உரிய முதல் எழுத்துக்கள் 

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு வைக்கவேண்டிய பெயர்களின் முதல் எழுத்துக்கள் கோ கே மற்றும் ஹே ஆகியவை. ஆண் குழந்தைகளுக்கு கோபாலன், கோகுல், கோவேந்தன், ஹரிஹரன், ஹரிகேசன், ஹரிசேகரன், ஹரிகிருஷ்ணன் போன்ற பெயர்களை வைக்கலாம். 

பெண் குழந்தைகளுக்கு கோகிலா, கோகிலவாணி, கோகுலா, ஹம்சவேணி, ஹரிப்பிரியா போன்ற பெயர்களை சூட்டினால் வாழ்க்கை செழிப்பாகும். 

இவர்கள் சூரியனின் உருவம் பதித்த மோதிரத்தையோ அல்லது டாலரையோ அணிந்து கொண்டால் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவது நிச்சயம். 

மேலும் இவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்ரீ ஆதித்ய ஹிருதய ஸ்லோகங்களைப் பாராயணம் செய்தாலோ அப்படிச் செய்ய முடியாதவர்கள் அந்த பாடல்களை இசைத்தட்டு மூலமாக கேட்டுவந்தாலோ இன்னல்கள் நீங்கும். 

வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படும். இவர்களுடைய நட்சத்திரக்கல் புஷ்பராகம். 

பொதுக்குணங்கள் – punarpoosam nakshatra characters in tamil

இவர்கள் சுறுசுறுப்பானவர்கள், மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் பழகுவதும், உதவி செய்வதும் இவர்களின் சிறப்பான குணம். பணம் செலவழிப்பதில் சிக்கனமாக இருப்பார்கள். 

தேவையில்லாமல் எதையும் வாங்குவதற்கு விரும்பாதவர்கள். அவசியமானால் ஆயிரம் ரூபாய் செலவழிக்கலாம், வீண் ஆடம்பரத்திற்காக ஐந்து ரூபாய் கூட செலவழிக்கக் கூடாது என்ற கொள்கை உடையவர்கள்.

சாதுர்யமாகவும், சமயோசிதமாகவும் நடந்து சிக்கல்களைத் தீர்ப்பதில் வல்லவர்கள். இவர்கள் கல்வியில் ஆர்வம் கொண்டவர்கள், சிலர் கடின உழைப்பை விரும்புவார்கள். 

மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு வாழ்க்கையை நடத்துபவர்கள் கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பதற்குத் தயங்காதவர்கள். பொய் பேச ஆர்வம் காட்டாதவர்கள். 

மனத்தில் இருப்பதை நேரடியாக வெளிப்படுத்தாமல் சுற்றி வளைத்துப் பேசுவதில் சமர்த்தர்கள். அடுத்த சனிக்கிழமை ஏதாவது புரோகிராம் வெச்சிருக் கீங்களா? இல்லையே, 

வீட்டுல ஏதாவது வேலை இருக்குதா? அதெல்லாம் ஒண்ணும் இல்லே, சும்மாத்தான் இருப்பேன் அப்படின்னா நான் காஞ்சிபுரம் போறேன், எங்கட வர்றீங்களா என்று கொக்கி போடுவார்கள். 

அவருக்கு இஷ்டம் இல்லாவிட்டால் கூட, வேலை இருக்கிறது என்று சொல்லி தப்பமுடியாமல் முதலில் அது குறித்த விவரங்களைத் தெரிந்து கொண்டு தூண்டில் போடுவது இவர்களுக்குக் கைவந்த கலை. 

பாவம் நண்பர் என்ன சொல்லி தப்பிக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார். அடுத்தமுறை இவருடன் உரையாடும் போது வார்த்தைகளை சர்வ ஜாக்கிரதையாக வெளியிடுவார். 

