Saturday, July 2, 2022
Homeநட்சத்திரம் குணங்கள்பரணி நட்சத்திரத்தின் குணநலன்கள்

பரணி நட்சத்திரத்தின் குணநலன்கள்

தரணி ஆளும் பரணி நட்சத்திரம் 

பரணி நட்சத்திரம் சிறப்புக்கள் 

bharani nakshatra characters in tamil நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் மேஷராசியில் இடம் பெறுவதால் இது ஒரு முழுமையான நட்சத்திரமாகும். ராசியின் அதிபதி செவ்வாய். நட்சத்திர அதிதேவதை ஸ்ரீ துர்கை. 

பரிகார விருட்சம் கருநெல்லி. தரணி ஆட்சி பரணியில் பிறந்தவர்கள் ஆள்வார்கள் என்பது மூத்தோர் வாக்கு. அத்தனை பேரும் அரசனாகி நடத்துவார்களா? என்று சிலர் இடக்காகக் கேட்கலாம். 

அவர் எந்தத் துறையில் இருக்கிறாரோ அந்தத்துறையில் தலைசிறந்து விளங்குவார் என்பதே இதன் பொருள். 

இவர்களுடைய வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி, தொட்டது துலங்கி வளமெல்லாம் பெறுவதற்கு பரணி நட்சத்திரத்தின் அதிதேவதையாகிய காளியை வழிபாடு செய்ய வேண்டும். 

துர்க்கையைப் போற்றி வழிபாடு செய்ய சூரியனைக்கண்ட பனியைப் போல துன்பங்கள் மறைந்து, வசந்தம் ஏற்படும். பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை யமதருமன். 

நீலநிற மேனியும், கையில் தண்டமும் பாசக்கயிறும் கொண்டு உயிர்களை நீதி தவறாமல் எடுத்துச் செல்லும் காரணத்தினால் இவன் யமதருமன் எனப்படுகிறான். 

இவர்கள் வணங்கவேண்டிய பரிகார விருட்சம் நெல்லி மரம். நெல்லி மரத்தை வளர்ப்பது, கோயில்களில் காணப்படும் நெல்லி மரங்களைப் பராமரிப்பது, நெல்லிமரம் தலவிருட்சமாக உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவது, 

நெல்லிமரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்வது, யமகாயத்திரி, துர்கை மந்திரங்கள், துர்கா காயத்திரி ஆகியவற்றைச் சொல்வது, மரத்திற்கு நீர் ஊற்றுவது போன்றவை சிறந்த பரிகாரங் களாகும். 

இந்தப் பரிகாரத்தை நம்பிக்கையோடும், ஆர்வத் தோடும் செய்து வந்தால் துன்பங்கள் விலகும். நோய்கள் பறந்தோடும், மனதை வாட்டும் கவலைகள் மறையும், வளமெல்லாம் தேடிவரும். 

இவர்கள் ஸ்ரீ ஹனுமான் உருவம் பதித்த மோதிரம், செயின் ஆகியவற்றை அணிந்து கொள்வதன் மூலமாக நன்மைகள் பெறலாம். 

மோதிரத்தை அணிந்து கொள்ளும் போது ஹனுமான் கவசமோ அல்லது ஹனுமான் சாலீசாவோ சொல்லிவிட்டு அணிவது அதிருஷ்டத்தை இழுத்துக் கொண்டு வந்து சேர்க்கும். 

இவர்கள் ருத்திராட்சம் அணியவேண்டும் என்றால் ஆறுமுக ருத்திராட்சத்தை அணியலாம். ருத்திராட்சம் இவர்கள் மனோவலிமையை இரட்டிப்பாக்கும், தன்னம்

பிக்கையை அதிகப்படுத்தும், கெட்ட சக்திகளைத் துரத்தி அடிக்கும், துணிச்சலான முடிவெடுக்க கைகொடுக்கும். இவர்களுடைய ராசிக்கல் வைரம். 

ராசிக்கற்களை டாலராகவோ அல்லது மோதிரமாகவோ அணிந்து கொள்ளலாம். அப்படி அணியும் போது ஹனுமானை வணங்கிவிட்டு அணிய வேண்டும். 

பெயர்களுக்கான முதல் எழுத்துக்கள் 

இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வேண்டிய நட்சத்திர எழுத்துக்கள் ல, லு, லே, லோ என்பவை.ஆண்குழந்தைகளுக்கு லோகேஷ், லோகநாதன், லிங்கா, லிங்கேஸ்வரன், நீலவண்ணன், ஆகிய பெயர்களை வைத்தால் அதிருஷ்டம் பெருகும். 

பெண் குழந்தைகளுக்கு லோகநாயகி, லோகேஷ்வரி, லலிதா, ஸ்ரீ லதா, லீலா போன்ற பெயர்களை வைத்து அழைத்தால் சுபிட்சம் பெருகும். 

பரணி நட்சத்திரத்தின் குணநலன்கள் bharani nakshatra characters in tamil பரணி நட்சத்திரம் சிறப்புக்கள் பரணி நட்சத்திரம் சிறப்புக்கள்   

பொதுக்குணங்கள் 

பரணி நட்சத்திரத்தில் நடுப்பகலில் பிறந்தவர்கள் நடுத்தர அல்லது சற்று உயரமான உருவம் கொண்டவர்கள். தலையில் முடி குறைவாக இருக்கும். ஏறு நெற்றி காணப்படும். 

கண்கள் பிரகாசமாக இருக்கும், அடர்த்தியான புருவம், முத்துப் போன்ற பற்களை உடையவர்களாக இருப்பார்கள். சிவந்த நிறமும், நீண்ட கழுத்தும் இருக்கும். 

கையை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்றிக் மிகுந்தவர்கள். தங்கள் வேலைகளைப் பிறர் எதிர்பார்க்காமல் தானே செய்து கொள்ளும் ஆற்றலும், உழைப்பும் இவர்களிடம் உண்டு. 

இவர்கள் தொட்ட காரியங்கள் துலங்கும் என்பதால் எல்லோரும் இவர்களிடம் நட்பு கொள்ளவும், ஆதாயம் தேடவும் விரும்பிப் பழகுவார்கள். தானதருமங்கள் செய்வதிலும், சேவை செய்வதிலும் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள். 

பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சுத்தக் குறைவானவர்கள் குளிக்காமல் டிபன் சாப்பிட்டால் தப்பில்லை என்ற ரீதியில் நடந்து கொள்வார்கள். இதேபோல மற்றவர்களுடன் வம்புச் சண்டையில் ஈடுபடுவதை விரும்புவார்கள். 

விளையாட்டாக ஆரம்பித்த வார்த்தை விபரீதமாக முடிந்து குடும்பம் பிரிவதற்குக் காரணமாக இருப்பார்கள். யாருக்கும் தெரியாது என்றால் தீமை செய்யத் தயங்காதவர்கள் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. 

ஜோதிட சாஸ்திரம் இவர்களைப் பற்றி 

பரணி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் 

சிவப்பு நிறத் தோடும், புத்திமானாகவும், வலுவுள்ளவராகவும், பகைவரை வெல்பவராகவும், வீரனாகவும் இருப்பார்கள். 

இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் 

ஞானி, நிபுணன், சோம்பல் உடையவர், சாஸ்திரம் சொல்பவர். 

மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் 

உயரமானவர், பிதுங்கிய விழிகளைக் கொண்டவர், கோபம் கொள்பவர்கள் பரணி. 

நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் 

துர்க்குணங் கொண்டவர், அரசுவேலையில் இருப்பவர், கோபம் கொண்டவர், குண்டான உடல்வாகு பெற்றவர் என ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது. 

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7 வயதில் காய்ச்சலும், 15 வயதில் ரத்த சம்பந்தமான பாதிப்புக்களும், 22 வயதில் ரத்தத்தில் கோளாறும் ஏற்படும். இவர்களுக்கு உணவே சில சமயங்களில் விஷமாகும். 

27 வயதில் வயிற்றுத் தொல்லைகள் ஏற்படும். 30 வயதில் பால்வினை நோய்களும், 45 வயதுக்கு மேல் சர்க்கரை நோயும், 53 வயதில் உஷ்ண சம்பந்தமான பாதிப்புக்களும், 59 வயதில் மூல வியாதியும், 64 வயதில் இருதய நோய்களும் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது. 

திருமண வாழ்க்கை 

  • பிரயாணங்களில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். பிறரை எளிதாகப் புரிந்து கொண்டு அவர்களுடன் இணைந்து செயல்படும் திறமை கொண்டவர்கள். 
  • இவர்கள் எதற்கும் எளிதில் உணர்ச்சி வசப்படும் இயல்பு கொண்ட காரணத்தினால் அதிகமான விரோதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள். 
  • இதே நேரத்தில் இவர்கள் காதல் மன்னராகவும் இருப்பார்கள், பல பெண்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை நேசிக்கும் வாய்ப்பு உண்டு. 
  • பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு வாய்ப்பான துணை அமைவது வழக்கம். இதனால் திருமண வாழ்க்கை சுமுகமாகவே நடக்கும். 
  • இவர்கள் விதவிதமான உணவுகளைச் சமைப்பதிலும், சாப்பிடுவதிலும் ஆர்வம் மிக்கவர்கள். 
  • உங்களுக்காகத்தான் இந்தப் பால்பாயசம் செஞ்சேன், எப்படி இருக்கு? என்று கணவனிடம் கேட்டு அவரது புன்னகையைப் பதிலாகப் பெறுவதில் இவர்களுக்கு அலாதி ஆனந்தம் இருக்கும். 
  • இவர்கள் பெற்றோர்களினால் பெரிதும் விரும்பப்படும் பேறு பெற்றவர்கள். சற்று முன்கோபம் உடையவராக இருப்பினும் தரும சிந்தனை மிக்கவர்கள். 
  • செல்வமும், புகழும், சொன்ன சொல் காப்பாற்றும் திறனும் மிக்கவர்கள். பெண்களின் பேச்சுக்கு இணங்குவார்கள். வயதான காலத்தில் பிள்ளைகள் இவர்கள் மீது பாசத்தோடு இருப்பதைப் பார்க்கலாம்.
  • தொழில் இவர்கள் எந்தத் தொழிலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும், மற்றவர்கள் பின்பற்றும் விதமாக நடந்து கொள்வார்கள். 
  • இவர்களுக்குப் பெரிய பதவிகள் வந்த போதிலும் அதனால் அலட்டிக் கொள்ளமாட்டார்கள். 
  • தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்களை கண்ணியக் குறைவாக நடத்துவதோ அல்லது மரியாதைக் குறைவாகப் பேசுவதோ இருக்காது. 
  • மற்றவர்களை அனுசரித்து வேலை வாங்குவதில் கெட்டிக்காரர்கள். 
  • மணி, உங்க பொண்ணு பேச்சுப்போட்டியில பரிசு வாங்கிச்சின்னு சொன்னீங்க இல்லே அதுக்கு என்னோட சிறிய பரிசு இது என்று எதையாவது கொடுத்து அவருடைய மனத்தில் இடம் பிடிப்பது இவர்களது இயல்பு. 
  • இந்த நட்சத்திரம் ஆளும் தன்மை கொண்டதாக இருப்பதால் அரசுத்துறையிலும், அரசியல் துறையிலும் புகழ் அடைய வாய்ப்புக்கள் அதிகம். 
  • சிவில் என்ஜினீரிங், ஆர்க்கிடெக்ட், பேஷன் டென்னாலஜி ஆகிய துறைகளும் இவர்களுடையதே. 
  • எழுத்துதுறை, புத்தக வெளியீட்டுத்துறை, இசைத்துறை, வழக்கறிஞர், கட்டட காண்டிராக்டு போன்ற துறைகள் இவர்களுக்குப் பொருந்தி வரும். 
  • பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கலைகளில் ஆர்வம் இருப்பதால் பின்னணிப் பாடகர்களாகவும், சினிமா நாடகம், தொலைக்காட்சி, மாந்திரீகம், ஜோதிடம் ஆகிய துறைகளும் லாபம் தரும். 
  • இவர்கள் பேன்சி பொருட்கள் விற்பனை, உணவுவிடுதி, கலைப்பொருள் சேகரிப்பு, பழங்கால நகைகளை வாங்கி விற்பது போன்ற தொழில்களில் சிறப்படையலாம்.

வழிபட வேண்டிய பரிகார தலங்கள் 

நட்சத்திர தோஷம் நீங்க இவர்கள் வணங்கவேண்டிய பரிகாரத் தலம் நவபாஷாண பைரவர், பெரிச்சி கோயில் இங்கே இரண்டு முகங்களோடு கூடிய பைரவர் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். 

பழனிமலையில் நவபாஷாண முருகன் சிலையைச் செய்வதற்கு முன்னால் இங்கே பைரவரின் வடிவத்தை நவபாஷாணத்தினால் உருவாக்கி இருக்கிறார் போகமுனிவர். 

எட்டுக்கைகள், அவற்றில் ஆயுதங்கள், கபால மாலை இவற்றோடு காட்சி தருகிறார் பைரவர். இவர் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர். பவுர்ணமியில் இங்குள்ள பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள், நைவேத்தியங்கள் நடைபெறுகின்றன. 

இதில் ஆச்சரியமான விஷயம் ஒன்று உண்டு: இங்குள்ள பைரவர் சிலை நவபாஷாணத்தினால் ஆனது என்று பார்த்தோம் அல்லவா? அது மிகுந்த வீரியம் கொண்டது, அதனுடைய மருத்துவ சக்தியை தாங்கும் ஆற்றல் இந்தக் கலியுக மக்களுக்கு இல்லை. 

ஆகவே பைரவப் பெருமானுக்கு சாத்தும் வடைமாலை மற்றும் தீர்த்தம் ஆகியவை இங்குள்ள பக்தர்களுக்கு விநியோகிக்கப்படு வதில்லை. வடைமாலையை சந்நிதியின் கூரைமீது போட்டுவிடுகிறார்கள். 

வடையைப் பார்த்ததும் பறவைகள் ஓடிவந்து எடுத்துக் கொள்ளும் அல்லவா? அது தான் கிடையாது. இதன் மருத்துவ ஆற்றலைத் தங்களாலும் தாங்கமுடியாது என்பதாலோ என்னவோ ஒரு பறவையும் அங்கே வந்து பிரசாதத்தைத் தொடுவதில்லை. 

அபிஷேக தீர்த்தமும் பக்தர்களால் தொடமுடியாத தொலைவில் விழும்படியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் இருந்து பைரவரின் அபாரமான ஆற்றலை அறிந்து கொள்ளலாம். 

இங்குள்ள கோயிலில் சனிபகவான் எழுந்தருளி பைரவரைத் தரிசித்துக் கொண்டிருக்கிறார். சனியின் குரு பைரவப்பெருமான் தான். சனியின் வாத நோயை குணப் படுத்தியவர் இந்தப் பைரவர்தான் : 

பைரவரின் அவதார் நட்சத்திரமான பரணியில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்குத் தொடர்ந்து ஆறு பரணி நட்சத்திரத்தன்று வந்து ராகுகாலத்திற்கு முந்திய முகூர்த்தத்தில் கோயிலில் எழுந்தருளி இருக்கும் மூலவரான சுகந்தவனேஸ்வரப் பெருமானுக்கு அபிஷேகம் செய்துவிட்டு, 

ராகுகாலத்தின் போது பைரவருக்கும் அபிஷேகம் செய்து வந்தால் கர்மவினைகளினால் ஏற்படும் துன்பங்களும், தொல்லைகளும் வெகுவாகக் குறையும். 

மேலும் பரணி நட்சத்திரக்காரர்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் விரதம் இருப்பதும், மதியம் யாரேனும் ஒரு நபருக்கு உணவு அன்னதானம் செய்வதும், 

இரவு அரிசி உணவைத் தவிர்ப்பதும் ஏராளமான நன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். இந்தக் கோயில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் அமைந்திருக்கிறது. 

திருப்பத்தூரில் இருந்து பத்து கிமீ தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 19 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது. 

மேஷ ராசிக்குரிய பரணி நட்சத்திரக்காரர்கள் திருவாலங்காட்டில் உள்ள மகாகாளி கோயிலுக்குச் சென்று தேவியைத் தரிசித்து துன்பங்களில் இருந்து விடுதலை பெறலாம். 

மேலும் இவர்கள் திருநாகை ஆதிசேஷன், நாகநாதர் கோயிலுக்கும் சென்று வழிபட்டும் வரலாம்.

பரணி நட்சத்திரத்தின் குணநலன்கள் bharani nakshatra characters in tamil பரணி நட்சத்திரம் சிறப்புக்கள் பரணி நட்சத்திரம் சிறப்புக்கள்   

அக்னீஸ்வரர் கோயில் 

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள நல்லாடை அக்னீஸ்வரரைத் தரிசனம் செய்தால் திருமணத் தடைகள் நீங்கும். 

பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்கும் தம்பதிகள் இங்கு வந்து சென்றால் மகப்பேறு வாய்க்கும். 

தொழிலில் முடக்கம் கொண்டு அவதிப்படுபவர்கள் இப்பெருமானைத் தரிசனம் செய்து வந்தால் நிலமை சீர்பெறும். மாணவர்களுக்கு கல்வி கைகூடும். 

பௌர்ணமி நாட்களில் இப்பெருமானைத் தரிசித்து வந்தால் மனத்தில் ஏற்படும் காரணமில்லாத அச்சமும், பதட்டமும் மறையும். இங்கே சிவபெருமன் அக்கினி ரூபமாகத் திகழ்கிறார், மேற்கு நோக்கியிருக்கிறார். 

அவர் அக்கினி ரூபமாக இருப்பதால் அந்த வெப்பத்தை தணிக்கும் பொருட்டு தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. 

ஆகவே பரணி நட்சத்திரக்காரர் கள் இந்த கோயிலுக்கு அடிக்கடி சென்று, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வருவது வேண்டிய பலன்களை விரைவாக அள்ளித் தரும் என்பது உறுதி. 

தீயில் இட்ட பஞ்சுமூட்டை கணநேரத்தில் எரிந்து சாம்பலாவதைப் போல எம்பெருமானைத் தரிசித்த சில நாட்களிலேயே அவர்களது கர்மவினைகள் சாம்பலாகும். வசந்தகாலம் ஆரம்பமாகும். 

பரணி நட்சத்திரத்தின் குணநலன்கள் bharani nakshatra characters in tamil பரணி நட்சத்திரம் சிறப்புக்கள் பரணி நட்சத்திரம் சிறப்புக்கள்   

பட்டீஸ்வரம் துர்கை 

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சென்று வழிபடவேண்டிய மற்றொரு பரிகாரத் தலம் பட்டீஸ்வரம். ஆலயச் சிறப்புக்கள் அத்தனையும் பெற்ற திருத்தலங் களுள் ஒன்று பட்டீஸ்வரம். இதற்கு தேனுபுரீஸ்வரம் என்பது புராணப் பெயர்.

தேனு என்பது காமதேனுப் பசுவைக் குறிக்கும். அந்தப் பசு தனது பால்காம்புகளின் வழியே பாலைச் சொரிந்து மழபாடிச் சிவனை வழிபட்டது. எனவே இத்தலத்திற்கு தேனுபுரீஸ்வரம் என்ற பெயர் ஏற்பட்டது. 

இங்கே மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய யாவும் மிகச் சிறப்பாக அமைந் திருக்கின்றன. இது நாயன்மார்களினால் பாடல் பெற்ற தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற மொத்த தலங்கள் 274. 

இவைகளில் காவிரி ஆற்றுக்குத் தென்கரையில் உள்ளவை 127 தலங்கள். அவற்றுள் இந்த பட்டீஸ்வரம் 23 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. சோலைகளுக்கு நடுவே பட்டீஸ்வரம் கோயில் அமைந்திருக்கிறது. 

ஐந்து பெரிய கோபுரங்களைக் கொண்ட இக்கோயிலின் உள்ளே மூன்று பிரகாரங்கள் வெளியில் ஒரு வீதியும் காணப்படுகிறது. உள்ளன. ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மைய மண்டபத்தில் மூலவர் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் அருள் பாலிக்கிறார். 

வெளியில் சோமாஸ்கந்தரும், பதிகம் பாடிய திருஞான சம்பந்தரும் எழுந்தருளி இருக்கின்றனர். ஆலயத்தின் பிரகாரச்சுற்றில் சப்த கன்னிகைகள், சுவர்ண விநாயகர், மகாலிங்கம், சண்முகர், இராமலிங்கம், இலட்சுமி ஆகிய தெய்வங்களின் சந்நிதிகள் காணப்படுகின்றன. 

ஆலயத்தின் வடதிசையில் ஆலயத்தை ஒட்டியே அம்மன் கோயில் அமைந்திருக்கிறது. இறைவி ஞானாம்பிகை, பல்வளை நாயகி என்ற பெயர்களில் வழிபடப்படுகிறாள். 

திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு அருகே வந்தபோது வெயிலால் வாடி இளைப்பதைக் கண்டு மனம் பொறாமல் தேனுபுரீஸ்வரர் தனது பூத கணங்கள் மூலமாக முத்துப் பந்தலை அனுப்பிவைத்தார்.

 மேலும் திருஞானசம்பந்தரும், சிவனடியார்களும் தேவாரப் பாடல்களை உள்ளம் உருகப் பாடிக் கொண்டு வருவதை நேரில் கண்டு களிக்கவும், 

தனது உள்ளங்கவர்ந்த பிள்ளை எந்த மறைப்பும் இல்லாமல் தன்னைத் தரிசனம் செய்யவும் ஆர்வம் கொண்ட சிவபெருமான், நந்தியை சற்று விலகி இருக்கப் பணித்தார். 

நந்தி தேவரும் விலகி இருந்து இந்த அற்புதக் காட்சியைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார். இப்படிப்பட்ட பெருமைகள் கொண்டது தேனுபுரீஸ்வரர் ஆலயம். 

இந்த ஆலயத்தில் பட்டீஸ்வரம் துர்கை கோயில் கொண்டு வீராவேசத்தோடு எழுந்தருளி இருக்கிறாள். 

துர்காதேவி திரும்ப வந்தாள் 

பதின்மூன்றாம் நூற்றாண்டு கடைசியில் சோழப்பேரரசு பாண்டிய மன்னர்களின் தாக்குதலால் தோல்வி அடைந்து சிதைந்து போனது. 

வெற்றி பெற்ற பாண்டிய மன்னர்கள் சோழர்களின் அரண்மனைகளை கோட்டை கொத்தளங்களை அழித்தனர். நெல் வயலுக்கும் கரும்பு வயலுக்கும் தீயிட்டுக் கொளுத்தினர். 

நகரை எரியுண்ணச் செய்தனர். ஆனால் சோழர்கள் கட்டிய கோயில்களுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்கவில்லை. சோழன் மாளிகை அருகே உள்ள பட்டீஸ்வர ஆலயத் திற்கு திருப்பணி செய்து அம்மன் கோயிலும், 

கட்டுவித்தவர் அச்சுதப்ப நாயக்கரின் அமைச்சரான கோவிந்த தீட்சதர் என்ற மகான். இவர் பாண்டிய மன்னர்களினால் சிதைக்கப்பட்ட பழையாறை நகரத்தில் காவல் தெய்வங்கள் வழிபாடு இல்லாமல் சீரழிந்து வருவதைக் கண்டு மனம் நொந்தார். 

அந்த ஆலயங்களில் இருந்து வடக்குப் புறக் கோட்டை காவல் தெய்வமாக விளங்கிய துர்கா தேவியை அங்கிருந்து இடம் பெயரச்செய்து கொண்டு வந்து, பட்டீஸ்வரர் கோயிலின் வடக்குப் புற கோபுரவாசல் பகுதியில் ஆகம முறைப்படி

பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடப்பதற்கு ஆவன செய்தார். அந்த வகையில் இங்கு வந்து, கம்பீரமாகத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவளே பட்டீஸ்வரம் துர்கை. 

அன்று சோழர்களுக்கு வளங்களையும், வெற்றிகளையும் வாரிக் கொடுத்த இந்த துர்காதேவி இன்றும் தன்னை நாடிவரும் பக்தர்களின் துன்பங்களைப் போக்கி, தோல்விகளை மாற்றி வெற்றி அளிக்கிறாள்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிரச்சனை கள் தீரவும், நல்வாழ்வு பெறவும், தடைகள் விலகி வெற்றி அடையவும், பட்டீஸ்வரம் துர்கையை வழிபட வேண்டும். 

வழிபட வேண்டிய மற்ற தலங்கள் 

திருநெல்லிக்கா திருவாரூர் மாவட்டம். திருத்துறைப் பூண்டி சாலையில் கச்சனத்திற்கு கிழக்கே 14 கிமீ தொலைவில் உள்ளார் திருநெல்லிவனநாதர். 

கீழ்ப்பறையார் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 8 கிமீ பட்டீஸ்வரம் அருகே உள்ளது. இறைவன் சோமநாதர். திருஆவினன் குடி குழந்தை வேலாயுதஸ்வாமி மலை அடிவாரத்தில் உள்ளது. 

பழனி திருத்தங்கல் கருநெல்லி நாதர், விருதுநகர், சிவகாசிக்கு அருகில் உள்ளது. திருவாஞ்சியம் எமன், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கும்பகோணம் சாலையில் உள்ளது.

கார்த்திகை நட்சத்திரம் குணநலன்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments