Table of Contents
Intha Matha Rasi Palan in Tamil december 2021
Intha Matha Rasi Palan in Tamil december 2021 வணக்கம் நண்பர்களே ! நாம் இந்த பதிவில் பிரதி ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதம் 1 ம் தேதியில் இருந்து 31 ம் தேதி வரையிலான 12 ராசிகளின் பலன்களை பற்றி பார்க்கலாம்.
இந்த மாதம் சித்திரை நட்சத்திரத்தில் 1 வது பாதத்தில் கன்னியா ராசியில் சிம்ம லக்கினத்தில் இந்த மாதம் பிறக்கப்டுகிறது. பிறக்கிற இந்த மாதத்தின் வாழ்வாதாரம் எவ்வாறு அமைகிறது என்று பார்க்கலாம்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் ராசி நாதனான செவ்வாய் ஏழாவது இடத்தில் குருபகவான் நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் 3 வது பாதத்தில் 207 டிகிரியில் இருக்கிறார்.
ராசி நாதன் ஏழாவது இடத்தில் இருந்து ராசி பலன்களை தருவது மிகவும் அற்புதமான விஷயமாகும்.திருமண தடைகளை எல்லாம் தடுக்கும் தருணமாக இம்மாதம் அமைகிறது.
மேஷம் ராசி அன்பர்களே! – december month rasi palan
கிரகநிலை
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – களத்திர ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் சனி – லாப ஸ்தானத்தில் குரு என கிரகநிலை உள்ளது.
கிரக மாற்றங்கள்
- 04-12-2021 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
- 05-12-2021 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
- 06-12-2021 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
- 28-12-2021 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
பலன்கள்
- கால சக்கரத்தின் முதல் ராசியான மேஷம் ராசி, திருமண தடைகள் முழுவதுமாக நீங்கி நல்லது நடைபெறும் இம்மாதத்தில்.
- இந்த மாதத்தின் தொடக்கத்தில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- இந்த மாதத்தில் நாம் நினைக்கும் காரியங்களில் நல்ல முயற்சி எடுப்பதினால் அது நமக்கு வெற்றியை தரும்.
- திருமண வாழ்வில் நடந்த பிரச்சினைகள் அனைத்துமே நீங்கி நல்ல பயனை கொடுக்கும்.
- இந்த மாதத்தின் உங்களுடைய செயல்களில் ஒரு விவேகம், நேர்மை,சுறுசுறுப்புடன் காணப்படும்.
- நிதி நிலைமையில் நல்ல வளர்ச்சி காணப்படும்.
- ஆரோக்கியத்தில் மட்டும் சிறிது கவனம் தேவை.
- இந்த மாதத்தில் புதனின் யோகம் உங்கள் ராசிக்கு ஏற்படும்.
- தொழில் வளர்ச்சி , தனம் வளர்ச்சி நிறைந்து காணப்படும்.
- இல்லற வாழ்வில் குழந்தை பாக்கியம் பெறும் பாக்கியம் உள்ளது.
பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25, 26
ரிஷப ராசி அன்பர்களே! – december month rasi palan
கிரகநிலை
ராசியில் ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் –
அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் சனி – தொழில் ஸ்தானத்தில் குரு என கிரகநிலை உள்ளது.
கிரக மாற்றங்கள்
- 04-12-2021 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
- 05-12-2021 அன்று சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
- 06-12-2021 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
- 28-12-2021 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
பலன்கள்
- கால சக்கரத்தின் இரண்டாவது ராசி ரிஷப ராசி,சுக்கிரன் பகவானின் வீடான ரிஷப ராசியின் முழு பலன்கள் இம்மாதத்தில் தொடங்குகிறது.
- ஒரு செயல் செய்வதற்கு மனமானது பெரிய போராட்டத்தை ஏற்படுத்தும்.சிந்தித்து செயல்படுவது நல்ல பயனை கொடுக்கும்.
- குடும்பத்தில் நல்ல ஒற்றுமை நிலவும் , அனைவரிடமும் மிகுந்த அன்போடும், விட்டுக்கொடுத்தும் போகுவது மகிழ்ச்சியை தரும்.
- நிதி நிலைமை சிறப்பாக அமையும்.சேமிப்பில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பீர்கள்.
- செவ்வாய் 12ம் இடத்தில் பார்வை இடுவதால் அதிக அளவு கோபம் படுவீர்கள்.
- தனம் வளர்ச்சி, படிப்பு வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- பொருளாதார சிக்கல்கள் தீரும் , பழைய சுமைகள் எல்லாம் நீங்கி புது வாழ்வினை அடைவீர்கள்.
நட்சத்திரங்கள்
கார்த்திகை – தொழிலில் எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் லாபம் குறையாமல் வரும்.அலுலகத்தில் இருப்பவர்களால் தடங்கல் வரக்கூடும், ஆனால் எதையும் சமாளிக்க தைரியம் இருக்கும்.
ரோகிணி – குடும்பத்தில் உள்ளவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களிடத்தில் அன்பாக பேசுவார்கள்,கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும்.
மிருகசீரிஷம் – எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள், மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது, செய்யும் காரியங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம்: மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 27, 28
மிதுனம் ராசி அன்பர்களே! – december month rasi palan
கிரகநிலை
month rasi palan பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்
அஷ்டம ஸ்தானத்தில் சனி – பாக்கிய ஸ்தானத்தில் குரு – அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.
கிரக மாற்றங்கள்
- 04-12-2021 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
- 05-12-2021 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
- 06-12-2021 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
- 28-12-2021 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
பலன்கள்
- கால சக்கரத்தின் மூன்றாவது ராசியான மிதுன ராசி நண்பர்களுக்கு,ராகு பகவான் 12ம் இடத்திலும் , கேது பகவான் 6ம் இடத்திலும் இருக்கிறார்.
- சந்திர பகவான் 5ம் இடத்திலும் இருப்பதால் இந்த மாதம் தொடக்கம் நல்லதாகவே அமைகிறது.
- வழக்கு பிரச்சினையால் தம்பதிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் தீர்ந்து ஒரு நல்ல முடிவு அவர்களுக்கு கிடைக்கும்.
- திருமண தடைகள் நீங்கி இதுவரை இருந்த மனக்குழப்பங்கள் சரியாகி நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
- உடல் ஆரோக்கியம் சீராகி எடுத்த காரியங்கள் எளிதில் கைகூடும்.
- குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி குடும்பம் அமைதியை பெறும்.
- இதுவரை வேலைகளில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து எதிர்பார்த்த அளவுக்கு தொழிலில் லாபத்தை பார்க்கலாம்.
நட்சத்திரங்கள்
மிருகசிரீஷம் – குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் சரியாகி அமைதி நிலவும், யாரும் செய்ய தயங்கும் செயல்களை செய்து பாராட்டு பெறுவீர்கள்.
திருவாதிரை – திருமண தடைகள் நீங்கி தொழிலில் ஏற்பட்ட இடையூறுகள் சரியாகி வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.விரும்பிய பொருட்களை வாங்கும் சந்தர்ப்பம் கிட்டும்.
புனர்பூசம் – இதுவரை எதிர்பார்த்த நிதிஉதவி வந்து சேரும், வேலைகளில் புதிய முன்னேற்றங்கள் வரக்கூடும்.
பரிகாரம் -நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்து வர காரியத்தடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள் – 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்– 1, 2, 3, 29, 30
கடகம் ராசி அன்பர்களே! – december month rasi palan
கிரகநிலை
சுக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் சனி அஷ்டம ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.
கிரக மாற்றங்கள்
- 04-12-2021 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
- 05-12-2021 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
- 06-12-2021 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
- 28-12-2021 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
பலன்கள்
- அனைவரையுமே இனிமையான தம் பேச்சால் கவர்ந்து இழுக்கும் கடகம் ராசி நண்பர்களே!.
- எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கும் நீங்கள் யாரிடமும் எந்த காரியத்தையும் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.
- வியாபாரம் செய்பவர்கள் அதில் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
- அவ்வாறு உழைக்கும்போது அதற்கான பலனும் வந்து சேரும்.
- அலுவலக அன்பரிகளிடத்தில் இருக்கும் பிரச்சினைகள் சரியாகி சுமுகமாக நிலை ஏற்படும்.
- வாகனங்களை கையாளும்போது மிகுந்த கவனம் தேவை, தீ சம்பந்தப்பட்ட வேலைகளிலும் கவனம் தேவை.
- குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படலாம், அந்த நேரத்தில் அமைதியாக இருப்பது நல்லது, இல்லையென்றால் தேவையில்லாத விவாதங்கள் ஏற்படும்.
- மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும், மிகுந்த கவனம் செலுத்துவதால் சாதகமான பலன் கிடைக்கும்.
நட்சத்திரங்கள்
புனர்பூசம் – கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.பணவரத்து அதிகரிக்கும்.
பூசம் – இந்த மாதம் வழக்கு சம்பந்தமான கேஸ்களில் நல்ல பயன் கிடைக்கும், வீண் அலைச்சல் உண்டாகும். வாகனங்கள் சம்பந்தப்பட்ட செலவுகள் வரலாம்.
ஆயில்யம் – இந்த மாதம் மனதைரியம் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. சுக்கிரன் சஞ்சாரத்தால் பண வரவு அதிகரிக்கும்.
பரிகாரம்: துர்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா பிரச்சினைகளும் தீரும். தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்;
சந்திராஷ்டம தினங்கள்: 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31
சிம்மம் ராசி அன்பர்களே! – december month rasi palan
கிரகநிலை
தைரிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி – களத்திர ஸ்தானத்தில் குரு – தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.
கிரக மாற்றங்கள்
- 04-12-2021 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
- 05-12-2021 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
- 06-12-2021 அன்று செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
- 28-12-2021 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.
பலன்கள்
- இந்த மாதம் குரு பார்வை இருப்பதால் முயற்சிக்கு பிறகு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.
- உடல் நலம் பெறும் , வீண்செலவுகள் குறையும், மற்றவர்களிடத்தே னால நட்புறவு உண்டாகும்.
- ராசிநாதன் சூரியனுடன் செவ்வாய் இருப்பதால் எதிலும் ஒரு வேகம், எது கெட்டது ? எது நல்லது யோசிக்கமுடியாத மனநிலைமை உண்டாகும்.
- தொழில் ஸ்தானத்தில் நல்ல முன்னேற்றேம் ஏற்படும், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் ஈட்ட முடியும்.
- குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும் , திருமண தடைகள் விலகும், கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்பு சரியாகி சந்தோசமாக இருப்பீர்கள்.
நட்சத்திரங்கள்
மகம் – இந்த மாதம் உறவுக்காரர்களால் சுபச்செலவுகள் ஏற்படும், முக்கியமான பயணமும் , முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும்.இதனால் எதிர்காலத்துக்கு ஒரு நல்ல பயன் கிடைக்கும்.
பூரம் – இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், உத்தியோகத்தில் நல்ல அனுகூலமான பயனை அடைவீர்கள்.பல்வேறு சிக்கல்களை உங்களது மன தைரியத்தாலும் , நம்பிக்கையாலும் சமாளிப்பீர்கள்.
உத்திரம் – இந்த மாதம் கடமைகளை காப்பாற்றுவீர்கள் , பணவரவு நன்றாக அமையும், வைத்திய செலவும் , வீண் வரைய செலவும் ஏற்படும்.உங்களது குல தெய்வத்தை வணங்குவது நல்ல பயனை கொடுக்கும்.
பரிகாரம்: சிவபெருமானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7
கன்னி ராசி அன்பர்களே! – december month rasi palan
கிரகநிலை
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – சுக ஸ்தானத்தில் சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி – பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.
கிரக மாற்றங்கள்
- 13-11-2021 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
- 17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்
- நீங்கள் ஊக்கமுடன் உழைக்க தயாராயிருப்பீர்கள், இந்த மாதம் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.எதிலும் மிகுந்த கவனம் தேவை.
- எடுத்த காரியங்களில் கவனம் தேவை.ஆன்மீக காரியங்களில் அதிகமான நாட்டம் ஏற்படும், புண்ணிய காரியங்களில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள்.
- குடும்பத்தில் உள்ளவர்களின் யோசனை கேட்காமல் நடப்பது சில சிக்கல்களை தரும்.
- மனைவி பிள்ளைகளுடன் ஒத்துழைத்து செல்வது நல்லது இல்லையென்றால் தேவையில்லாத பிரச்சினைகளை சமாளிக்க நேரிடும்.
- தொழில் வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டிய தாயிருக்கும் சில ஆடர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
- புதிய முயற்சிகளை மேள்கொள்வதை தள்ளிப்போடுவது நல்லது, மாணவர்கள் அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது.வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நட்சத்திரங்கள்
உத்திரம் – இந்த மாதம் வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல பயன் கிடைக்கும், வேலையிடத்தில் சிறந்த பாராட்டுகளை பெறுவீர்கள்.இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
ஹஸ்தம் – இந்த மாதம் மற்றவர்களிடம் நல்ல மதிப்பு மரியாதையை அடைவீர்கள், பணத்தை இழக்க வாய்ப்புள்ளது அதனால் நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணம் கொடுப்பது நல்லது..
சித்திரை – இந்த மாதம் வம்பு தும்புகள் வந்து சேரலாம், தேவையில்லாத கோபமும் , வீண் பேச்சுகளும் சிக்கல்களில் விடலாம். உடல் நலம் சுமாராகவே இருக்கும். வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்: புதன்கிழமையில் அருகில் இருக்கும் காவல்தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11, 12
துலாம் ராசி அன்பர்களே! – Intha Matha Rasi Palan in Tamil
கிரகநிலை
ராசியில் செவ்வாய், சூரியன் – தன ஸ்தானத்தில் கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் – சுக ஸ்தானத்தில் குரு, சனி – அஷ்டம ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.
கிரக மாற்றங்கள்
- 13-11-2021 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
- 17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்
- நீங்கள் எதையுமே அவசரப்படாமல் செய்வது நல்ல பயனை கொடுக்கலாம்.நண்பர்களின் உதவியால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.பணவரவு அதிகரிக்கும்
- புதிய நபர்களின் வரவால் மகிழ்ச்சி உண்டாகும், உடல்நலம் பாதிப்பு ஏற்படும். செய்த செயலை நினைத்து மிகவும் வருந்துவீர்கள்.
- தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான வழக்கு விவகாரங்களை தள்ளிப் போடுவது நல்லது.
- எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாகப் பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
- அரசியல்துறையினருக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். மனத் துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம். கவனமாக இருப்பது நல்லது.
- மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும்.
நட்சத்திரங்கள்
சித்திரை – இந்த மாதம் கடன் பிரச்சினை தீரும், பணவரவு அதிகரிக்கும்,மற்றவர்களுக்காக உதவி செய்யும் போது வீண் பழிச்சொல் கேட்க நேரலாம்.
சுவாதி – இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது.பிள்ளைகளிடம், மனைவியிடம் அன்பாக நடந்துகொள்வதால் குடும்ப உறவு நல்ல மேம்படும். குடும்ப பிரச்சினைகளில் மூன்றாம் நபர் தலையிடுவது நல்லது இல்லை…
விசாகம் – இதுவரை இருந்த பரம்பரை சொத்து பிரச்சினைகள் சரியாகும். பெண் நண்பர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக நடப்பது நல்லது. பழைய பாக்கிகளில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பரிகாரம்: கோபூஜை செய்து பசுவை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14
விருச்சிகம் ராசி அன்பர்களே!
கிரகநிலை
ராசியில் கேது – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சனி – களத்திர ஸ்தானத்தில் ராகு – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் என கிரக நிலவரம் உள்ளது.
கிரக மாற்றங்கள்
- 13-11-2021 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
- 17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்
- தேவையில்லாத செலவுகளை நீக்கி அத்திவாசியமான செலவுகளை செய்வது நல்லது. சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
- வாய்க்கு ருசியான உணவு கிடைப்பதால் உடல் நலத்தில் ஆரோக்கியம் சீர்கெடும்.
- தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. போட்டிகள் குறையும்.
- உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
- தொழிலில் போட்டிகள் ஏற்படும், வீண் வார்த்தைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் வரக்கூடும்.மனம் நிறைவடைய கடினமாக உழைக்க வேண்டிய தாயிருக்கும்.
நட்சத்திரங்கள்
விசாகம் – இந்த மாதம் நீங்களே தனியாக நின்று எதையுமே செய்யும் திறன் உடைவயர்களாக இருப்பீர்கள். வேலை பார்ப்பவர்கள் உத்தியோகத்தில் கடினமாக உழைக்க வேண்டியதாயிருக்கும்.
அனுஷம் – இந்த மாதம் எடுக்கும் காரியங்களில் பல தடைகள் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கும் அளவிற்கு தைரியம் இருக்கும்,பணியிடங்களில் சக ஊழியர்களிடத்தே சிறு பிரச்சினைகள் வரக்கூடும், ஆனால் அவை பொதுவில் முடியும் .
கேட்டை – இந்த மாதம் எதிலும் நல்லது கெட்டதை நிர்ணயிக்கும் திறமை குறையும். அடுத்தவர் பிரச்சினை தீர்க்க உதவி செய்வதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் உழைத்த அளவுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். பொறுமையாக உங்கள் கடமைகளைச் சரியாக செய்யவும். உடன் பணிபுரிவோரால் மிகுந்த நன்மைகள் உண்டாகும்.
பரிகாரம்: ஆறுமுகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16
தனுசு ராசி அன்பர்களே! – Intha Matha Rasi Palan in Tamil
கிரகநிலை
ராசியில் சுக்ரன் – தன ஸ்தானத்தில் குரு, சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு – லாப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலவரம் உள்ளது.
கிரக மாற்றங்கள்
- 13-11-2021 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
- 17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்
- கடன் பிரச்சினை குறையும், வீண் சண்டைகள் போடுவதை தவிர்ப்பது நல்லது, பயணத்தால் வெற்றிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
- சுக்கிரன் சஞ்சாரம் பணவரத்தைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும்.
- நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
- மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும்.
- மற்றவர்களுக்கு உதவுவதில் கவனம் தேவை, ஏனெனில் அதனால் நீங்கள் பிரச்சினைகளில் மாற்றி கொள்ள வாய்ப்புள்ளது.
நட்சத்திரங்கள்
மூலம் – இந்த மாதம்உங்களுக்கு மனம் திடம் அதிகரிக்கும் , வாய்ப்புகள் அதிகமாக வந்து குவியும்.எந்த ஒரு பிரச்சினையும் தெளிவாக ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லதை கொடுக்கும்.
பூராடம் – இந்த மாதம் அடுத்தவர்களின் நம்பி கொடுக்கும் பொறுப்புகளை தவிர்ப்பது நல்லது , நிறைய பயணங்கள் உண்டாகும், யாருடைய யோசனைகளையும் கேட்காமல் தனிமையாக செயல்படுவீர்கள்.
உத்திராடம் – வழக்கு சமபந்தமான விஷயங்களில் நன்மை உண்டாகும், மற்றவர்களை கவரும் வண்ணம் செயல்கள் இருக்கும் , ஆனால் மனதில் எதாவது கவலைகள் இருந்து கொண்டே இருக்கும்.
பரிகாரம்: ஆறுமுகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16
மகரம் ராசி அன்பர்களே! – Intha Matha Rasi Palan in Tamil
கிரகநிலை
ராசியில் குரு, சனி – பஞ்சம ஸ்தானத்தில் ராகு – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – லாப ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரக நிலவரம் உள்ளது.
கிரக மாற்றங்கள்
- 13-11-2021 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
- 17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்
- சூரியன் சஞ்சாரம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
- செவ்வாய் சஞ்சாரத்தால் கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம்.
- தொழில் வியாபாரத்தில் எப்போது போலவே பணவரத்து இருக்கும் , வேலைக்கு செல்வோர் தேவையில்லாத பயணத்தை மேற்கொள்ளவேண்டிருக்கும்.
- குடும்பத்தில் இருப்பரவர்களுடன் அனுசரித்து போவது நல்லது, அது துணையுடன் வரும் பிரச்சினைகள் உண்டாவதை சரிசெய்யும்.
- வீண் அலைச்சல்களும் உண்டாகும், புதிய காரியங்களை செய்வதில் தள்ளிப்போடுவது நல்லது. சில விஷயங்களில் காலதாமதம் ஏற்படலாம்.
நட்சத்திரங்கள்
மூலம் – இந்த மாதம்உங்களுக்கு மனம் திடம் அதிகரிக்கும் , வாய்ப்புகள் அதிகமாக வந்து குவியும்.எந்த ஒரு பிரச்சினையும் தெளிவாக ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லதை கொடுக்கும்.
பூராடம் – இந்த மாதம் அடுத்தவர்களின் நம்பி கொடுக்கும் பொறுப்புகளை தவிர்ப்பது நல்லது , நிறைய பயணங்கள் உண்டாகும், யாருடைய யோசனைகளையும் கேட்காமல் தனிமையாக செயல்படுவீர்கள்.
உத்திராடம் – வழக்கு சமபந்தமான விஷயங்களில் நன்மை உண்டாகும், மற்றவர்களை கவரும் வண்ணம் செயல்கள் இருக்கும் , ஆனால் மனதில் எதாவது கவலைகள் இருந்து கொண்டே இருக்கும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெற்றிலை மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21
கும்பம் ராசி அன்பர்களே! – Intha Matha Rasi Palan in Tamil
கிரகநிலை
சுக ஸ்தானத்தில் ராகு – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – தொழில் ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது.
கிரக மாற்றங்கள்
- 13-11-2021 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
- 17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்
- வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறைச் சண்டைகள் ஏற்படும்.
- வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீகச் சொத்துகளில் வரும் வருமானம் குறையலாம்.
- கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை.
- பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும்.
- தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள்.
- உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையைக் கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள்.
நட்சத்திரங்கள்
அவிட்டம் – பணம் கொடுத்து உதவி செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனையை வாழ்க்கைத்துணையுடன் செய்யுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
சதயம் – இந்த மாதம் வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலிடத்தில் உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களது செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும்.
பூரட்டாதி – பதவியையோ, பணத்தையோ எதிர்பாராமல் உங்களால் முடிந்த அளவிற்கு பிறருக்கு நன்மை செய்யுங்கள். நீங்கள் எடுக்கும் காரியங்களில் அவ்வப்போது தடைகள் வந்தாலும் கவலை கொள்ளாதீர்கள். எல்லாம் தாமதமானாலும் நல்லபடியாகவே நடக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சினை தீரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23, 24
மீனம் ராசி அன்பர்களே!
கிரகநிலை
தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் – லாப ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது.
கிரக மாற்றங்கள்
- 13-11-2021 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
- 17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்
- நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.
- தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பட்ட சிரமங்கள் குறையும்.
- இந்த மாதம் வாக்குவன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சூரியன் சஞ்சாரம் அனுகூலமான பலன்களை தரும். பணவரவு மன திருப்தியைத் தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள்.
- கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும்.
- உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும்.
- குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
- பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள்.
நட்சத்திரங்கள்
பூரட்டாதி – வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மேலிடத்திடம் இருந்து பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர் மத்தியில் மதிப்பு கூடும்.
உத்திரட்டாதி – வீண் அலைச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் நிர்ப்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் மனஸ்தாபங்கள் உண்டாகும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.
ரேவதி – இந்த மாதம் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மை தரும். நல்ல விஷயங்கள் நிகழும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் தொல்லை ஒழியும். தம்பதிகளிடையே அன்பு மலரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை சேர்ப்பீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடி வரும். மனப்பிரச்சனைகள் விலகும்.
பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26