புனர்பூசத்தில் பிறந்தவர்கள்; பிரயாணங்களில் ஆசை கொண்டவர்கள். தெய்வீக விஷயங்களில் நம்பிக்கை உடையவர்கள், 

கடவுள் பக்தியும், மகான்கள் மீது அதிக மரியாதையும் கொண்டவர்கள். மகான்களின் தரிசனத்தை அதிகம் விரும்புவார்கள். ஆசிரியர்களிடம், குருவிடம் மிகவும்

பணிவோடு நடந்து கொள்வார்கள். அதே நேரத்தில் தவறான கருத்து தெரிவித்தால் அதை அங்கேயே சுட்டிக்காட்டும் துணிச்சல் மிகுந்தவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அழகும் அடக்கமும் கொண்டவர்கள். 

மனதுக்குப் பிடித்த கணவனை அடைந்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள். புகுந்த வீட்டில் சுபிட்சத்தை கொண்டுவருவார்கள். சுயகௌரவம் மிகுந்தவர்கள். 

ஜோதிட சாஸ்திரம் இவர்களைப் பற்றி 

punarpoosam nakshatra characters in tamil புனர்பூசம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் பருமனான உள்ளவர், அலட்டிக் கொள்பவர்கள், போகத்தில் நாட்டம் உடையவர்கள், காதுகேளாதவர்கள், பெண்போகத்தில் கொண்டவர்கள், 

பன்றி மயிர் போலும் ரோமம் உடையவர்கள் என்றும். உடல் இச்சை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் பித்தம் சேர்ந்த உஷ்ண தேகம் கொண்டவர்கள், 

சோம்பேறித்தனம் மிகுந்த வர்கள், ஆசாரம் இல்லாதவர்கள், தூக்கத்தில் விருப்பம் கொண்டவர்கள் என்றும், மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் குஷ்டரோகி, துறவிகள், அலைச்சல் உடையவர்கள், காவியங்களில் நாட்டம் இல்லாதவர்கள், பல்வியாதி உடையவர்கள், 

நீண்ட ஆயுள் கொண்டவர் என்றும், நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் அழகானவர்கள், உயரம் குறைந்தவர்கள், நல்ல செயல் செய்பவர்கள், பார்வை இலட்சணம் அறிபவர் என்று தெரிவிக்கின்றன. 

புனர்பூச நட்சத்திரத்தின் குணநலன்கள் punarpoosam nakshatra characters in tamil பொதுக்குணங்கள் திருமணவாழ்க்கை தொழில் வழிபட வேண்டிய பரிகாரத்தலம் 

திருமணவாழ்க்கை – punarpoosam nakshatra characters in tamil

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் செய்வதையும், காதலிக்கப்படுவதையும் விரும்புவார்கள். ஆனால் காதலில் ஏற்படும் தடைகள், பிரச்சனைகள் ஆகியவற்றைக் கண்டு 

அதை விட்டுக்கொடுத்து பெற்றோர் பார்க்கும் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ மாலை சூட்டுவார்கள். 

இவர்கள் குடும்பமானம், அப்பாவின் மரியாதை ஆகியவற்றுக்காக தங்கள் சுகபோகங்களைத் தியாகம் செய்வதற்குத் தயங்காத தீரர்கள். புனர்பூச நட்சத்திரக்காரர்கள் ஆடம்பரப் பிரியர்கள் அல்ல, மிகவும் எளிமையானவர்கள். 

அதனால் சிக்கனம் என்ற பெயரில் கருமித்தனம் ஒட்டிக் கொண்டிருக்கும். வீட்டுச் சமையலில் கூட, சாம்பார், ரசம் இரண்டும் வேண்டாம், ஏதாவது ஒன்று போதும் என்பார்கள். 

ஆனாலும் மனைவி, பிள்ளைகளின் தேவைகளை அறிந்து கொண்டு செலவு செய்வார்கள். தங்கள் சுகத்தை விட குடும்பத் துணையின் சுகமும், பிள்ளைகளின் ஆசையுமே இவர்களின் முக்கியக் குறிக்கோளாக இருக்கும். 

எனவே குடும்பத்தில் நல்ல பெயரைச் சம்பாதிப்பார்கள். இவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். 

