வார ராசிபலன் : ஜனவரி 15 முதல் 21 வரை | vara rasi palan

இந்த வார ராசிபலன் | vara rasi palan

மேஷம்

கிரக அமைப்புகள் : ராசி ஸ்தானத்தில் குருவும், சத்ரு ஸ்தானத்தில் கேதுவும், அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரனும், பாக்கிய ஸ்தானத்தில் புதனும், செவ்வாயும், தொழில் ஸ்தானத்தில் சூரியனும், லாப ஸ்தானத்தில் சனியும், சந்திரனும், போக ஸ்தானத்தில் ராகுவும் இருக்கிறார்கள்.

சந்திரன் இந்த வாரம் கும்பம், மீனம், மேஷம் மற்றும் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

இந்த வார கிரக மாற்றம் : 19.01.2024 – சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். 

பலன்கள் : இந்த வாரம் மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு சாதகமாக அமையும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியங்கள் காலதாமதமாகும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். மற்றவர்களின் செயல்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். பேச்சுக்களில் அனுபவமும், லாபமும் வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். 

வழிபாடு : மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்

கிரக அமைப்புகள் : புத்திர ஸ்தானத்தில் கேதுவும், களத்திர ஸ்தானத்தில் சுக்கிரனும், அஷ்டம ஸ்தானத்தில் புதனும், செவ்வாயும், பாக்கிய ஸ்தானத்தில் சூரியனும், தொழில் ஸ்தானத்தில் சனியும், சந்திரனும், லாப ஸ்தானத்தில் ராகுவும், போக ஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள்.

சந்திரன் இந்த வாரம் கும்பம், மீனம், மேஷம் மற்றும் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

இந்த வார கிரக மாற்றம் : 19.01.2024 – சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

பலன்கள் : இந்த வாரம் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அமைதியான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உறவினர்களின் வழியில் சாதகமான உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆசை அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். செய்யும் முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். 

வழிபாடு : முருகப்பெருமானை வழிபட சங்கடங்கள் குறையும்.

மிதுனம்

கிரக அமைப்புகள் : சுக ஸ்தானத்தில் கேதுவும், சத்ரு ஸ்தானத்தில் சுக்கிரனும், களத்திர ஸ்தானத்தில் புதனும், செவ்வாயும், அஷ்டம ஸ்தானத்தில் சூரியனும், பாக்கிய ஸ்தானத்தில் சனியும், சந்திரனும், தொழில் ஸ்தானத்தில் ராகுவும், லாப ஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள்.

சந்திரன் இந்த வாரம் கும்பம், மீனம், மேஷம் மற்றும் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

இந்த வார கிரக மாற்றம் : 19.01.2024 – சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். 

பலன்கள் : இந்த வாரம் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சமூகத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். உயர் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். கலை துறைகளில் சில சாதகமான பலன்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவீர்கள். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எடுக்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான வாய்ப்பு கிடைக்கும். 

வழிபாடு : குருமார்களை வழிபட இன்னல்கள் விலகும்.

கடகம்

கிரக அமைப்புகள் : சகோதர ஸ்தானத்தில் கேதுவும், புத்திர ஸ்தானத்தில் சுக்கிரனும், சத்ரு ஸ்தானத்தில் புதனும், செவ்வாயும், களத்திர ஸ்தானத்தில் சூரியனும், அஷ்டம ஸ்தானத்தில் சனியும், சந்திரனும், பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள்.

சந்திரன் இந்த வாரம் கும்பம், மீனம், மேஷம் மற்றும் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

இந்த வார கிரக மாற்றம் : 19.01.2024 – சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

பலன்கள் : இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்பு கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதை மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நடைபெறும். செய்தொழிலில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். வெளியூர் தொடர்பான புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். செயல்பாடுகளில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். 

வழிபாடு : வெங்கடேச பெருமாளை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்மம்

கிரக அமைப்புகள் : குடும்ப ஸ்தானத்தில் கேதுவும், சுக ஸ்தானத்தில் சுக்கிரனும், புத்திர ஸ்தானத்தில் புதனும், செவ்வாயும், சத்ரு ஸ்தானத்தில் சூரியனும், களத்திர ஸ்தானத்தில் சனியும், சந்திரனும், அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும், பாக்கிய ஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள்.

சந்திரன் இந்த வாரம் கும்பம், மீனம், மேஷம் மற்றும் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

இந்த வார கிரக மாற்றம் : 19.01.2024 – சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

பலன்கள் : இந்த வாரம் புதிய வேலை தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். செலவுகளைக் குறைப்பதன் மூலம் பணப் பிரச்சனை தீரும். தெளிவான பேச்சுக்களின் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். கூட்டு வியாபாரப் பணிகளில் கோபத்தை விடுத்து விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோக ரீதியான முயற்சிகளில் மாற்றமான தருணங்கள் ஏற்படும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். 

வழிபாடு : சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சுபிட்சம் உண்டாகும்.

கன்னி

கிரக அமைப்புகள் : ராசி ஸ்தானத்தில் கேதுவும், சகோதர ஸ்தானத்தில் சுக்கிரனும், சுக ஸ்தானத்தில் புதனும், செவ்வாயும், புத்திர ஸ்தானத்தில் சூரியனும், சத்ரு ஸ்தானத்தில் சனியும், சந்திரனும், களத்திர ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டம ஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள்.

சந்திரன் இந்த வாரம் கும்பம், மீனம், மேஷம் மற்றும் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

இந்த வார கிரக மாற்றம் : 19.01.2024 – சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

பலன்கள் : இந்த வாரம் தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளின் ஆலோசனையால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்பு கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் உண்டாகும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும்.

வழிபாடு : துர்கை அம்மனை வழிபட தடைகள் அகலும்.

விருச்சிகம்

கிரக அமைப்புகள் : ராசி ஸ்தானத்தில் சுக்கிரனும், குடும்ப ஸ்தானத்தில் புதனும், செவ்வாயும், சகோதர ஸ்தானத்தில் சூரியனும், சுக ஸ்தானத்தில் சனியும், சந்திரனும், புத்திர ஸ்தானத்தில் ராகுவும், சத்ரு ஸ்தானத்தில் குருவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள்.

சந்திரன் இந்த வாரம் கும்பம், மீனம், மேஷம் மற்றும் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

இந்த வார கிரக மாற்றம் : 19.01.2024 – சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

பலன்கள் : இந்த வாரம் உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியில் இருந்துவந்த பிரச்சனைகள் சுமுகமாகும். மனை விருத்திக்கான கடன் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்பு ஏற்படும். எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். பயணம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மூத்த உடன்பிறப்புகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்பு உண்டாகும். விளையாட்டு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். 

வழிபாடு : சிவபெருமானை வழிபட துன்பங்கள் நீங்கும்.

துலாம்

கிரக அமைப்புகள் : குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரனும், சகோதர ஸ்தானத்தில் புதனும், செவ்வாயும், சுக ஸ்தானத்தில் சூரியனும், புத்திர ஸ்தானத்தில் சனியும், சந்திரனும், சத்ரு ஸ்தானத்தில் ராகுவும், களத்திர ஸ்தானத்தில் குருவும், போக ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள்.

சந்திரன் இந்த வாரம் கும்பம், மீனம், மேஷம் மற்றும் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

இந்த வார கிரக மாற்றம் : 19.01.2024 – சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

பலன்கள் : இந்த வாரம் வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். சாதுரியமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் மனக்கசப்புகளை தவிர்க்க இயலும். பயணங்கள் தொடர்பான செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும்.

வழிபாடு : குலதெய்வத்தை வழிபட மனதில் நினைத்த எண்ணம் ஈடேறும்.

மகரம்

கிரக அமைப்புகள் : ராசி ஸ்தானத்தில் சூரியனும், குடும்ப ஸ்தானத்தில் சனியும், சந்திரனும், சகோதர ஸ்தானத்தில் ராகுவும், சுக ஸ்தானத்தில் குருவும், பாக்கிய ஸ்தானத்தில் கேதுவும், லாப ஸ்தானத்தில் சுக்கிரனும், போக ஸ்தானத்தில் புதனும், செவ்வாயும் இருக்கிறார்கள்.

சந்திரன் இந்த வாரம் கும்பம், மீனம், மேஷம் மற்றும் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

இந்த வார கிரக மாற்றம் : 19.01.2024 – சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

பலன்கள் : இந்த வாரம் பணம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். பேச்சில் கனிவு அவசியமாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்பு உண்டாகும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். புதிய வியாபாரம் சார்ந்த அறிமுகம் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான செயல்களை அலைச்சலுக்கு பின்பு செய்து முடிப்பீர்கள். 

வழிபாடு : பைரவரை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு

கிரக அமைப்புகள் : ராசி ஸ்தானத்தில் புதனும், செவ்வாயும், குடும்ப ஸ்தானத்தில் சூரியனும், சகோதர ஸ்தானத்தில் சனியும், சந்திரனும், சுக ஸ்தானத்தில் ராகுவும், புத்திர ஸ்தானத்தில் குருவும், தொழில் ஸ்தானத்தில் கேதுவும், போக ஸ்தானத்தில் சுக்கிரனும் இருக்கிறார்கள்.

சந்திரன் இந்த வாரம் கும்பம், மீனம், மேஷம் மற்றும் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

இந்த வார கிரக மாற்றம் : 19.01.2024 – சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

பலன்கள் : இந்த வாரம் மனதில் இருக்கும் எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் இனம்புரியாத கவலைகள் ஏற்படும். விவேகமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். கல்வி தொடர்பான ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். வீட்டுத் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கடினமான சில பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது.

வழிபாடு : விநாயகரை வழிபட காரியங்கள் தடையின்றி சாதகமாக முடியும்.

கும்பம்

கிரக அமைப்புகள் : கிரக அமைப்புகள் ராசி ஸ்தானத்தில் சனியும், சந்திரனும், குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், சகோதர ஸ்தானத்தில் குருவும், அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும், தொழில் ஸ்தானத்தில் சுக்கிரனும், லாப ஸ்தானத்தில் புதனும், செவ்வாயும், போக ஸ்தானத்தில் சூரியனும் இருக்கிறார்கள்.

சந்திரன் இந்த வாரம் கும்பம், மீனம், மேஷம் மற்றும் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

இந்த வார கிரக மாற்றம் : 19.01.2024 – சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

பலன்கள் : இந்த வாரம் எதிலும் முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். சுபகாரியம் தொடர்பான பேச்சுக்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையும், புரிதலும் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். தாய்வழி உறவினர்களிடத்தில் நிதானம் வேண்டும். எதிர் பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். நெருப்பு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்பு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். 

வழிபாடு : லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

மீனம்

கிரக அமைப்புகள் : ராசி ஸ்தானத்தில் ராகுவும், குடும்ப ஸ்தானத்தில் குருவும், களத்திர ஸ்தானத்தில் கேதுவும், பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரனும், தொழில் ஸ்தானத்தில் புதனும், செவ்வாயும், லாப ஸ்தானத்தில் சூரியனும், போக ஸ்தானத்தில் சனியும், சந்திரனும் இருக்கிறார்கள்.

சந்திரன் இந்த வாரம் கும்பம், மீனம், மேஷம் மற்றும் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

இந்த வார கிரக மாற்றம் : 19.01.2024 – சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

பலன்கள் : இந்த வாரம் உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். காப்பீடு தொடர்பான தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத இடமாற்றம் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டாலும் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். நுண்கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வருவாயை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் கைகூடும். 

வழிபாடு : அனுமனை வழிபட தன்னம்பிக்கை பிறக்கும்.

Leave a Comment