கனவு பலன்கள் முன்னோட்டம் | kanavu palan in tamil

கனவு பலன்கள் முன்னோட்டம்  kanavu palan in tamil

கனவு பலன்கள் முன்னோட்டம்  kanavu palan in tamil விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில் ஆத்மாவாவது, பேயாவது என்று பலர் கூறினாலும் விஞ்ஞானம், நாம் காணும் கனவு உண்மைதானா என்பதை அறிய அதற்கும் மிஷினை கண்டுபிடித்தனராம். அது, நாம் என்ன கனவு காண்கிறோம் என்பதை நம் மூளையில் இருந்து அந்த மிஷின் பதிவு செய்யுமாம்.

கனவு எப்படி ஏற்படுகிறது என்றால், எதனை ஆழ்மனதில் நினைக்கிறோமோ அதுவே கனவாக மாறுகிறது. என்றாலும், இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது அந்த நபரின் உடலை விட்டு ஆத்மா வெளி உலகத்திற்கு உலவ செல்கிறது “என் கனவில் என் தந்தையின் ஆத்மாவிடம் பேசி விலை உயர்ந்த ஒரு பொக்கிஷத்தை எடுத்தேன் அதனால் அதை சாதாரண கனவு சொல்லமாட்டேன்” என்றார் பிரபல எழுத்தாளர் “தந்தோ’ என்பவரின் மகன்.

எழுத்தாளர் தந்தோ 1321-ல் காலமானார் அவர் எழுதிய டிவைன் காமெடி நூலின் கையெழுத்துப் பிரதியின் பெரும் பகுதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தந்தோவின் மகன் ஜாகப்போ, அதனை வீடு முழுவதும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

ஒருநாள் ஜாகப்போ ஒரு கனவு கண்டார். அதில், வெள்ளை ஒளிமயமாகத் தந்தோ தோன்றினார். அவரிடம் கையெழுத்துப் பிரதியைப் பற்றி ஜாகப்போ கேட்கிறார். “தனது பழைய அறையில் ரகசியமான இடத்தில் வைத்து இருக்கிறேன். ” என்று கூறி அந்த இடத்தை பற்றியும் தெளிவாக தந்தோ மகனிடம் கூறினாராம்.

kanavu palan in tamil

கனவு கலைந்து ஜாகப்போ கண் விழித்தார் தன் தந்தையிடம் பேசியது வெறும் கனவா அல்லது நிஜமா என்ற யூகிக்க முடியாமல் இருந்தாலும் ஒரு நம்பிக்கையில் தன் வழக்கறிஞர் நண்பரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தந்தை குறிப்பிட்ட அறைக்கு சென்ற ஜாகப்போ, அவர் குறிப்பிட்ட இடத்தின் சுவரில் பதிக்கப்பட்டிருப்பதை கண்டார் அதை அகற்றிவிட்டுப் பார்த்தபோது, உள்ளே டிவைன் காமெடி கையெழுத்து பிரதி கிடைத்தது.

அப்படி நல்ல தூக்கத்தில் இருப்பவர்களை திடீரென தட்டி எழுப்பும் போது, அந்த சமயத்தில் உடலைவிட்டு வெளியுலகத்தில் உலவ சென்ற ஆத்மா லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் மீண்டும் தூக்கத்தில் இருப்பவர்களின் என்கிறது உடலுக்குள் ஆத்ம சாஸ்திரம், வந்தடையும் தூக்கத்தில் இருப்பவர்களை தட்டி எழுப்பக் கூடாது என்கிறது தூக்கத்தில் மருத்துவமும். நல்ல இருப்பவரை இப்படி தினமும் தட்டி எழுப்பினால் அந்த நபர்க்கு மனநிலை பாதிப்பும் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள் kanavu palan in tamil.

இதற்கு நம் இந்து மய புராணம் என்ன சொல்கிறது? மகாபாரதத்தில் குருஷேத்திர போருக்கு தர்மர், கிருஷ்ணரின் ஆதரவு வேண்டி சென்றார். அப்போது கிருஷ்ண பரமாத்மா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

அதனால் தர்மர். கிருஷ்ணரின் கால் பகுதியின் அருகே சத்தமில்லாமல் நிதானமாக அமர்ந்தார். பிறகு கிருஷ்ணபரமாத்மா கண்விழித்தபோது தர்மரை பார்த்து, “எப்போது வந்தாய்.? ஏன் எழுப்பவில்லை.? என்றார் அதற்கு தர்மர். ஆத்மாவை ஏன் அவசரப்படுத்த வேண்டும்.

நிதானமாகத்தான் வரட்டுமே.” என்றார். இன்னொரு சம்பவம் இருக்கிறது. ஒருநாள் ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போது ஒரு பக்தர், “சுவாமி எங்கள் இல்லத்தில் நாங்கள் ஒரு பூஜை செய்கிறோம்.

அந்த பூஜையில் நீங்கள் வந்து கலந்து கொண்டால் கன்றாக இருக்கும்.” என்றார். சுவாமிஜியும், “நிச்சயம் வருகிறேன்’ என்றார். அந்த பக்தர் சொன்ன தேதியில் சுவாமியின் உடல்நிலை மேலும் சரியில்லாமல் இருந்தது.

அதனால் அன்று இராமகிருஷ்ண பரமஹம்ஸர் தன் அறையை விட்டு எங்கும் செல்லவில்லை. மறுநாள் அந்த பக்தர் சுவாமியை தரிசிக்க வந்தார். “சுவாமி உங்களுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தாலும் நீங்கள் என் வீட்டு பூஜைக்கு வருவீர்கள் உறுதியாக நம்பினேன்.

அதன்படி வந்து கலந்துக்கொண்டீர்கள் மிகவும் நன்றி. என்று சொல்லி ஆசி பெற்று சென்றார் பக்தர். அதை கேட்ட பரமஹம்ஸரின் உடன் இருந்தவர்கள், “சுவாமி… நேற்று உங்கள் உடல் நிலை சரியில்லாததால் அறையில்தான் ஓய்வில் இருந்தீர்கள். ஆனால் இவரோ, அவரின் வீட்டுக்கு நீங்கள் வந்ததாக சொல்கிறாரே? என்று கேட்டனர்.

அதற்கு இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்னார். “என் உடல்நலம்தான் சரியில்லை, ஆனால் என் ஆத்மா ஆரோக்கியமாகதானே இருக்கிறது. சில நேரங்களில் ஒரு வேலை செய்யும்போது, கவனம் மட்டும் வேறு எதிலோ இருப்பதைபோல, எந்த ஆத்ம சக்தி உடலை இயங்க வைக்கிறதோ, அதே ஆத்ம சக்தி உடலை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பி இயங்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.

ஆனால் அதுவே விதி வசத்தால் திரும்ப உடலுக்குள் நுழைய முடியாதபோது. உடல் அழிய காரணமாகிறது. அதனால்தான் பெரியவர்க்ள சொல்வார்கள்.

குழந்தை நன்றாக தூங்கும் போது குழந்தையின் முகத்திற்கு பவுடர் பூசுவது அல்லது ஒப்பனை செய்வது போன்ற செயல்களை செய்யக் கூடாது. அப்படி செய்தால், வெளியேறி சென்றிருந்த ஆத்மா திரும்ப வரும் போது, மாறியிருக்கிறதே.? தமது உடல் எது என்று அறிய முடியாமல் குழப்பம் அடையும் என்பார்கள்.!

கனவு என்றால் என்ன?

மனிதர்களின் அன்றாட நடவடிக்கைகளில் தூக்கமும் ஒன்று. உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்திற்குத் தூக்கம் மிகவும் அவசியம். தூங்கும் போது உடல் உறுப்புகளும், மூளையும் ஓய்வு பெறுகின்றன. எனவே, தூங்கி விழித்ததும் அவை புத்துணர்ச்சியினையும், புதிய ஆற்றலையும் பெறுகின்றன.

தூக்கம் என்பது ஓர் உடற்கூறியல் நிகழ்வு: அதாவது இரத்த ஒட்டம், உணவு செரிமானம், வளர்சிதை மாற்றங்கள் ஆகியவற்றைப் போலவே தூக்கமும் உடலின் ஒர் இயற்கையான செயல்பாடு, எனவே உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்குத் தூக்கம் மிகவும் அவசியம்.

மனிதர்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு நேரம் தூங்க வேண்டியது மிகவும் அவசியம். பொதுவாக, மனிதர்களின் குழந்தைப் பருவத்தில் ஒரு நாளின் பெரும்பகுதி தூக்கத்திலேயே கழிக்கப்படுகிறது.

பின்னர் வயதாக வயதாகத் தூங்கும் நேரம் குறைகிறது. ஆரோக்கியமான ஒரு சராசரி மனிதர் தினமும் ஐந்து மணி நேரம் தூங்க வேண்டியது உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.

மனிதர்கள் பொதுவாக அவர்களுடைய வாழ்க்யிைல் மூன்றில் ஒரு பகுதியைத் தூக்கத்தில் கழிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது மனிதருடைய ஆயுட்காலம் 90 ஆண்டுகள் என்றால் அவர் அவருடைய வாழ்நாளில் 30 ஆண்டுகள் தூக்கத்திலேயே கழிக்கிறார்.

அறிவியல் அறிஞர்கள் தூக்கத்தைப் பல நிலைகளாகப் பிரிக்கின்றனர். உடலின் மற்ற வளர்சிதை மாற்றங்களைப் போலவே தூக்கத்திற்கும் சில வேதிப்பொருட்களே காரணமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தூக்கத்தின் பல்வேறு நிலைகளில் அதிவேகக் கண் அசைவுத் (Rapid Eye Movement) தூக்கம் என்பது ஒரு இந்த வகைத் தூக்கத்தின் போது பல வகையான மனத் தூண்டுதல்களும், உணர்வுத் தூண்டுதல்களும் ஏற்படுகின்றன.

தூக்கத்தின் இந்த நிலையின் போது பால் உணர்வு தூண்டப்படுவதும் வழக்கம். இது போன்ற தூண்டுதல்களை நகரும் வகை. படக்காட்சி போல நாம் உணருவதே கனவு எனப்படுகிறது.

பொதுவாக நம்முடைய தொடர்பானதாகவும் அல்லது நாம் நேரடியாகப் பங்கெடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சிகள் போலவும் மற்றவர்கள் தொடர்பானதாகவும் அல்லது நாம் பார்வையாளராக இருந்து பார்க்கும் நிகழ்ச்சிகள் போலவும் கனவுகள் நமக்குத் தோன்றுகின்றன.

சரியாக என்ன காரணத்தினால் கனவுகள் ஏற்படுகின்றன என்பது இன்றும் திட்டவட்டமாகக் கண்டறியப்படவில்லை.

எனவே, அறிவியல் அறிஞர்கள் மத்தியில் கூடக் கனவுகளைப் பற்றிய பலவகையான கொள்கைகள் உள்ளன.

விழித்திருக்கும் புலன் உறுப்புகளின் வழியாக மூளையினுள் வரும் எண்ணற்ற தகவல்களை மூளை தூக்கத்தின் போது ஒழுங்குபடுத்தி வகை செய்வதே கனவுக்காட்சிகளாக வெளிப்படுவதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

ஒருவருடைய தீவிர ஆசைகள் அல்லது நிறைவேறாத ஆசைகள் அல்லது உறுதியான நம்பிக்கைகள் கனவுகளாக வெளிப்படுவதாக ஒரு கொள்கை கூறுகிறது. சில வகை நோய்கள்.

இயற்கை தூண்டுதல்கள் அல்லது மூளைக்குப் போதிய ஆக்சிஜன் அல்லது இரத்தம் கிடைக்காதது ஆகியனவும் கனவுகளுக்கு காரணமாக இருக்கின்றன.

தூங்கிக் கொண்டிருக்கும் போது உடலுக்கு ஏற்படக்கூடிய ஏதோ ஆபத்துகளுக்கான எச்சரிக்கையாகவும் சில சமயங்களில் கனவு வெளிப்படுகிறது.

கடுமையான சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதாக நினைக்கும் ஒருவர் அதிலிருந்து தப்பிக்க விரும்பும்போது அவருக்குப் பறப்பது போன்ற கனவுகள் ஏற்படுகின்றன.

ஒருவருக்கு சிறுநீர்ப் பை நிரம்பிவிடும் போது தண்ணீரைப் பற்றிய கனவுகள் தோன்றுகின்றன.

சில சமயங்களில் அவர் குழாயிலிருந்து தண்ணீர் கொட்டி, அந்தத் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருப்பது போல கனவு கண்டு திடீரென்று விழித்துக் கொள்வார். விழித்துப் பார்க்கும் போது சிறுநீர் முடுக்கும் அல்லது ஏற்கனவே சிறுநீர் கழித்திருப்பார்.

ஒருவர் தூக்கத்தில் சில சமயங்களில் ஏதாவது காரணத்தினால் மூச்சு விடுவதை நிறுத்திவிடும் போது மூளைக்குப் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் அது பயங்கரக் கனவாக வெளிப்பட்டு திடுக்கிட்டு விழித்துக் கொள்வார். மூளைக்குப் போதிய இரத்தம் கிடைக்காத போதும் அது பயங்கரக் கனவுகளாக வெளிப்படும்.

படுக்கையின் விளிம்புக்கு வந்து கீழே விழும் நிலையல் இருக்கும் ஒருவருடைய நீரை ஆவாகள் அல்லது நிறைவேறாத ஆசைகள் ஒருவருக்கு அது தொடர்பான எச்சரிக்கை கனவுகள் போலத் தோன்றி அவர் திரென்று விழித்தெழுந்து நாம் கீழே விழும் நிலையில் இருப்பதை அறிவார்.

மேஷ ராசி பரணி நட்சத்திரம் 

கனவு வருவதற்கான காரணங்கள்

  • உடலில் உள்ள பித்தம், வாதம் கபம் போன்ற தாதுக்கள் பாதிக்கப்படுதல்.
  • தசை மற்றும் புத்தி காலங்கள்.
  • எந்தப் பொருளையாவது பற்றி அதிகமாக நினைத்துக் கொண்டு அல்லது கவலைப்பட்டு கொண்டு இருத்தல்.
  • எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினைகள்.
  • உடலில் உள்ள ரகசியமான உள்நோய்கள்.
  • பிறருடன் முன்பு கொண்டுள்ள பழக்கம்.

கனவின் நிலைப்பாடுகள்

எந்தக் கனவுகளும் விருப்பத்திற்கு உட்பட்டு வருபவை அல்ல. அவை தன்னிச்சையாக நிகழும் மனதின் உள்ளுணர்வு வெளிப்பாடுகள் அவற்றுக்கும் பலன்கள் உண்டு, இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்திலும் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கணவு 1 மாதத்திலும் அருணோதயத்தில் கண்ட கனவு 10 தினங்களிலும் பலிக்கும்.

சுப சொப்பனங்கள் பசு. யானை தேவாலயங்கள், அரண்மனை. மலை உச்சி. விருக்ஷம் இவைகளின் மேல் ஏறுதல், மாமிச பக்ஷணம், தயிரன்னம் புசித்தல் வெள்ளை வஸ்த்திரம் தரித்தல், ரத்தின ஆபரணங்கள் காணல். சந்தனம் பூசிக் கொள்ளல். வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம், அகில், வெள்ளை புஷ்பம் இவைகளை கண்டால் சொற்ப சம்பத்து அகப்படுதல். கனவில் இவைகளை கண்டால் தனலாபம் உண்டு.

கனவு பலன்கள் நீர்

நீர் நிலைகளை நனவில் பார்த்தால் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. ஆறு பெருக்கெடுத்து ஓடுவது போல கனவு கண்டால் அடுத்தடுத்து நல்ல செயல்கள் நடக்கும் நீர் நிலைகளில் நீராடுவது போல் கனவு கண்டால் சுப பலன்கள் ஏற்படும். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லப் போகிறார் என்பதை இந்த கனவு தெரிவிக்கிறது.

குருவிக் கனவுகள்

குருவிகளைக் கனவில் காண்பது நோயுற்றிருப்பின் நோய் அகலும்.

குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக் கண்டால் திருமணமாகாதவருக்கு திருமணமும் திருமணமாகியிருந்தால் புத்திர பாக்கியமும் உண்டாகும். குருவிகள் கூட்டைப் பார்த்தால் கூட இந்தப் பலன் உண்டு.

ஆனால் குருவி தானே தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போலவும் தன் குடும்பத்துடன் இருப்பதைப் போலவும் கண்டால் குருவிகள் சண்டை போடுவதை போல கனவு கண்டால் குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டு பிரிய நேரும். தொழிலும் பகை ஏற்பட்டு ஜீவனக் கேடு உண்டாகும்.

குருவிகள் இறந்து கிடப்பதைக் கண்டால் கூட கெடுபலன். பலதொல்லை உண்டாகும். அடுப்பு சுவாலையுடன் எரிந்து கொண்டிருப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கி இலாபம் பெற நேரும்.

கனவு பலன்கள் பாம்பு

பாம்பு ஒருவர் மீது ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால், அவருக்கு இருந்த கண்டம் அல்லது கெட்ட நேரம் விலகிச் சென்று விட்டதாகக் கருதலாம். எலுமிச்சப் பழத்தைக் காண்பது நல்லது.

தனக்கு ஒருவர் சகல பாக்கியங்களும் கிடைப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி பெருகும். அப்பழத்தைச் சாப்பிடுவதாகக் கண்டால் தொழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும். நல்ல கனவுகளைக் கண்டால் என்றுமே உறக்கம் வராது. அதுபோல தீய கனவுகளைக் கண்டால் கடவுளை வணங்கி விட்டு உறங்குவது நல்லது.

கண்ட கனவு பலிக்குமா? பலிக்காதா?

கனவுகள் மனிதனோடு பின்னிப் பிணைந்தவை. மனத்தில் அமுக்கப்பட்ட ஆசைகள் கனவுகளாகப் பரிணமிக்கும் என்றும் ஆழமனதில் புதைந்திருக்கும் எண்ணங்களின் வாசனைகளே கனவுகளுக்குக் காரணம் என்றும் பல்வேறு கருத்துக்கள் உண்டு. முன்னேற வேண்டும் என்று கனவு காணுங்கள் சாதிக்கலாம். என்றும் கூறி வைத்திருக்கிறார்கள் பெரியோர்கள்.

பொதுவாக கனவுகள் உடலில் உள்ள வாதம், பித்தம் கபம் எனும் மூன்று தாதுக்களின் மாறுபாட்டால் ஏற்படுகின்றன. என்பது ஆயுர்வேதத்தின் தீர்ப்பு. நிறைவேறாத ஆசைகளே கனவுகளாக வெளிப்படும் என்பது உலகத்தின் தலைசிறந்த மனோதத்துவ நிபுணர் சிக்மண்ட் ஃப்ராய்டின் கோட்பாடு கனவு பலன்கள் முன்னோட்டம்  kanavu palan in tamil .

Add Comment