புனர்பூச நட்சத்திரத்தின் குணநலன்கள் punarpoosam nakshatra characters in tamil பொதுக்குணங்கள் திருமணவாழ்க்கை தொழில் வழிபட வேண்டிய பரிகாரத்தலம் 

தொழில் 

இவர்கள் உயர்பதவிகளை நிர்வாகம் செய்யும் ஆற்றல் மிகுந்தவர்கள். ஆகவே யாருக்கும் கீழே பணிபுரிவதை விரும்பமாட்டார்கள். பணிந்து வேலை செய்யும் நேரங்களில் எலியும் பூனையும் போல ஒரு பொருத்தமில்லாத சூழல் உருவாகி நிற்பதைப் பார்க்கலாம். 

மேல் அதிகாரியிடம், சார் நீங்க சொன்னீங்கன்னு வேணா செய்யறேன்; ஆனா இந்தத் திட்டம் சரிப்பட்டு வராதுன்னு எனக்குத் தோணுது, அப்புறம் என்னை குத்தம் சொல்லாதீங்க என்பார்கள். 

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு அரசுத்துறைகளை விட தனியார் நிறுவனங்களே பொருத்தமானதாகும். இவர்கள் எலெக்டிரிகல் துறை சார்ந்த பணிகள், அக்குபங்சர் போன்ற

சிகிச்சை முறைகள், தானிய அரவை நிலையம், தானியக்கிடங்கு நிர்வாகம், ஜோதிடத்துறை, நீதிமன்றங்கள் மற்றும் மக்களின் குறை தீர்க்கும் சேவை மையங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்தால் ஏற்றங்கள் தேடிவரும். 

இவர்களுக்கு கற்பனைத்திறன் உண்டு ஆகவே கதைகள், கவிதைகள் எழுதி அதனாலும் வருமானம் பெறுவார்கள். இந்த நட்சத்திரத்திற்கு உரிய மரம் மூங்கில். 

மூங்கில் மரம் எந்தத் தலத்தில் தலமரமாக இருக்கிறதோ அந்தத் தலத்தில் உறையும் இறைவனை வணங்கி வழிபட்டு வந்தால் தோஷம் விலகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். 

வழிபட வேண்டிய பரிகாரத்தலம் – punarpoosam nakshatra characters in tamil 

திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் 

இந்தக் கோயிலைப்பற்றி அறிந்து கொள்வோம் 

திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் 

தையலாள் மேல் காதல் செய்த 

தாளவன் வாளரக்கன் 

பொய்யில்லாத பொன்முடிகள் 

ஒன்பதோடு ஒன்றும் அன்று 

செய்த வெம்போர் தன்னிலங்கோர் 

செஞ்சத்தால் உருள 

எய்தவெந்தை எம்பெருமான் 

எவ்வுள் கிடந்தானே!                                             பெரியதிருமொழி 222 

இராவணனது பத்து சிரங்களையும் அறுத்து அவனை எமனுலகு அனுப்பிய இராமன் தான் எவ்வுள் என்ற ஊரில் கிடப்பதாக திருமங்கையாழ்வார் மேலே உள்ள பாசுரத்தில் உறுதியாகச் சொல்கிறார். 

தலசிறப்புக்கள் – punarpoosam nakshatra characters in tamil

சிவபெருமானுக்கு தட்சணைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இந்தத் தீர்த்தக் கரையில் நீங்கியது. ஆகவே தீர்த்தக்கரையில் சிவன் கோயிலும் இருக்கிறது. இந்தப் பெருமாளுக்கு வைத்திய வீரராகவன் என்ற திருநாமமும் உண்டு. 

இந்தப் பெருமாளை சேவிப்பதால் எல்லாவகையான நோய்களும் நீங்குவது உறுதி. வடலூர் இராமலிங்க அடிகளார் தீராத வயிற்று வலியினால் துடித்தார் 

என்றும், அதைத் தீர்க்க வேண்டி திருவள்ளூரில் எழுந்தருளி இருக்கும் பெருமானிடம் வேண்டிக் கொண்டார் என்றும், பெருமாளின் அருள்பார்வை அவர் மீது படவே நோய் தீர்ந்தது என்றும், 

அதனால் தனது தீராத வயிற்றுவலியை நீக்கி அருள்புரிந்த இந்தப்பெருமாள் மீது போற்றிப் பஞ்சகம் பாடி இருக்கிறார் என்பதும் வியப்பான தகவல்.

பாண்டவர் தூதனாக பலித்தருள் பரனே போற்றி 

நீண்டவனே என்று வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி 

தூண்டலில்லாமல் ஓங்கும் சோதிநல் விளக்கே போற்றி 

வேண்டவர் எவ்வர் வாழ் வீர ராகவனே போற்றி 

என்பது அவர் இயற்றிய ஐந்து பாடல்களில் ஒன்றாகும். 

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் 108 திருப்பதி அந்தாதியில், பெருமாளே உன்னை இகழ்ந்தவர்களையும், எதிர்த்தவர்களையும் கூட அவர்களது குற்றங்களைப் பார்க்காமல் மன்னித்து உன் திருவடிகளில் சேர்த்துக் கொள்ளும் உயர்ந்த குணம் உடையவன் நீ. 

அப்படிப்பட்ட நீ அடியேனுடைய நேர்மையில்லாத செயல்களையும் பொறுத்துக்கொண்டு இரக்கம் காட்டு என்று வேண்டுகிறார்.

நீர்மைகெட வைதாரும் நின்னோடு எதிர்த்தாரும் 

சீர்மைபெற நின்னடிக்கீழ் சேர்க்கையினால் – நேர்மையிலா

 வெவ் வுள்ளத்தனேன் செய்கையை பொறுத்தருளி 

எவ்வுள் அத்தனேநீ இரங்கு 

புனர்பூச நட்சத்திரத்தின் குணநலன்கள் punarpoosam nakshatra characters in tamil பொதுக்குணங்கள் திருமணவாழ்க்கை தொழில் வழிபட வேண்டிய பரிகாரத்தலம் 

பெருமாளைத் தரிசித்தால் 

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருமணம் ஆகாமல் மனவருத்தம் அடைந்து வரும் ஆண்களும், பெண்களும் இந்தத் தலத்துப்பெருமாளிடம் வேண்டிக் கொண்டால் தடைகள் விலகும், விரைவில் திருமணம் கைகூடும். 

இங்குள்ள புஷ்கரணியில் அமாவாசை தோறும் வந்து நீராடிவிட்டு, பெருமாளைத் தரிசனம் செய்தால் எப்பேர்ப்பட்ட கொடிய நோய்களும் அகலும். சிலபேர் நோய் நீங்குவதற்காக எத்தனையோ வகையான மருந்துகளைச் சாப்பிடுவார்கள். 

ஆனால் பணம் வீணாகுமே தவிர நோய் போகாது. அப்படிப்பட்டவர்கள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாளைத் தரிசனம் செய்தால் தோஷங்கள் விலகும்.  

அதன் பிறகு மருந்து மாத்திரைகள் வேலை செய்யும், நோய்கள் நீங்கும். எதிரிகளினால் தொல்லையும் அதனால் நீங்காத பயமும் கொண்டு வாழ்க்கையைப் போராட்டமாக நடத்துபவர்கள் 

இந்தப் பெருமாளைத் தரிசனம் செய்து அவரிடம் நேரிடையாக வேண்டிக்கொண்டால் நிச்சயம் அவர்கள் எதிரிகள் அடங்குவார்கள் பயம் விலகும் என்பது நீண்டகாலமாக இருந்து வரும் ஐதீகம். 

முற்காலத்தில் எல்லா நோய்களும் தொழும் நோய் என்பது குஷ்டரோகம். அதனால் தான் அந்நோய்க்கு தொழுநோய் என்று பெயர் வந்ததாம். அந்த நோயைவிடக் கொடியது பிறவியாகிய நோய். 

குஷ்டரோகம் ஒரு பிறவியில் மட்டுமே வந்து வாட்டி எடுக்கும். ஆனால் பிறவியாகிய நோய் விடாது துரத்தி கர்மபலனைக் கூட்டிவைக்கும். இந்த நோயைப் போக்குவதே மனிதப் பிறவி எடுத்ததன் பயன். 

சிவபெருமானுடைய பிரம்மஹத்தி தோஷத்தையே போக்கிய புஷ்கரணி இங்கே இருக்கிறது. அந்தக் குளத்தில் குளித்தால் நம்முடைய ஜென்மாந்திர பாவங்கள் நிச்சயமாக விலகிவிடும். 

புண்ணியசாலிகளாகி விடுவோம். அதன் பிறகு பிறவியாகிய பிணி தீரும், மோட்ச சாம்ராஜியத்துக்குச் சென்று நித்ய சூரிகளாகி எம்பெருமான் அருகிலேயே இருந்து சேவை செய்யும் பாக்கியம் பெறுவோம். இப்படிப்பட்ட பெருமை கொண்டது இத்திருத்தலம். 

புனர்பூச நட்சத்திரத்தின் குணநலன்கள் punarpoosam nakshatra characters in tamil பொதுக்குணங்கள் திருமணவாழ்க்கை தொழில் வழிபட வேண்டிய பரிகாரத்தலம் 

நெல்லையப்பர் ஆலயம் 

punarpoosam nakshatra characters in tamil புனர்பூச நட்சத்திரக்காரர்கள் சென்று வழிபடவேண்டிய மற்றொரு பரிகாரத் தலம் தமிழகத்தின் மிகப்பெரிய சிவத் தலங்களுள் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில்.

இந்த தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானுக்கு நெல்லையப்பர் என்று திருநாமம். இறைவியின் பெயர் பெற்ற திருத்தலம் இது. காந்திமதி அம்மை. 

திருஞானசம்பந்தப் பெருமானின் பாடல் முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்ற அந்தணர் மிகவும் பக்தியோடு இந்தக் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற எம்பெருமானுக்குச் சேவைகள் செய்து வந்தார். 

அவர் மிகவும் வாடிய போதிலும் ஊருக்குள் சென்று பலபேரிடம் நெல்லை வாங்கிவந்து அதை அரிசியாக்கி அமுது செய்வித்து அதை இறைவனுக்கு நிவேதனம் செய்து வந்தார். 

வேதபட்டரின் பக்தியை ஊராருக்குத் தெரிவிக்க விரும்பிய சிவபெருமான் ஒருநாள் மழை பொழிவித்தார். ஊருக்குள் மழை சுழன்று அடித்தது . வேதபட்டர் இறைவனுக்காக யாசகம் பெற்று வாங்கி வந்த நெல்லை வீட்டு வாசலில் காயப்போட்டிருந்தார். குளித்துக் கொண்டிருந்த அவர் மழை பொழிவதைக் கண்டு அலறிக் கொண்டு வாசலுக்கு வந்தார். 

பகவான் நைவேத்தியத்திற்காகக் காயப் போட்டிருக்கும் நெல் மழையில் நனைந்து வீணாகிவிடுவதோடு, மழைநீர் அதை அடித்துக் கொண்டு போய்விடுமே என்ற பதட்டமே அதற்குக் காரணம். 

ஆனால் என்ன ஆச்சரியம்? அவர் தோட்டத்தில் இருந்து வாசலுக்கு வந்தபோது காயப்போட்டிருந்த நெல்லின் மீது ஒரு துளி மழையும் படவில்லை. 

அதோடு வேலி போட்டதைப் போல நெல்லைச்சுற்றி மட்டுமே மழை பொழிந்தது. நெல்மணிகள் சேதாரம் இல்லாமல் காய்ந்தபடி இருந்தன. வேதபட்டர் தான் பார்த்த அதிசயத்தை ஓடிச் சென்று ஊர்மக்களிடமும் மன்னரிடமும் தெரிவித்தார். 

அவர்களும் வந்து மழை நீர் நெல்லுக்கு வேலியான அதிசயத்தைக் கண்டனர். வேதபட்டரின் பக்தியை மெச்சினர். அது முதல் அந்த இடம் திருநெல்வேலி என்று அழைக்கப்பட்டது.

