Sunday, December 5, 2021
No menu items!

மேஷ ராசி பரணி நட்சத்திரம் | mesha rasi bharani nakshatra

Must Read

Table of Contents

மேஷ ராசி பரணி நட்சத்திரம்

மேஷ ராசி பரணி நட்சத்திரம் 3 நட்சத்திரங்கள் கொண்ட முக்கோண வடிவம் ‘பரணி மும்மீன் அடுப்புப்போல’ மார்கழி மாதம் இரவு சுமார் 10 மணிக்கு உச்சியில் காணப்படும். அப்போது கடகம் தோன்றி 4 14 நாழிகை.

உதயமாகி 24 நாழிகைக்கு மேல் 4 நாழிகை வரை விஷ நாடி, தியாஜ்யம். இதில் அவசியம் யாத்திரை செய்ய விரும்பினால் முதலில் 7 நாழிகைக்குப் பிறகு அரிசிமாவினால் செய்த தின்பண்டம் உட்கொண்டு கிழக்கு, வடக்கு ஆகிய திசைகளில் பிரயாணம் செய்ய சுபம்.

இந்த நட்சத்திரத்தில் ஜூரம் கண்டால் 21 நாட்கள் வரை பிராண அபாயம். எமதர்மராஜனுக்கு சாந்தி செய்யவும்.

இது உபகுல நட்சத்திரம் – யுத்தத்திற்கு செல்வோர் வெற்றி பெறார். ஆனால் பிறர் சொத்தை அனுபவிப்பார்.

‘ஆதிரை பரணி கார்த்திகை ஆயில்யம் முப்பூரம் கேட்டை

தீதுறு விசாகம் சோதி, சித்திரை மகம் ஈராறும்

மாதனங் கொண்டார் தாரார். வழி நடைப்பட்டார் மீளார்

பாய் தனில் படுத்தால் தேறார் பாம்பின் வாய்த்தேரை தானே’

பரணி நட்சத்திரம் பிறந்தவரின் குணம்

உண்மையைப் பேசுபவன், நோயற்றவன், துக்கமற்றவன், தொடங்கிய காரியங்களைப் பூர்த்தியாய்ச் செய்து முடிப்பவன், ஸமர்த்தன், ஸகத்தை அடைந்தவன் (பிருஹத் ஜாதகம்) மேஷ ராசி பரணி நட்சத்திரம் .

அங்கவீனன், தனமுடையவன், நன்றி இல்லாதவன், கெட்டவன், பிறர் மனைவி மேல் காதல் உடையவன் (ஜாதக பாரிஜாதகம்) .

சாஸ்திரங்களைச் சொல்லுவோன், நோயில்லாதவன், மனோ தைரியமுடையவன், அநேக விஷயங்களை அறிந்தவன், புத்திசாலி, உண்மை விஷயங்களைப் பேசுவோன். திடமான விரதமுடையவன் (யவன ஜாதகம்).

தாய் தந்தையர்க்கு அன்புடையவன், ஞானி, சிறிது நேரம் தூங்குபவன். சிறிது கோபி, தர்மம் செய்பவன், செல்வமுடையவன், மானி, புகழில் சிறந்தவன்.

தாம்பூலப் பிரியன், சொற்சாதுரியன், சரீரத்தின் கண் வலது பக்கத்தில் மறுவுடையவன். வல்லமை சாலி, மனைவி சொல்லில் பிரியம் உடையவன், சிறிய மோவாய்க்கட்டையுடையவன். (சாதக அலங்காரம்) கடைசி குழந்தை இதில் பிறந்தால் குடும்பத்தைக் கெடுக்கும்.

‘குட்டிச்சுக்கிரன் கொட்டிக் கெடுக்கும்’. பெண் ஜாதகம் ஸ்த்ரீ வர்க்கத்துடன் கூடினவள், கொடூரமான சுபாவம் உள்ளவள், சண்டையிடுவதில் பிரியம் உள்ளவள். கெட்ட சித்தம் உள்ளவள், ஐசுவரியங்கள் அற்றவள், நல்ல பெருமையற்றவள், எப்பொழுதும் கெட்ட வஸ்திரங்களை அணிபவள் (ஸாராவளி 2-3-4) மேஷ ராசி பரணி நட்சத்திரம்

பரணி நட்சத்திரம் 1-ம் பாதம்

மிகு பராக்கிரமன், கனபல நீதியும் உள்ளான். பகைவர்களாம் யானைக்குச் சிங்கத்தையொத்தவன் (சாதக அலங்காரம்).

சூரியன் தலைவன் அரசன் போல் விளங்குவார். அரசனால் பூஜிக்கத் தக்கவர் – சர்வ லட்சணங்களும் சம்பூர்ணமாக அமைந்தவர். சுகமான வாழ்க்கை நடத்துவதில் ஆர்வம் உள்ளவர். அழகாக இருப்பார்.

எதையும் அறிந்தது போல காட்டிக்கொள்வது மட்டுமில்லை. பிறரையும் அப்படியே நம்பவைப்பதில் சமர்த்தர். பகைவர்களை எளிதில் வெல்வார். எப்பொழுதும் நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்.

பரணி நட்சத்திரம் பெண் ஜாதகம்

பதி விரதை (பிருஹத் ஜாதகம்)

ஸ்வபாவம், ஐச்வர்யம் (பலதீபிகை) ஸாத்வீ (பாரிஜாதகம்)

கணவனால் விரும்பப்பட்டவள் புதல்வர் பேறுடையவள், மிக்க செலவினால் வருந்துபவள் ஓராசாரம்) .

பரணி நட்சத்திரம் 2-ம் பாதம்

மேஷ ராசி பரணி நட்சத்திரம் ஹைதராபாத் நிஜாம், ஜோதிடர் பி.எஸ். ராவ், நிபுணன், மானி, சோம்பல் உள்ளவன், குணமுள்ளவன். புத்திமான், காமி, தருமன், சாத்திரம் உரைப்பான் (சாதக அலங்காரம்).

சிறப்பான ஆரோக்கியமிராது. கூச்சம், தாழ்வு மனப்பான்மை அதிகம். மற்றவர்களைச் சார்ந்திருப்பார் (ஜோதிடமும் மருத்துவமும்) புதன் தலைவர் – பணவிஷயத்தில் சிக்கனம், குழந்தை அதிகம் இராது. மனைவி மக்களுடன் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாது.

பரணி நட்சத்திரம் பெண் ஜாதகம்

மானம், கணம், புத்தியுடையவள், காமி, தருமம் செய்வாள், புராண சாஸ்திரங்களில் விருப்பம், நிபுணி (ஆதி ஜாதக ரகஸ்யம்).

பரணி நட்சத்திரம் 3-ம் பாதம்

ஜனாதிபதி ரீகன், சோனியா காந்தி.

மிக்க கோபம் உடையவன், திரட்சியான கண்களையுடையவன். தனமுள்ளவன். மானமுடையவன், மகிழ்ச்சியுடையவன், நற்குணமுள்ளவன், உயர்ச்சியானவனுமாவான் (சாதக அலங்காரம்).

சுக்ரன் தலைவர். எல்லோருக்கும் அபயமளிக்கும் பிரபு. அமைதி வாய்ந்த புத்திமான், மிகுந்த உற்சாகமுள்ளவள்.

பிறர் ரசிக்கும்படியாக பேசுவார். எப்போதும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுவார். எளிதில் ஆத்திரப்படும் சுபாவம் தன்மானம் மிக்கவர். எடுக்கும் காரியங்களில் வெற்றியும் ஆதாயமும் பெறுவர். வசதியுடன் வாழ்வார்.

பரணி நட்சத்திரம் ஜாதகம்

கண்ணியமுடையவள், மானி, சற்குணம், சந்தோஷமுடையவள். எவர்க்கும் நன்மையுடையவள் (ஆதி ஜாதக).

பரணி நட்சத்திரம் 4-ம் பாதம்

திப்பு சுல்தான். சுவாமி சின் மயானந்தா, வில்லியம் ஷேக்ஸ்பியர், காரல் மார்க்ஸ்.

அரசர்களிடத்தில் தொழில் செய்பவன், கொடியவன், யான் எனதென்னும் அகங்காரமுடையவர். (சாதக அலங்காரம்) கோபக்காரர் தன்னைத் தானே உயர்வாக மதிப்பவர்.

பரணி நட்சத்திரம் பெண் ஜாதகம்

ஸ்தூல தேகம், கோபி, இராஜ கன்னிகைகளிடத்தில் ஏவல் புரிபவள் (ஆதி ஜாதக ரகசியம்).

கார்த்திகை நட்சத்திரம்

அனில் அம்பானி, ஞானானந்த கிரி சுவாமிகள். கத்தி போன்ற வடிவம். 6 நட்சத்திரம் கொண்டது. திராட்சைப்பழ கொத்து போன்ற உருவமாகும். மார்கழி மாதம் இரவு 11 மணிக்கு உச்ச வானில் காணலாம்.

30 நாழிகைக்கப்பால் 3 நாழிகை வரை விஷ நாடி பிரயாணம் நீக்கத் தக்கது. அவசியம் போக வேண்டுமென்றால் தயிரன்னம் உட்கொண்டு கிழக்கு வடக்கு திசைகளில் பிரயாணம் செய்யலாம்.

நோய் ஜூரம் தோன்றினால் 9 நாட்கள் நீடிக்கும். அக்னி பகவானை பூஜிக்க பரிகாரம்.

புதன் கார்த்திகை அமிர்தயோகம்

வெள்ளி கார்த்திகை சுபயோகம்.

இப்படிப்பட்ட தினத்தில் ஜெனைமானால் அதுசுப ஜெனனமாகும்.

வைகாசி மாதம் அமாவாசையன்று கார்த்திகை குறுக்கிடும் என்பதால் இதில் பிறக்கும் ஜாதகர்கள் அசகாயகரர்களாகவும், உலகப்புகழ் பெற்றவராகவும், கோடீஸ்வரராகவும், அரசியல் புகழ் உடையவராகவும் விளங்குவார்.

கார்த்திகை நட்சத்திரம் பலன்

நாடெங்கும் புகழுடையவன், அழகுள்ளவன், ஆகாரம் அதிகமாகப் புசிக்க விருப்பமுள்ளவன். பிறருடைய மனைவியின் மேல் காதலுடையவன்.

வலிவுள்ளவன், புத்தி கூர்மையுள்ளவன், கம்பீரமாயிருப்பவன், மிகவும் உபயோகமுள்ளவித்தை அறிந்தவன் (ஜாதக பாரிஜாதகம்) மெதுவாகவும், நயனமாகவும் பேசுபவன், மிகு உண்டி யுண்பவன் (மங்களேஸ்வரியம்).

இனிப்பான வஸ்துக்களில் பிரியமுடையவன், சிறிது நேரம் தூங்குகின்றவன். வெளிப்படையாக சொற்களை தெளிவாகப் பேச வல்லவன், பொய் பேசிப் பொருளைத் தேட வல்லவன், புத்திமான், 30 அரசர்களுக்குப் பிரியன், பிறரால் உபசாரம் பெறுவோன, தேவ வன்மையின் பெருமையிற் சிறந்தவன். வஞ்சக மனத்தன், மா மறுவுடையவன், துணிவாக வழக்குகளைச் சொல்லுவோன் (சாதக அலங்காரம்).

தேஜசுடையவன், நியாய சாஸ்திர முணர்ந்தவன், போதனப் பிரியன், ஜனத்தலைவன், காம்பீர்யமுடையவன். சமர்த்தன், அபிமானமுடையவன் பரிசுத்தன் (யவன ஜாதகம்).

கார்த்திகை நட்சத்திரம் பெண் ஜாதகம்

அதிகக் கோபமுள்ளவள், சண்டையிடும் நோக்கமுள்ளவள், விரக்தை, எதையும் துவோசிப்பவள், பந்து ஜனங்களற்றவள், அதிகம் சிலேஷ்ம வியாதியுள்ளவள், எப்பொழுதும் இளைத்த தேஹமுள்ளவள், (ஸாராவளி 2-3-5).

கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதம்

ஆசாரன், வித்துவான், பிரபு, இலாபமுள்ளவர், சூரன், நேசன், புத்திமான், ரோக (சாதக அலங்காரம்).

குரு அம்சம்-சமர்த்தர், பிரதாபம் வாய்ந்தவர், பணக்காரர் (நட்சத்திர குண கண்ணாடி ஆரோக்கியம் சீராக இருக்காது. ஜீரணக் கோளாறு அடிக்கடி வரும் ஜோதிடமும் மருத்துவமும்) எப்பொழுதும் நண்பர்கள் சூழ இருப்பார்.

கார்த்திகை நட்சத்திரம் பெண் ஜாதகம்

ஆசாரம், கல்வி, இலாபம், தேகதிடம், புத்தியுமுடையவள், பிரபலமாக வாழ்வாள், ரோகமுடையவள். பண்டிதையாகவுமிருப்பாள். (ஆதி ஜாதக ரகசியம்).

மேஷ ராசியை கிரகங்கள் பார்த்த பலன்

சூரியன் பார்த்தால்

பொன் இல்லாதவன் (சாதக அலங்காரம்)

தனமற்றவன் (பிருஹத் ஜாதகம்) (பலதீபிகை)

அதிக உக்கிரமான சுபாவமுடையவன், தீரன், அரசர்களால் கௌரவமுடையவன், யுத்தத்தில் வல்லவன் (ஜாதகா பரணம்).

மிகவும் குரூர சுபாவம், அரசர்க்கு நிகரான ஐசுவரியம், எவன் தன்னை வணங்குகிறானோ அவன் மீது மிகவும் இரக்கம் கொள்பவன். உபகாரி, அழகான சுபாவமுடையவன் – பண்டிதன்.

அரசரால் வெகுமதிக்கப் பெற்றவன், போரில் ஆவல் கொண்டவன் போர் புரிவதில் தீரன் நட்சத்திர குண கண்ணாடி.

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் | மேஷ ராசி குணங்கள்

செவ்வாய் பார்த்தால்

அரசன் (பிருஹத் 19-1). செங்கோல் நடத்தும் அரசன் (சாதக அலங்காரம்). பூமி லாபம் உடையவன் (பிரும்மரிஷி பூமிக்கு நாயகன் (பலதீபிகை) விஷம், அக்னி, வாதம் அல்லது அஸ்திரபயம் உடையவன். சிற்சில சமயங்களில் மூத்திரம் கிரீச்சுர நோயினால் அதிக துன்பமுடையவன், தந்த நோய் நேத்திர நோய் உடையவன் (ஜாதகா பரணம்). அரசாங்க ஆதரவு உள்ளவன் (நட்சத்திர குண கண்ணாடி.

புதன் பார்த்தால்

வித்வான் (பலதீபிகை) பண்டிதன் (பிருஹத்) அதிக வித்தை (சாதக அலங்காரம்) பிரகாசம், கீர்த்தி, சகல சாஸ்திரங்களிலும் பிரவீனன், தனம், நற்குணம் இவைகளுடையவன். சத்சன சம்மதத்துடன் சிரேஷ்ட சம்பத்துக்களையுடையவன் (ஜாதகா பரணம்) கல்வித் துறையில் ஆச்சார்யன், வித்துவான்களால் கொண்டாடப் பெறுவான். பணக்காரன். உத்தம கவி, நற்குணவான், நல்லோரின் நண்பன். (நட்சத்திர குண கண்ணாடி).

மேஷ சந்திரன் – புதன், சுக்ரன் – நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

குரு பார்த்தால்

அரசனுக்கு ஒப்பானவன் (பிருஹத்)

அரசர்களாலும் தேவர்களாலும் பூஜிக்கத் தகுந்தவன். (பிரும்மரிஷி புரவலன் (சாதக அலங்காரம்) மாமகிழ் பதி சமானன் (சாதக சிந்தாமணி) அரசர்க்கு மந்திரி அல்லது சேனைக்கு அதிபதி, தனது குலாநு சாரமாக அதிக ஐசுவரியங்களுடன் வாழ்வோன் (ஜாதகா பரணம்) பல பணியாளரை உடையவன், பெரும் பணக்காரன், அரசரின் அந்தரங்க மந்திரி, அல்லது சேனைத் தலைவன் (நட்சத்திர குண கண்ணாடி).

சுக்கிரன் பார்த்தால்

நல்லகுணமுள்ளவன் (பிரு ஜாதி நற்குணமுடையவன் (சாதக அலங்) ஸ்த்ரீ, ஆபரணம் சந்தானம் இவைகளையுடையவன், சுகத்தை அனுபவிப்பான், குரோதமின்றி சிரேஷ்டமாய்ப் பேசுவோன், குணவான் (ஜாதகா பரணம்) அரசனுக்கொப்பானவன் (பலதீபிகை) பிரபல நாவலாசிரியன், மிக்க பாக்கியம் வாய்ந்தவன் (நட்சத்திர குணக் கண்ணாடி)/

சனி பார்த்தால்

திருடன் (பிருஹத்) திருட்டுத் தனமும் பிடிவாதமும் உள்ளவள் (பிரம்ம மனோவியாகூலம் தன நஷ்டம், பொய் பேசுகிறவன், துஷ்ட புத்திகளையுடையவன் (ஜாதகா பரணம்)

மேஷம், விருச்சிக சந்திரன். இருபுறமும் பாபர்கள் ஆயுதம் மூலமாகவோ உஷ்ணத்தின் மூலமாகவோ முடிவு ஏற்படும்,

மேஷத்தில் சந்திரன்+சனி (செவ்வாயின் திரிம்சாம்சம்) இப்பெண் அழுக்கான துக்கமுள்ள தெருவில் அலைபனை செக்ஸ் உணர்வு கொள்வாள் (பிவிராமன்) மேஷ ராசி பரணி நட்சத்திரம்

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

நாளைய ராசி பலன் 06.12.2021

06.12.2021 திங்கள் கிழமை - ராசி பலன்கள்                 tomorrow rasi palan வணக்கம் நண்பர்களே!, நாம் இன்றைய நாளுக்கான ராசி...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img