நட்சத்திரம் குணங்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் குணநலன்கள்

Table of Contents

மேன்மைகள் மிகுந்த மிருகசீரிஷம் 

சிறப்புக்கள் 

mirugasirisham nakshatra characters in tamil இருபத்தியேழு நட்சத்திரங்களின் வரிசையில் இதற்கு ஐந்தாவது இடம் கிடைத்திருக்கிறது. இதன் அதிபதி செவ்வாய். இது பெண் நட்சத்திரமாக ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

இந்த நட்சத்திரத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாதங்கள் சுக்கிரனின் ராசியான ரிஷபத்திலும், மூன்று மற்றும் நான்காம் பாதங்கள் மிதுனத்திலும் இடம் பெறுகிறது. 

ஆகவே முதல் இரண்டு பாதங்களில் பிறப்பவர்களின் ராசி ரிஷபம், கடைசி இரண்டு பாதங்களில் பிறப்பவர்கள் மிதுனராசிக்காரர்கள் என்பது விளங்கும். பரிகார விருட்சம் கருங்காலி மரம். இந்த மரத்தை வீட்டில் வைத்து வளர்ப்பதும், ஆலயத்தில் வளர்ப்பதும் அதிவிரைவில் முன்னேற்றங்களைக் கொண்டு வரும்.  

பெயருக்கு உரிய எழுத்துக்கள் 

இந்த ராசியில் பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் முதல் எழுத்து வே, வோ, கா, கி ஆ கியவை. தொடர் எழுத்துக்கள் வை, வொ ஆகியன. ஆண் குழந்தைகளுக்கு வேலன், வெற்றிவேல், வெங்கட் வெங்கடராமன், கதிரேசன், கண்ணன், காளிதாசன், கார்த்திக்குமார், 

கிருஷ்ண மூர்த்தி, கீர்த்தி வாசன் போன்ற பெயர்களை வைத்தால் நல்வாழ்வு அமையும். பெண் குழந்தைகளுக்கு வேதவல்லி, வேணி, வேலம்மா, வெற்றிச் செல்வி, கல்பனா, கவிதா, கனகா, கனிமொழி, காவேரி, கார்த்திகா, கிருஷ்ணகுமாரி, கீர்த்தனா ஆகிய பெயர்களைச் சூட்டுவது சிறப்பைத் தரும். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவபெருமான் உருவம் பதித்த மோதிரத்தை அணிந்து கொள்ள, அநேக நன்மைகள் ஏற்படும். இவர்களுடைய ராசிக்கல் பவழம். 

பொதுக்குணங்கள் – mirugasirisham nakshatra characters in tamil

  • இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு துணிச்சல் அதிகமாக இருக்கும். இவர்கள் சீக்கிரம் யாருக்கும் பயப்படமாட்டார்கள். என்ன செய்து விடுவான் பார்க்கலாம் என்ற தைரியம் உள்ளுக்குள் எப்போதும் உண்டு.
  • அடிதடி களுக்கும் இவர்கள் தயாராக இருப்பார்கள். மேலும் ரத்தம் பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். காரணம் செவ்வாய் இந்த ராசியின் அதிதேவதை. இவர்கள் துணிச்சல்காரர்கள் என்பதால் ராணுவம், காவல்துறை, பந்தோபஸ்து சார்ந்த துறைகளில் பிரகாசிப்பார்கள்.
  • நாடுகாக்கும் துறைகளிலும், போராட்டங்கள் நடத்துவதிலும், அந்தத் துறை சார்ந்த தந்திரங்களிலும் வெற்றி காண்பார்கள். இவர்களது நேர்மை, உழைப்பு ஆகியவற்றைப் பார்த்து அரசு உயர் அதிகாரிகள் மிகுந்த மரியாதை கொடுப்பது வழக்கம்.
  • இவர்கள் தாய்நாட்டை விட்டு வெளிநாட்டுக்குச் சென்ற போதிலும் கூட தனது நாட்டையும், ஊரையும் மறக்க மாட்டார்கள். அது எப்படி சார் மரம் எத்தனைதான் ஆகாசத்தை நோக்கி வளர்ந்தாலும் அதனோட வேர் மண்ணுல தானே;
  • அது மாதிரிதான். நான் வெளிநாட்டுல இருந்தாலும் எனக்கு எங்க ஊர்மேலே தனிப்பாசம் உண்டு. வருஷத்துக்கு ஒருதடவை எதையாவது சாக்கு வெச்சி வந்துடுவேன் என்பார்கள்.
  • துணிவோடு இருந்தாலும் தக்கவர்களிடம் பணிவோடும் இருப்பார்கள். இவர்களுக்கு நினைவாற்றல் அதிகம். அடிக்கடி கோபப்படுவார்கள், இருந்தாலும் நல்ல குணங்களுக்குச் சொந்தக்காரர்கள்.
  • மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணம் குறைவாக இருக்கும். ஆகவே இவர்கள் குடும்பத்தில் சச்சரவுகள் இருப்பது வழக்கம்.
  • யாருடனும் இணைந்து போவதற்கு ஆர்வம் இல்லாத காரணத்தினால் இந்த நட்சத்திரக்காரர்கள் வீட்டுக்குள்ளேயே எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்வார்கள்.
  • இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அழகானவர்கள், சுத்தத்தை விரும்புவார்கள். சுகாதாரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பவர்கள். விரும்பிய ஆடை ஆபரணங்களை வேண்டும் போது வாங்கி அணியும் யோகம் பெற்றவர்கள்.
  • தரும காரியங்கள் செய்வதில் விருப்பம் உடையவர்கள். அம்மன் கோயில்ல கும்பாபிஷேகமாம் பக்கத்து வீட்டு மாமி சொன்னாங்க, ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்திட்டேன் என்று கணவனிடம் சொல்வார்கள்.

ஜோதிட சாஸ்திரம் இவர்களைப் பற்றி – mirugasirisham nakshatra characters in tamil 

மிருகசீரிஷம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் 

செல்வம் உடையவர்கள், ஜெயிப்பவர்கள், உடல் பருமன் உடையவர்கள், கோபம் உடையவர்கள், அதிக ஆசாரம் இல்லாதவர்கள், அரக்க குணம் தலைதூக்குபவர்கள் என்றும், 

இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் 

வழக்காடுபவர்கள், பிறருக்கு உபதேசிப்பவர்கள், உண்மை பேசுவதில் ஆர்வம் உள்ளவர்கள், பெண்களின் மீது மோகம் கொண்டவர்கள், எல்லோரின் மனத்திற்குப் பிடித்தவர்கள் என்றும், 

மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் 

உயர்ந்த குணங்களும், உத்தம வாழ்க்கையும் கொண்டவர்கள். சாதுவான குணம் கொண்டவர்கள், தியாகசீலர்கள் என்றும்,

நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் 

மெய்யே பேசுபவர், புத்திசாலிகள், தரும சிந்தனையாளர்கள், காமம், கோபம், வஞ்சகம் உடையவர்கள் என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. 

மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் குணநலன்கள் mirugasirisham nakshatra characters in tamil வழிபட வேண்டிய தலங்கள் திருமண வாழ்க்கை தொழில்

திருமண வாழ்க்கை – mirugasirisham nakshatra characters in tamil 

தங்கள் மனத்தில் இருப்பதை பட்டென்று வெளியே சொல்லும் குணம் இவர்களிடம் இருக்காது. ஆகவே இவர்கள் யாருடனும் அதிகம் கலந்து பேசி, கலகலப்பாக இருப்பதைப் பார்க்க முடியாது. 

பட்டும் படாமலுமே இவர்கள் வாழ்வார்கள். கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி மனத்தாங்கல்கள் வரும். இந்த ராசியில் பிறந்த பெண்களுக்கு தாய்வழியில் சொத்துக்கள் வரும் வாய்ப்பு அதிகம் உண்டு. 

ஆகவே செல்வத்திற்கோ, செல்வாக்கிற்கோ பஞ்சமே இருக்காது. ஆடம்பரப் பொருட்களின் மீது ஆர்வம் கொண்டு வாங்குவார்கள், சொகுசாக வாழ ஆசைப்படுவார்கள். 

கைக்காசை இரட்டிப்பாக்கும் ஆசையில் சிலர் வருமானத்தை இழப்பதும், வீடுவாசல்களை இழப்பதும் நேரிடும்.சிலருக்குத் திருமணம் தாமதப்பட்டாலும் குழந்தைப் பாக்கியம் உடனே கிடைக்கும். 

இவர்களது குழந்தைகள் அழகாக, சுருட்டை முடியோடு காணப்படுவர், சிலருக்கு இரட்டைக் குழந்தைகளும் உண்டு. பேருந்தில் செல்லும் நேரத்தில் யாராவது காலை மிதித்துவிட்டால் அதனால் என்ன சார் பரவாயில்லை, 

போங்க தெரிஞ்சா செய்தீங்க? இதெல்லாம் பெரிசா எடுத்துக்க மாட்டேன்னு பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்து மன்னிக்கும் இவர்கள், வீட்டில் மட்டும் யாரையும் அனுசரித்துப் போகமாட்டார்கள். 

நீ எப்பவுமே இப்படித்தான் திமிர் பிடிச்சவளாச்சே என்று கணவனும், உங்களைப்பத்தி எனக்குத் தெரியாதா? என்னடா ரெண்டு நாளா நல்லபிள்ளையாட்டமா சீக்கிரமே வீட்டுக்கு வரீங்கன்னு அப்பவே சந்தேகப்பட்டேன் என்று இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களும் சாடுவார்கள். 

வீட்டில் கறாராகவும், சிடுமூஞ்சியாகவுமே இருப்பார்கள். பிள்ளைகள் சிறிய தவறு செய்துவிட்டால் தண்டனை கொடுப்பதற்காக அவர்களுடன் பேசுவதைத் தவிர்ப்பார்கள். 

தங்கள் குறையை ஒப்புக் கொண்டால் தான் சாஜநிலைக்குத் திரும்புவார்கள். பிள்ளைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வளர்ப்பார்கள், தங்களது ஆசையைத் திணிப்பார்கள். 

இதனால் அவர்களது அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்வார்கள். கடைசி காலத்தில் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழாமல் தனியாகவே வாழும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் குணநலன்கள் mirugasirisham nakshatra characters in tamil வழிபட வேண்டிய தலங்கள் திருமண வாழ்க்கை தொழில்

தொழில் – mirugasirisham nakshatra characters in tamil

மற்றவர்கள் சொல்கேட்டு நடப்பதை விரும்பாத இவர்கள் தங்கள் சுயசிந்தனைப்படியே காரியம் ஆற்றும் இறமை மிக்கவர்கள். போராடும் குணம் கொண்டவர்கள். 

கடின உழைப்பா என்று பயந்து பின்வாங்காமல் அதை எப்படிச் செய்வது என்ற யோசனையில் மூழ்குவார்கள். பெரிய பிரச்சனை வந்தால் பயந்து பின் வாங்காமல், சமாளிக்கும் வழிவகைகளை ஆராய்ந்து மேற்கொள்ளும் திடசித்தம் இவர்களிடம் உண்டு. 

அதை கடின உழைப்பிற்கு அஞ்சாத இவர்கள் குறைந்த கூலிக்கும் நிறைவாகவே வேலை செய்வார்கள். இதனால் இவர்களுக்கு மதிப்பு அதிகம் இருக்கும். 

பத்திரிகை ஆசிரியராக இருந்தாலும் சம்பள உயர்வை வாய்திறந்து கேட்க மாட்டார்கள். நடிகராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் பார்த்து, போனா போறான் விடு என்று தனக்கு வரவேண்டிய பணத்தை கறாராகக் கேட்காமல் தயக்கம் காட்டுவார்கள். 

கட்டுரை ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை தலையங்கம் எழுதுபவர், நாவல் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவது ஆகிய தொழில்கள் இவர்களுக்கு ஏற்றது. 

நகைக்கடைகளில் ரத்தினக் கற்களை ஆராய்வது, சுற்றுலா ஏற்பாடு செய்தல், சிகப்பு நிற பொருட்களை விற்பது, கால்நடைகளுக்குத் தேவையான பொருட்களை விற்பது, தோல் பொருட்களை விற்பனை செய்வது ஆகியவற்றிலும் வருமானம் ஈட்டலாம். 

கடின உழைப்பாளர்களான இவர்கள் எதையும் எளிதாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்கள். நடனம், பாட்டு ஆகியவற்றில் ஆர்வம் காட்டுவார்கள். அரசியல், பொது மேலாண்மை, சட்டம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். 

நினைத்த காரியங்களை எத்தனை தடைகள் வந்தாலும் அயராமல் உழைத்து நிறைவேற்றுவார்கள். மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் கடினமான உழைப்பாளி என்பதால் கழுத்துவலி, எலும்பு மஜ்ஜை தேய்தல், கால்களில் மூட்டு வலி ஆகியவற்றினால் அவதிப்படுவார்கள். 

வயிற்றுவலி, குடல் இறக்கம், சர்க்கரை நோய், கீல்வாதம் போன்றவையும் தாக்கும். இந்த நட்சத்திரக்காரர்களின் ஸ்தல விருட்சம் கருங்காலி மரம். இந்த மரத்தை பக்தியோடு வழிபட்டு பூசைகள் செய்தால் பலன்களைப் பெறலாம். 

வழிபட வேண்டிய தலங்கள் – mirugasirisham nakshatra characters in tamil 

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள சந்திர சூடேஸ்வரர் மரகதாம்பிகை திருக்கோயில். 

மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் குணநலன்கள் mirugasirisham nakshatra characters in tamil வழிபட வேண்டிய தலங்கள் திருமண வாழ்க்கை தொழில்

மலைமீது சிவன் கோயில் 

முருகன் கோயிலோ அல்லது பெருமாள் கோயிலோ மலைமீது அதிக எண்ணிக்கையில் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். சிவன் கோயில் மலைமீது இருப்பது அபூர்வமே , இந்த வகையில் ஓசூர் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் கிளைவழியில் 

ஒரு சின்ன மலை மீது சந்திர சூடேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. மலைமீது ஏறிச் செல்ல படிகள் காணப்படுகின்றன. கார்கள் செல்ல சாலை வசதியும் உண்டு. 

கர்நாடகா மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற சிவபெருமானுக்கு சந்திரசூடேஸ்வரர் என்பது திருநாமம். 

அம்பாள் பெயர் மரகதாம்பாள், சிவபெருமான் கயிலைமலையில் இருந்து தென்னாடு நோக்கி ஒரு பல்லியின் உருவம் எடுத்து வந்தார். அம்பாளும் கணவனைப் பின்தொடர்ந்தாள்.

இந்த மலைக்கு அருகில் சிவபெருமானாகிய பல்லி வந்தபோது அங்கே இரண்டு முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்களது ஞானதிருஷ்டியினால் பல்லி ரூபத்தில் வருவது சாட்சாத் சிவபெருமானே என்பதை உணர்ந்தனர். 

அந்தப் பல்லியைப் பிடிக்க விரும்பினர். உடனே அந்தப் பல்லி அவர்கள் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து விடுகிறது. அத்தனை எளிதில் சிவபெருமானைப் பிடித்து விடமுடியுமா? 

முனிவர்கள் ஏமாந்து போயினர். கணவனைப் பின்தொடர்ந்து வந்த அம்பாளுக்கு அவர் முனிவர்களின் அவசரகாரியத்தினால் மறைந்து போனதைப் பார்த்து கடுமையான கோபம் வந்து விட்டது. 

அவள் முனிவர்களுக்குச் சாபம் கொடுத்துவிடுகிறாள். கணவனை மீண்டும் காண்பதற்கு அங்கேயே இருந்து அம்பாள் தவம் செய்கிறாள். தவத்தின் முடிவில் இறைவன் அவளுக்குக் காட்சி தந்து ஆட்கொள்கிறான் என்று தலவரலாறு தெரிவிக்கிறது.

கோவில் அமைந்துள்ள மலைமீது பல்லி உருவம் இருப்பதாக கிராம மக்கள் நம்புகிறார்கள். இந்தத் தலத்திற்குச் சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை மிருகநட்சத்திரக் காரர்கள் தரிசித்தால் துன்பங்கள் விலகும். 

அவரசப்பட்டோ, அறியாமையாலோ செய்த பாவங்கள் நீங்குவதற்கும், எண்ணிய காரியம் நல்லபடியாக முடிவதற்கும், தோல்வியால் துவண்டு போகிறவர்கள் 

வெற்றி பெறுவதற்கும், நோயினாலும், வழக்குத் தொல்லைகளினாலும் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தும் பலன் இல்லாமல் அவதிப் படுபவர்களும் இத்தலத்து இறைவனைத் தரிசித்து மனதார வேண்டிக் கொண்டால் துன்பங்கள் நீங்கி சுகவாழ்வு மலரும். 

இந்தக் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற சிவபெருமான் மனக்கவலைகள் நீக்குபவர், தீராத நோய்களைத் தீர்க்கும் வைத்தீஸ்வரன் என்பதற்கும் சான்றுகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ஒன்றை மட்டும் பார்க்கலாம்.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் குணநலன்கள் mirugasirisham nakshatra characters in tamil வழிபட வேண்டிய தலங்கள் திருமண வாழ்க்கை தொழில்

நாத்திகரையும் ஆட்கொண்ட நாயகன் 

கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் அரசு டெபுடி சர்வேயராக வேலை பார்த்த ஒருவர் அந்தக் காலத்தில் பெரியாரின் கொள்கைகளினால் கவரப்பட்டு நாத்திகராகவே வாழ்ந்து வந்தார். 

அவர் கோயிலுக்குப் போவதோ, இறைவனை வழிபடுவதோ செய்வதில்லை. ஆனால் நேர்மையாகவும், கட்டுப்பாட்டோடும் மிக நல்ல முறையில் வாழ்ந்தார். 

அவருடைய முகத்தில் ஒரு கட்டி ஏற்பட்டது. மருத்துவ ரிடம் காட்டியதில் அதை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு ஆயிரக்கணக்கில் பணம் செலவாகும் என்றும் தெரிவித்தார். 

குடும்பத்தில் இவர் ஒருவரே சம்பாதிப்பவர். ஆகவே தனது சொற்ப வருமானத்தை சிகிச்சைக்குச் செலவழிக்க அவர் தயங்கினார். மனத்தில் கவலை அதிகமானது. 

ஒருநாள் வழியில் ஒரு பெரியவர் இவரைச் சந்தித்தார். ஏன் வாட்டமாக இருக்கிறீர்கள்? என் முகத்தில் கட்டி வந்திருக்கிறது, சிகிச்சை செய்ய பணவசதி போதவில்லை என இழுத்தார் அவர். 

இத்தனை வருஷமாக கிருஷ்ணகிரியில் வேலை பார்க்கிறீர்களே, ஒருநாளாவது மலைமேலே உள்ள சந்திர சூடேஸ்வரரைத் தரிசனம் செய்திருக்கிறீர்களா? 

இவர் தயங்கினார், எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது என்று சொல்ல மனம் வரவில்லை. ஆகவே இதுவரையில் போனதில்லை என்றார். 

ஒரே ஒருமுறை அந்தப் பெருமானைத் தரிசித்துவிட்டு வாருங்கள், அதோடு பிறக்கும் குழந்தைக்கும் அந்த இறைவனின் பெயரையே வைத்து விடுங்கள். இன்றே நாட்டு

மருந்து கடைக்கு சென்று இந்த மருந்தை வாங்கி சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு மருந்தின் பெயரையும் கூறியபடி தன் வழியில் போய்விட்டார். கடவுளை இதுவரையில் நம்பாத அந்த மனிதர்.

எதற்கும் பார்க்கலாமே என்ற எண்ணத்தில் சந்திரகுடேஸ்வரர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தார். அடுத்த நாள் காலையில் முகத்தில் உள்ள வீக்கம் குறைந்திருந்தது. 

இதை அவரால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. உடனே நாட்டு மருந்துக் கடைக்குச் சென்று அந்தப் பெரியவர் சொன்ன மருந்தையும் வாங்கி உபயோகித்தார். 

என்ன ஆச்சரியம் ஐந்து நாட்களில் அவர் முகத்தில் இருந்த கட்டியும், வீக்கமும் முற்றிலும் மறைந்து விட்டன. வருடங்கள் நாத்திகராக இருந்த மனிதர் ஒரே இரவில் நாத்திகராக மாறியதோடு, இறைவனின் பெருங்கருணைக்கும் ஆளாகி நோயிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார். 

பல இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த வல்லவர் ஓசூரில் எழுந்தருளி இருக்கும் சந்திரசூடேஸ்வரர். அவர் பெரும் கருணை கொண்டவர், தனது பக்தர்களின் துன்பங்களை மட்டும் நீக்காமல், 

தன்னை நம்பாத அன்பர்களுக்கும் அருள் செய்யும் கருணைக்கடல் போன்றவர். அவரைத் தரிசித்தால் தீராத நோய்கள் தீரும். உடல் நோய் மட்டுமா? மன நோய்களும், பிறவிப்பிணியாகிய நோயும் தீருவது உறுதி. 

மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் குணநலன்கள் mirugasirisham nakshatra characters in tamil வழிபட வேண்டிய தலங்கள் திருமண வாழ்க்கை தொழில்

வழிபடவேண்டிய மற்ற தலங்கள் – mirugasirisham nakshatra characters in tamil

எண்கண் ஆதிநாராயணப் பெருமாள் கோயில். தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கிமீ வழிப்பயணத்தில் முகுந்தனூர் இருக்கிறது. 

இங்கிருந்து ஒரு கிமீ தொலைவில் எண்கண் ஆதிநாராயணப் பெருமான் கோயில் அமைந்திருக்கிறது. மற்ற வைணவத் தலங்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில் சேவை சாதிப்பது வழக்கம். இந்தத்

திருத்தலத்தில் மட்டும் வழக்கத்திற்கு மாறாக பெருமாள் மூலஸ்தானத்தில் கருடவாகனத்தில் அமர்ந்தபடியே சேவை சாதிக்கிறார். இந்தத் திருத்தலத்திற்குச் சென்று எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை பக்தியோடு வழிபட்டால் தீராத நோய்கள் தீரும். 

கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். நீண்ட நடக்காமல் கிடப்பில் போடப்பட்ட காரியங்கள் சீக்கிரமாக நிறைவேறும். மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நாகதோஷம், பட்சி தோஷம், தோல்நோய்கள், 

ஆகியவை நீங்க இத்தலத்துப் பெருமாளைத் தரிசனம் செய்கிறார்கள். பகைவர்களினால் தொல்லைகள் அனுபவிப்பவர்கள், குடும்பத்தினரைப் பிரிந்து தவிப்பவர்கள், அடிக்கடி வீட்டில் ஏற்படும் துர்மரணங்களினால் மனநிம்மதி இழந்தவர்கள், 

குழந்தைகளின் நோய் நீங்க விரும்புவோர் ஆகியோர் பவுர்ணமி அன்றோ அல்லது மிருகசீரிஷ நட்சத்திரத்து அன்றோ இங்கு வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு நோய் நீக்கம், தொல்லைகளில் இருந்து விடுதலை ஆகியவற்றைப் பெற்று சுகவாழ்வு வாழ்கின்றனர். 

இவர்கள் செல்ல வேண்டிய மற்ற பரிகாரக் கோயில்கள் 

கிருஷ்ணகிரி சந்திர மௌலீஸ்வரர் பார்வதிதேவி திருக்கோயில். இது தர்மபுரிக்கு வடக்கே 48 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. முசிறி கரூர் மாவட்டம் காவிரியின் வடகரையில் உள்ள கற்பூரவள்ளி சந்திர மௌலீஸ்வரர் திருக்கோயில். 

கதிராமங்கலம் வனதுர்க்கை கும்பகோணத்தில் இருந்து 15 மைல் கிழக்கில் அமைந்திருக்கும் திருக்கோயில். இந்த வனதுர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள், கேட்பவர்களுக்கு கேட்கும் வரத்தை தடையில்லாமல் வழங்குபவள். 

இரவிலும் பகலிலும் பக்தர்களைக் காக்கும் அன்னை ஸ்ரீ வனதுர்கா தேவியின் பெருமைகளை இப்போது அறிந்து கொள்வோம்.

வரங்களைத் தரும் வனதுர்கா தேவி 

இந்தத் தலத்தில் நவதுர்கைகளில் ஒன்றான ஸ்ரீவனதுர்காதேவி அழகோடு எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். துர்கையின் வலது மேற்கையில் சக்கரமும், இடது மேற்கரத்தில் சங்கும் ஏந்தியிருக்கிறாள். 

வலது கீழ் கரம் அபயஹஸ்தம், இடது கரத்தை மிக அழகாக இடுப்பில் ஊன்றியபடி, தாமரை பீடத்தில் தாள் பதித்து நின்ற திருக்கோலம் காட்டுகிறாள் தேவி. ஆவேசத்தோடும், 

அரக்கனை சம்ஹாரம் செய்த ஆங்காரத்தோடும், விழிகள் பிதுங்கும் கோபத்தோடும் தரிசனம் தருவது துர்கையின் திருவுருவம். ஆனால் வனதுர்கா தேவி இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, மிகவும் அன்போடும், அருளோடும் அமைதி தவழும் முகத்தோடு காட்சி அளிக்கிறாள். 

மற்ற தலங்களில் மகிஷனை பாதத்தில் மிதித்தபடியோ அல்லது பெரிய சூலத்தைக் கையில் ஏந்தியபடியோ காட்சி தரும் துர்கை இத்தலத்தில் மகாலட்சுமியின் அம்சத்தோடு தாமரைப் பூவில் எழுந்தருளி நின்ற நிலையில் காட்சி தருவது அபூர்வமான காட்சியாகும். 

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் துன்பப்படும் நேரங்களில் இத்தலத்திற்கு வந்து துர்கையை தரிசித்துச் சென்றால் துன்பம் நீங்கி நிம்மதி பெறுவது நிச்சயம். 

கம்பருக்கு கதியானாள் 

இந்தத் துர்காதேவி கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பரது வாழ்க்கையிலும், மிருகண்டு முனிவரின் வாழ்க்கையிலும் அருள் வெள்ளத்தைப் பாய்ச்சி ஆட்கொண்ட அன்னை. கம்பர் தினந்தோறும் இவளை வழிபட்ட பிறகே ராமாயணத்தை எழுதுவது வழக்கம். 

ஒருமுறை மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. கம்பர் வீட்டுக் கூரை பிய்ந்து போய்விட்டது. தண்ணீர் குடிசைக்குள் மழையாகப் பொழிந்தது. அம்மா உன் அருள் மழையில் நனைய நினைத்த என்னை, 

இந்த அடைமழை ஆட்டிப்படைத்து சிந்தனையைக் கலைக்கிறதே என்று மனமுருகி அன்னையிடம் வேண்டிக் கொண்டு, குடிசைக்குள் மழைத்தண்ணீர் விழாத இடத்தில் படுத்து தூங்கிவிட்டார். 

தனது பக்தன் படும் துயரத்தைப் பார்த்துக் கொண்டு வனதுர்காதேவி சும்மா இருப்பாளா? வேறொரு பக்தரின் கனவில் தோன்றினாள் அந்த பக்தர் தான் கம்பரை ஆதரித்துவந்த சடையப்ப வள்ளல். 

கம்பனது வீட்டுக்கூரையை இரவுக்குள் மாற்றிக் கொடு என்று ஆணையிட்டு மறைந்தாள். அவரும் ஆட்களை அழைத்துக் கொண்டு கம்பரது குடிசைக்கு வந்து சேர்ந்தார். 

அறுவடை முடியாத நிலை. ஆகவே ஊரில் வைக்கோல் இல்லை. கூரையில் பரப்ப வைக்கோல் கிடைக்காத நிலையில் அந்த வள்ளல் தனது வயலில் அறுவடைக்கு காத்திருந்த நெற்கதிர்களையே வெட்டி, இரவுக்குள் கூரைமீது பரப்பினார். 

மழைத்தண்ணீர் குடிசைக்குள் கொட்டுவது நின்றது. காலையில் எழுந்து பார்த்த கம்பர், தனது குடிசையின் கூரை காய்ந்த வைக்கோலுக்குப் பதிலாக, பச்சைப்பசேல் என்ற கதிர்களினால் வேயப்பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார். 

அன்னையின் பாசத்தையும், சடையப்பரின் வள்ளல் தன்மையையும் கண்டு நெக்குருகினார். கதிர்களினால் கூரை வேய்ந்த காரணத்தினால் இத்தலம் கதிர்வேய் மங்கலம் என்ற பெயரைப் பெற்றது. இதுவே நாளடைவில் மருவி கதிராமங்கலம் எனப்படுகிறது.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் குணநலன்கள் mirugasirisham nakshatra characters in tamil வழிபட வேண்டிய தலங்கள் திருமண வாழ்க்கை தொழில்

வழிபாட்டு முறைகள் 

இவள் ராகுகால துர்கை என்றும் பக்தர்களினால் போற்றப்படுகிறாள். இந்த வனதுர்காதேவியை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபாடு எப்படிப்பட்ட துன்பமும் பறந்து போய்விடும். 

செய்தால் செல்வம் சேர்வதற்கு செந்தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். மன அமைதி பெறவும், குடும்ப ஒற்றுமைக்கும் மல்லிகைப் பூவினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

 நீண்ட கால கடன் தொல்லை செவ்வந்திப்பூவினாலும், தீருவதற்கு தம்பதி ஒற்றுமைக்கு மனோரஞ்சிதப் பூக்களினாலும், உறவினர் பகை மாறுவதற்கு மருக்கொழுந்தினாலும், 

தொழிலில் வெற்றியும், லாபமும் அடைய செம்பருத்திப் பூவினாலும், தடைகள் நீங்கி திருமணம் கைகூடுவதற்கு ரோஜா மற்றும் மஞ்சள் நிறப் பூக்களினாலும் தேவிக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். 

தரிசனப் பலன்கள் 

நீண்ட காலமாகத் திருமணம் நடக்காமல் மனவருத்தப் படும் ஆண்களும், பெண்களும் இத்தலத்திற்கு வந்து தேவியைத் தரிசித்து, இராகு கால பூசை செய்தால் தடைகள் நீங்கும். 

விரைவில் திருமணம் நடக்கும். இந்தத் தலத்தில் உள்ள குளத்தில் நீராடி, நெய் விளக்கு ஏற்றி, பூக்களால் அர்ச்சனை செய்தால் தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும், குழந்தைப் பேறு வாய்க்கும், 

கல்வியில் சிறப்படையலாம். நீண்டகாலமாக இழுபறியாக இருந்து மனஉளைச்சலையும், பணக்கஷ்டத்தையும் ஏற்படுத்தி வரும் கோர்ட்டு வழக்குகள் இந்தத் துர்கையை வாரந்தோறும் வந்து வழிபட்டுச் சென்றால், 

சீக்கிரமாக முடிவுக்கு வரும், வெற்றியும் கிடைக்கும். அஸ்திவாரம் எடுத்து கட்டிமுடிக்க முடியாமல் தடைப்பட்ட வீடுகள், கட்டடங்கள் ஆகியவற்றினால் பணத்தொல்லைகள், 

மனக்கவலைகள் இவற்றினால் தூக்கம் கெட்டுத் தவிக்கும் பக்தர்கள் ஒரு முறை கதிராமங்கலம் வாருங்கள். வனதுர்கா தேவியைத் தரிசித்து மனமுருக வேண்டுங்கள். பிறகு பாருங்கள், பலவருடமாக குட்டிச்சுவராக நின்ற இடம் கோபுரமாக உயர்வதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள்.

 கைவிட்டுப்போன கணவனை எண்ணி, கதர், கார் விட்டு, தன் குழந்தைகளை வளர்க்க வழியறியாமல் திகைத்து, பெண்கள் வனதுர்காதேவியின் பாதங்களில் ர அடைகிறார்கள். 

மிக விரைவிலேயே அவர்களது தோறாளை அன்னை தீர்த்து வைக்கிறாள். பிரிந்த கணவன் விரைவில் வந்து சேர்கிறான், இழந்த துணையைப் பெற்று குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. 

கலிகாலத்திலும் இது போன்ற அதிசயங்களை அன்னை தனது பக்தர்களுக்காக நிகழ்த்தி வரும் தலமே கதிராமங்கலம். வாழ்விப்பாள் வன துர்கா! வளமெல்லாம் அவள் தருவாள் 

ஏரிகாத்த ராமர் கோயில் புராணம் 

மிருக சீரிஷ நட்சத்திரக்காரர்கள் சென்று வழிபட வேண்டிய மற்றொரு பரிகாரத் தலம் சென்னைக்கு அருகே மதுராந்தகத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஜனகவல்லி உடனுறை ஏரிகாத்த ராமர் திருக்கோயில், 

இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக வைத்து எண்ணப்படவில்லை என்றாலும் மக்களால் போற்றப்படும் தலங்களில் முக்கியமானது. இந்தத் திவ்ய தேசத்தில் எழுந்தருளி இருக்கின்ற பெருமாள் ராமன் கோதண்டராமன. 

ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் அதிகமான மழை பொழிவதும் அதனால் வருடாவருடம் ஏரிகளில் உடைப் பெடுத்து, விளைநிலங்கள் பாழாவதும் தொடர்ந்து நடந்தது. 

ஆங்கிலேய அதிகாரிகளிடம் ஊர்மக்கள் சென்று முறையிட்டனர். வெள்ளம் பெருக்கெடுக்கிறது, ஏரிக்கரை உடைந்து போய்விடும் அபாயம் இருக்கிறது.

அது உடைந்தால் பயிர்கள் நாசமாவதோடு, சிறிய கிராமங்களும் மூழ்கிவிடும், எனவே ஆவன செய்யுங்கள் என்று வேண்டினர். 

அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த லயனல் ப்ளேஸ் என்பவர் கிண்டலாக நீங்கள் கோயில்கட்டி கும்பிடு கிறீர்களே அந்த ராமர் உங்களைக் காப்பாற்றமாட்டாரா? என்று கிண்டலாகக் கேட்டார்.

ஊர்மக்கள் ஒரே குரலில் எங்கள் ராமா நிச்சயமாக எங்களை மட்டும் அல்ல உங்களையும் சேர்த்துக் காப்பாற்று பார் என்று சொல்லிவிட்டு பகவானிடம் முறையிட்டு தங்களைக் காக்குமாறு வேண்டுதல் விடுத்தனர். 

மழைவிடாமல் பெய்தது. அன்று இரவு ஏரிக்கரை உடைத்துக் கொள்ளும் அபாயம் இருப்பதை அறிந்து, மாவட்ட ஆட்சியர் நிலைமையைத் தெரிந்து கொள்ள ஒரு குடையைப் பிடித்துக் கொண்டு வந்து ஏரிக்கரையைப் பார்வையிட்டார். 

வானத்தில் இருந்து மழை கொட்டியது எங்கும் கும்மிருட்டு. வெள்ளத்தினால் நிச்சயமாக கரை உடைப்பெடுக் கும் என்ற அச்சம் கலெக்டருக்கு ஏற்ட்டது. என்ன செய்வது என்று திகைத்தபடியே அங்கும் இங்கும் பார்த்தார். 

கரை மீது அவர் பார்வை சென்றது. போர்வையாகப் போர்த்தியிருந்தது. அப்போது திடீரென்று ஒரு மின்னல் வெட்டியது, ஒரு அற்புதமான காட்சியை அவர் கண்டார். 

ஏரிக்கரையின் மீது இரண்டு தெய்வீக அழகோடு கூடிய வாலிபர்கள் நின்று ஏரியைக் காவல் காத்தபடியிருந்தனர். அவர்களது முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது. 

அவர்கள் இருவரும் கைகளில் வில்லும் அம்பும் வைத்திருந்தனர். அவர்கள் ஏரியை உற்றுப் பார்த்தபடியே எதிரும் புதிருமாக உடைப்பெடுக்கிறதா என்று நடந்து எங்காவது கரை கண்காணித்ததைக் கலெக்டர் பார்த்து வெலவெலத்துப் போய்விட்டார். 

ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் அந்தக் காட்சி அவருக்குத் தரிசனமாகியது, ஆனால் அவர் நெஞ்சில் ஆழப்பதிந்து விட்டது. அவர் உள்ளம் நெக்குருகியது, 

மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் குணநலன்கள் mirugasirisham nakshatra characters in tamil வழிபட வேண்டிய தலங்கள் திருமண வாழ்க்கை தொழில்

சிறப்பம்சம் 

இந்துக்களின் தெய்வமான ராம லட்சுமணர்களே அந்த வாலிபர்கள். தெய்வங்கள் நேரில் வந்து மக்களைக் காப்பாற்றுகிறது என்பதை அறிந்த அவர் அங்கேயே கத்தோலிக்க முறைப்படி மண்டியிட்டு தொழுதுவிட்டு தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார். 

மறுநாள் காலையில் ராமரும், இலட்சுமணரும் தனக்கு தரிசனம் கொடுத்த காட்சியை மெய்சிலிர்க்க மக்களிடம் தெரிவித்தார் மாவட்ட கலெக்டர். பிறகு அவர் ராமபக்தராக மாறிவிட்டார். 

கோயிலுக்கு திருப்பணிகள் செய்தார். ஸ்ரீ தாயார் சந்நிதியைப் புதிதாகக் கட்டிக்கொடுத்தார். தனக்கு ராமபிரான் அருள் செய்த சம்பவத்தை கல்வெட்டிலும் பதிக்கச் செய்தார். 

ஏரி உடையாமல் காத்த காரணத்தினால் இப்பெருமான் ஏரிகாத்த ராமர் என்று போற்றப்படுகிறார். ராமர் ஆலயம் என்றாலும் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக கருணாகரப் பெருமாள் பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறார். 

சீதையைத் தேடிய போது ராமர் இங்கு வந்து இத்தலத்துப் பெருமாளை பூஜித்ததாகவும் வரலாறு உண்டு. சென்னை திண்டிவனம் நெடுஞ்சாலையில் மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் அருகில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. 

சிவனருள் மிகுந்த மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று ராமபிரானைத் தரிசித்தால் எப்படிப்பட்ட தோஷமும் விலகும். திறமைக்கும் உழைப்பிற்கும் பலன் கிடைக்காமல் அவதிப்படுபவர்களும், 

வெளிநாட்டுத் தொடர்புகள் சரிவரக் கிடைக்காமல் தொழிலில் முடங்கி இருப்பவர்களும், அரசியலில் பெரிய பதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர் களும், விளையாட்டுத் துறையில் பிரகாசிக்க விரும்புகிறவர்களும், 

புதிய வாழ்க்கைத் துணையை ஏற்க நினைப்பவர்களும் இந்தக் கோயிலுக்கு வந்து எம்பெருமான் ஸ்ரீ ராமபிரானைத் தரிசித்தால் தோஷங்கள் விலகி, நல்ல பலன்கள் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தின் குணநலன்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button