சிவபெருமானுக்கும் நெல்வேலிநாதர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இன்று கோயிலுக்குள் காணப்படும் மூலலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஒரு வெட்டுத்தழும்பு காணப்படுகிறது. 

இது எப்படி ஏற்பட்டது? ஒரு காலத்தில் இந்த வனப்பகுதி மூங்கில் புதராக இருந்தது. அந்த வழியாக அரண்மனைக்குப் பால் எடுத்துச் செல்வது ஒரு பட்டரின் வழக்கம். 

ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவருடைய கால் இடறி பால் சிந்தியது. இது ஏதோ ஒருமுறை நடக்கவில்லை. தினந்தோறும் நடந்தது. அவர் எத்தனை தான் ஜாக்கிரதையாகச் சென்றாலும் அடிமேல் அடிவைத்து நடந்தாலும் அந்த இடத்தில் அவர் கால் இடறியது. 

இது ஏதோ தெய்வத் தொடர்பான விஷயம் என்பதை உணர்ந்த பட்டர் அரசரிடம் உண்மையைத் தெரிவித்தார். அவர் உடனே ஆட்களை அனுப்பி கால் இடறிய இடத்தை தோண்டிப் பார்க்கச் சொன்னார். 

அங்கே பூமியைத் தோண்டி மண்ணை அகற்றிய போது ஒரு கல்லின் மீது கடப்பாறை பட்டு ரத்தம் கசிந்தது. எல்லோரும் மெய்சிலிர்த்தனர். பிறகு கைகளாலேயே மண்ணை அகற்றினர். 

அழகான சிவலிங்கம் வெளிப்பட்டது. சுயம்புவாகத் தோன்றிய அந்தக் கல்லை லிங்கமாக வைத்தே இக்கோயில் எழுப்பப்பட்டது. கடப்பாறை பட்ட இடமே லிங்கத்தின் தலையில் வெட்டுப்பட்டதைப் போல தோற்றம் தருவதை இன்றும் பார்க்க முடிகிறது. 

திருநெல்வேலிக்கு சென்னையில் இருந்து ரயில் மற்றும் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆற்றின் கரையில் இக்கோயில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் சிவபெருமான் நடனம் செய்யும் முக்கியமான ஐந்து சபைகள் உள்ளன. 

அவற்றில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பு. ஸ்ரீ காந்திமதி சமேத நெல்லைப்பர் ஆலயம் தாமிரசபையாகவும், 

ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் பக்தர்களினால் போற்றப்படுகிறது. புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபடுவதன் மூலமாக சுபகாரியத் தடைகள் நீங்கும். 

எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். திட்டமிட்டபடி முன்னேற்றம் அடைய வழிவகைகள் ஏற்படும். பணப்புழக்கம் அதிகமாகும். தந்தை மகன் உறவில் இருந்துவந்த விரிசல்கள் மறையும்.

தரிசனபலன்கள் – punarpoosam nakshatra characters in tamil

பகைவர்களினால் தொல்லை அனுபவிப்பவர்கள், எடுத்த காரியத்தை முடிக்க முடியாமல் திணறுபவர்கள், தொழிலில் அபிவிருத்தி காணாமல் நஷ்டம் அடைபவர்கள், 

பெண்களின் சாபத்தினால் முன்னேற முடியாமல் தவிப்பவர்கள் ஆகியோர் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இத்தலத்திற்கு வந்து சோமதீர்த்தத்தில் நீராடி இறைவனைத் தொழுது அருச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும். 

வழிபடவேண்டிய மற்ற தலங்கள் – punarpoosam nakshatra characters in tamil 

ஆலங்குடி குருபகவான் 

சீர்காழி சட்டநாதர் கோயில் என்ற பெரிய கோயில் மயிலாடுதுறை மார்க்கம் 

ஸ்ரீ அதிதீஸ்வரர் கோயில் பழைய வாணியம்பா வேலூர் மாவட்டம். திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு தென்கிழக்கில் 20 கிமீ தொலைவு. 

டிசம்பர் மாதம் ராசி பலன்கள் – 2021

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments