மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் | மேஷ ராசி குணங்கள்

மேஷ ராசி குணங்கள்

mesha rasi ashwini nakshatra மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசி குணங்கள் மேஷத்தில் சந்திரன் நின்ற பலன் சீக்கிரத்தில் சந்தோஷம் அடையவன், பொருள்களை சம்பாதித்து அதை உடனே சிலவு செய்பவன், பலமுடைய சரீரம் உடையவன், காமி, அதிக தூரம் நடந்து செல்வான், பராக்கிரமம் உடையவன், பெண்களிடம் கலவி செய்ய சலியாதவன், சபலன். நீரைப் பார்த்து அச்சம் கொள்பவன்.

முழங்காலில் பிணியுள்ளவன் (சாதக அலங்காரம்), பலமற்ற கணுக்கால் உள்ளவன், கொரே சுபாவம் உள்ளவன். ஜலத்தில் பயமடைபவன், சீக்கிரம் சாப்பிடுகிறவன், அதிக காமம் உள்ளவன், வெளியில் அலையும் சுபாவம் உள்ளவன். நிலையற்ற சித்தமுள்ளவன்.

பொய் பேசுபவன், புண்ணின் வடு நிறைந்த அங்கமுள்ளவன் (பலதீபிகை) சூடான ஆகாரத்தை உட்கொள்பவன், சீக்கிரமாய் சாப்பிடுகின்றவன், வெகு சீக்கிரத்திலேயே கோபசாந்தி அடையவன், அங்குமிங்கும் அலைந்து திரிபவன், ஸ்த்ரீ போகத்தில் மிக்க பற்றுள்ளவன்.

வலுவற்ற முழந்தாளை உடையவன், அனுகூலமுள்ள களத்திரமுள்ளவன். நகத்தில் சொத்தையுள்ளவன், வடுவுள்ள சிரஸ்ஸை உடையவன், கர்வமுள்ளவன், காரியத்தில் நிலைபெறாதவன், ஜலத்தில் பயமுள்ளவன். (பிருஹத் ஜாதகம்) மூர்க்கத்தனம்.

அதிக தைரியம், எதற்கும் அஞ்சாத முரட்டு சுபாவம், முன் கோபமும் காணப்படும். சுதந்தர மனப்பான்மையுடையவர். சுய கட்டுப்பாடு இவருக்கு பிடிக்காது. புத்தி சாதுர்யத்தினாலும், சமயோசித யோசனையினாலும் பிரபலமாவார். நல்லதோ, கெட்டதோ தங்களுக்கு தோன்றியதைச் செய்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதம் காணப்படும் mesha rasi ashwini nakshatra.

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம்

குதிரையின் முகம் போல் 6 புள்ளிகளின் வடிவில் இந்த நட்சத்திரம் காணப்படும். ‘அசுவதி அறுமீன் குதிரைத் தலை போல’.

கார்த்திகை மாதம் 20ந் தேதிக்கு மேல் இரவு 9 மணி சுமாருக்கு உச்சி நேராகத் தெரியும். அப்பொழுது கடக ராசி உதயமாகி 2 நாழிகை சென்றதாக அறிய வேண்டும்.

இது உதயமானது முதல் 50 நாழிகைக்கு மேல் சூரிய கிரணத்தால் தாக்கப்பட்டு 4 நாழிகை வரை விஷ கிரணங்களை வெளிவீசும் நேரம் தியாஜ்யம் விஷகடிகை எனப்படும்.

இந்த நட்சத்திரத்தில் பயணம் போவதானால் உளுந்து வடை தின்று போதல் நலம். இந்த நட்சத்திரத்தில் காய்ச்சல் நோய் கண்டால் 9 நாட்கள் வரை தொடர்ந்து வாதனை செய்யும்.

ஞாயிற்றுக்கிழமையில் அசுவினி – ஆனந்த யோகம்.

ஞாயிறு -சப்தமி திதியில் அசுவினி – உத்பாத யோகம் மிகக் கொடியது.

திங்கள் – அசுவினி கடயோகம்.

செவ்வாய் அசுவினி – சித்தயோகம் செவ்வாய் அஷ்டமியன்று அஸ்வினி உத்பாத யோகம் மிகக் கொடியது

புதன் – அஸ்வினி – மிருத்யு யோகம் – கஷ்டம், நஷ்டம்

வியாழன் – அசுவினி கலயோகம் பயங்கரம்

வெள்ளி – அசுவினி எந்திரம யோகம் பயனற்றது

சனி  – அசுவினி – நிர்ஜீவ யோகம் உயிரற்றது.

இந்த நட்சத்திரத்தன்று கைவிட்டு நஷ்டமான பொருள் மிகவும் ஆயாசத்தின் மீதும், தூரம் சென்றும், அலைந்தும் கிடைக்கத் தக்கது என்பது ஆருட சாஸ்திரம். அலங்காரப் பிரியன் – அழகிய ரூபமுள்ளவன், எல்லா ஜனங்களுக்கும் பிரியமானவன். புத்திசாலி. (ஆபரணங்களின் மேல் ஆசையுள்ளவன் – காரிய சமர்த்தன் (பிருஹத்) ஜாதகம் 16-1)

தனமுடையவன். அடக்கமுடையவன், கீர்த்தியுடையவன், சுகமாய் வாழ்வான் ஜாதக பாரி ஜாதகம்)

தனவான், சூரன், நேத்திர ரோகி, சாமர்த்தியமுள்ளவன், நல்ல சாரம் உடையவன் (யவன ஜாதகம்)

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் பெண் ஜாதகம்

மனத்திற்குப் பிடித்தவள், அதிகமான பொக்கிஷமுள்ளவள், அழகிய பார்வை உள்ளவள், பிரியமாகப் பேசுகின்றவள், எல்லாவித சுகத்தினாலும் அழகியவள், சுத்தர்களுடன் சேர்ந்தவள் தேவதை, குரு இவர்களிடத்தில் பற்றுள்ளவள் (ஸாராவளி 2-115)

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் பிறந்தவர்

செய்கருமம் வழுவாமல் செய்வன் மட வார்நேயன் தியாகி தீரன் பொய் சொல்லான், ஆபரணப் பிரியன், அற்பகோபி பெறும் புகழே உள்ளான்.

தூய விழி சிவிந்திருப்பன் மார்பு அகலம் உளன் சமர்த்தன் தூயன் ஆகும்.

ஐயம் இலா நெற்றி உயர்ந்தே யிருப்பன் சாந்தன் அசுபதியினானே (சாதக அலங்காரம்)

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் 1-ம் பாதம்

கவியரசு கண்ணதாசன், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ். இது செவ்வாயின் அம்சம். முரட்டு சுபாவம் கொஞ்சம் அதிகம் உடையவர். சிறிது திருட்டுக் குணம் கலந்திருக்கும்.

இவன் சுயமாக சம்பாதித்து சொத்து சேர்ப்பான். ரசித்து வாழ ஆசைப்படுவார். அஞ்சா நெஞ்சம் உடையவர். பிற பெண்கள் மீது அதிக ஈடுபாடு. போர் செய்யும் குணம், அஞ்சா நெஞ்சம் உடையவர். கோள் சொல்லும் குணமும் சிறிது கலந்திருக்கும். சோர்வு அதிகமிருக்கும் mesha rasi ashwini nakshatra.

Tomorrow Rasi Palan In Tamil March 14, 2021 ராசிபலன் – Astrology

அஸ்வினி நட்சத்திரம் பெண் ஜாதகம்

கோள் சொல்லுவாள், சஞ்சலமுடையவள், பாபி, ரூபக்குறைவு உடையவள். அன்னியர்கள் மீது அன்பும் பிரியமும் உடையவள் (ஆதி ஜாதக ரகசியம்)..

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் 2-ம் பாதம்

ஜோதிடர் லஹிரி, ஜாக்குலின் ஓனாசீஸ்

தார் செறி பிறரின் குணத்தினை அறிவான்

சவுந்தர வான் நலம் புரிவான்

சாத்திரம் உரைக்கும் ஞானத்தின் பார்வை

தரும் இரு காலினில் செனித்தோன். (சாதக அலங்காரம்)

சுக்ரன் அம்சம் செல்வம் சேர்ப்பதிலும், தர்மம் செய்வதிலும் விருப்பம். கலையில் ஈடுபாடும், புகழில் விருப்பமுமிருக்கும். மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்வார். தயாள குணமுள்ளவர். வாதம் செய்வதில் வல்லவர் டாம்பீகமாகப் பேசுவார்.

அஸ்வினி நட்சத்திரம் பெண் ஜாதகம்

ரூபவதி, எல்லோர் மீதும் பிரியம் உடையவள், எதிரிகளின் குணத்தை அறிந்து கொள்வாள். எவருக்கும் புத்தி உரைப்பாள். தருமம் செய்வாள், புத்திரர் உள்ளவள் (ஆதி ஜாதக).

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் 3-ம் பாதம்

L.K. அத்வானி. கணித வித்தையில் பிரியன். மேன்மையான அறிவை போதிப்பவன். நல்ல கருமங்களை மனதில் கருதுவோன் மலரோகி. புதனின் அம்சம் – மிக சமர்த்தர் – நண்பர்கள் அதிகம் கமான வாழ்வு. எதிரியை வெற்றி கொள்ளும் சாமர்த்தியம் பருங்குடல் தொடர்பான பிரச்சினை. செல்வம் திரட்டுவா – போகவான்.

அஸ்வினி நட்சத்திரம் பெண் ஜாதகம்

நற்குணம், எவருக்கும் புத்தி உரைப்பாள், தருமம் செய்வாள், மூல ரோகம் (ஆதி ஜாதக)

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் 4-ம் பாதம்

வளைந்த சரீரமுடையவர், சிறந்த அறிவு உள்ளவர். சோதிட சாஸ்திரம் உணர்ந்தவர், இந்திர போகம் உள்ளவர். சிற்றின்பத்தில் பிரியர், உண்மை நெறியுடையவர்.

இது சந்திர அம்சம். தெய்வ பூஜையில் விருப்பம் உடையவர். சதா தர்மகாரியத்தில் ஆசையோடு ஈடுபட்டிருப்பவா. தர்ம ஸ்தாபனங்களை இவரிடம் நம்பிக்கையுடன் ஒப்படைக்கலாம்.

அஸ்வினி நட்சத்திரம் பெண் ஜாதகம்

கற்பு, நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் 5 நற்குணங்களுடையவள். சத்திய வாக்குடையவள், கல்வி புகழ் உடையவள், வளமான தேகம், அதிக புத்தியுடையவள், காமி (ஆதி ஜாதக ரகசியம் mesha rasi ashwini nakshatra

Add Comment