நட்சத்திரம் குணங்கள்

ஆயில்யம் நட்சத்திரத்தின் குணநலன்கள் | ayilyam nakshatra characters in tamil

அமோக வெற்றிதரும் ஆயில்யம் 

ஆயில்யம் நட்சத்திரத்தின் குணநலன்கள் ayilyam nakshatra characters in tamil சிறப்புக்கள் வழிபடவேண்டிய மற்ற தலங்கள் திருமண வாழ்க்கை 

சிறப்புக்கள் 

ayilyam nakshatra character in tamil இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஒன்பதாவது இடத்தைப் பெறும் ஆயில்யம் கடகராசிக்கு உரியது. இது பெண் நட்சத் திரமாகக் கருதப்படுகிறது. அதிருஷ்டத்தை அள்ளித்தரும் ஆற்றல் பெற்றது.

கடகராசிக்கு அதிபதி சந்திரன். ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதை யாக இருப்பவர் ஆதிசேஷன் ஆயில்ய நட்சத்திரக்காரர்களின் பரிகார விருட்சம் புன்னை மரம்.

இவர்கள் இந்த மரத்தை தலவிருட்சமாக உடைய கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் தோஷம் நீங்கும். புன்னை மரத்தை வளர்ப்பதும்,

அந்த மரங்களுக்கு நீர் ஊற்றி பாதுகாப்பதும், ஆயில்ய நட்சத்தில் மரத்தை வழிபாடு செய்வதும் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.

ஆயில்ய கடகராசி புத்திசாலித்தனம், பழம்பெருமையைப் பாதுகாப்பது, கூட்டுக்குடும்பம் ஆகியவற்றுக்கு உரியது. ஆகவே நட்சத்திரக்காரர்கள் மிகுந்த திறமையும், புத்திசாதுர்யமும் கொண்டவர்களாக இருப்பதைப் பார்க்கலாம்.

இவர்கள் தங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறையும் பாசமும் கொண்டவர்கள். தாய்மீது அதிக பாசம் செலுத்துபவர்கள்.

பெயருக்கு உரிய முதல் எழுத்துக்கள் – ayilyam nakshatra character in tamil

இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு டி. டு, டே, பீ, யோ, ஆகிய முதலெழுத்துக்களை கொண்ட பெயர்களை வைத்தால் சிறப்பான எதிர்காலம் அமையும். 

ஆண் குழந்தைகளுக்கு டில்லிபாபு, யோகன், யோகேஷ், பீதாம்பரன் போன்ற பெயர்கள் வைக்கலாம். பெண் குழந்தைகளுக்கு யோகலட்சுமி, பிருந்தா முதலிய பெயர்கள் பொருத்தமாக இருக்கும். 

இவர்கள் ராகு உருவம் பதித்த மோதிரத்தை அணிந்து கொண்டால் சகல துன்பங்களும் நீங்கும். வாய்ப்புக் கிடைக்கும் போது ராகு துதிகளைச் சொல்லி வரவும். இவர்களது நட்சத்திரக்கல் மரகதம். 

பொதுக்குணங்கள் – ayilyam nakshatra character in tamil

  • பொதுவாக ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கலகலப்பாகப் பேசுவார்கள்
  • தங்கள் கஷ்டத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் மிகச் சாதாரணமாக இருக்கும் இயல்பு கொண்டவர்கள். 
  • ஏண்டா யாரும் எடுக்காத ஒரு கோர்சை எடுத்துட்டியே, படிக்கிறது கஷ்டமா இல்லையா? என்று அப்பா கேட்டால் அதெல்லாம் படிக்கிறவங்களுக்குத்தானே? எனக்கு இல்லே என்று ஜோக் அடித்துவிட்டு, கோர்ஸ் ஒண்ணும் கஷ்டம் இல்லேப்பா படிச்சுடலாம் என்று ஆறுதலாகவும் பேசுவார்கள். 
  • தங்களால் முடியாத போதும் கூட மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். மற்ற நேரங்களில் கொஞ்சம் கெடுபிடியாக இருந்தாலும் தேவைப்படும்போது தன்னை மாற்றிக் கொண்டு இரக்கம் காட்டுவார்கள். 
  • ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு காரியங்களில் ஈடுபட்டு அதை திறம்படச் செய்வதில் இவர்கள் வல்லவர்கள். சற்று முன்கோபம் கொண்டவர்கள். 
  • படிப்பதிலும், விஷயங்களை ஆராய்ச்சி செய்வதிலும் ஆர்வம் உடையவர்கள். வருமானம் குறைவாக இருந்தாலும் மனத்திற்குப் பிடித்த துறைகளையே தேர்ந்தெடுத்து படிப்பதும் வேலைபார்ப்பதும் இவர்களது தனிக்குணம். 
  • நெருப்பு சுடும் என்று மற்றவர்கள் சொன்னாலும் கூட அதை அதிகம் கவனிக்காமல் தானே தொட்டுப்பார்த்து கையைப் பொசுக்கிக் கொள்ளும் குணம் கொண்டவர்கள் 
  • இதனால் இவர்கள் அடிக்கடி தோல்வியைத் சந்திப்பதும், தடுக்கி விழுவதும் நடக்கும். இத்தனை இருந்தாலும் விடாமுயற்சியோடு தொடர்ந்து முயற்சி செய்து வெற்றிக்கனியைப் பறிப்பார்கள். 
  • கோபமும் வேகமும் கொண்ட இவர்கள் செல்வந்தர் களாகவே இருப்பார்கள் . சிவந்த நிறமும், அகலமான கண்களும் கொண்டவர்கள். சற்று சோம்பேறிகள். 
  • அதனால் எந்தக் காரியத்தையும் உடனுக்குடன் முடிக்காமல் தள்ளிப் போடும் குணம் கொண்டவர்கள். 
  • பணம் கட்ட 25ம் தேதி தான் கடைசி நாள், அப்போ பார்த்துக்கலாம் என்பார்கள். எதையும் இன்று முடிக்கலாம் என்ற குணம் இருக்காது, நாளை பார்த்துக் கொள்வோம் என்பதே இவர்களது கொள்கை. 
  • பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள், ஆடம்பரமாக இருப்பதை விரும்புவார்கள். கடல் கடந்து பயணம் செய்து வருமானத்தைப் பெருக்கி வீடு, கார், சொத்துக்கள் என்று சேர்ப்பதில் ஆர்வம் இருக்கும், 
  • இவர்களது பிள்ளைகள் நல்ல வசதியாக வாழ்வதற்கு உழைப்பார்கள். எல்லாவிதமான துறைகளையும் கற்றுக் கொள்ள ஆர்வம் இருக்கும். கொஞ்சநாள் யோகா செய்வார்கள், பிறகு கராத்தே என்பதாக அது மாறும். 
  • வீட்டுக்கு அருகிலேயே நீச்சல் குளம் இருக்கு, தினமும் காலையில ஆறு மணிக்கு அங்கே போகலாம் என்று இருக்கேன் என்பார்கள். 
  • அதைவிட தியானம் செய்யலாம் என்ற முடிவுக்கு வருவார்கள். சில நாள் சமையல் அறைக்குள் நுழைந்து கலக்குவார்கள். 
  • ஆனால் எதையும் தினசரிக் கடமையாகக் கடைப்பிடிக்க மட்டும் இவர்களால் முடிவதில்லை. கடக ராசிக்கு உட்பட்ட ஆயில்ய நட்சத்திரத்திற்கு மருத்துவ குணங்கள் உண்டு. 
  • இவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டு எப்படிப்பட்ட துன்பத்தையும் கடந்து விடலாம் என்று எண்ணி வாழ்பவர்கள். 
  • இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். இவர்களிடம் ரகசியம் தங்காது. 
  • ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களால் மாமியாருக்கு ஆகாது என்ற குற்றச்சாட்டு உண்டு. இது உண்மையல்ல. 
  • ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களில் பலர் மாமியாரை அனுசரித்துச் செல்வதையும், அவர்களை இறுதிவரையில் காப்பாற்றுவதையும் இன்றும் பார்க்கலாம். 

ஜோதிட சாஸ்திரம் இவர்களைப் பற்றி – ayilyam nakshatra characters in tamil 

முதல் பாதத்தில் பிறந்தவர்கள் அழகும் பெண்தன்மையும் கொண்டவர்கள், மிகுந்த பேச்சாற்றல் பெற்றவர், நல்ல தீர்க்க மான அறிவோடு செயல்படுபவர், மகிழ்ச்சி உடையவர்கள். 

இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் பிறருக்குப் பணிந்து ஏவல் செய்பவர், துர்க்குணம் கொண்டவர், அழகும் ஆசாரமும் உடையவர், தீய சேர்க்கையை விரும்புவர். 

மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபி, மனைவியைச் சித்ரவதை செய்வதில் ஆர்வம் உள்ளவர், எதையும் தள்ளிப்போடும் குணம் கொண்டவர், ஞானி, திறமை மிக்கவர், பிறர் மனம் வருந்தும் சொற்களைப் பேசுபவர். 

நான்காம் பாதத்தில் பிறந்தவர் பொன் பொருளை அழிப்பவர், கொலை செய்வதற்கும் தயங்காதவர், கோபக்காரர், இயவனுக்கு நல்லவர், இழிந்த பெண்களை விரும்பிச் சேரும் குணம் கொண்டவர், ஆரோக்கியக் குறைபாடு உள்ளவர் என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது. 

புனர்பூச நட்சத்திரத்தின் குணநலன்கள் punarpoosam nakshatra characters in tamil பொதுக்குணங்கள் திருமணவாழ்க்கை தொழில் வழிபட வேண்டிய பரிகாரத்தலம் 

திருமண வாழ்க்கை – ayilyam nakshatra character in tamil

இவர்களுக்கு இளமையிலேயே திருணம் நடப்பதற்கும், குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கும் வாய்ப்புக்கள் அதிகம். மனைவி பிள்ளைகள் மீது மிகுந்த பிரியத்தோடு இருப்பார்கள். 

இளமையில் சிலர் வறுமையில் வாடியபோதிலும் மத்திம வயதில் செல்வமும் செல்வாக்கும் பெறுவார்கள்.

கொஞ்சம் ஆடம்பரப்பிரியர்கள் ஆகவே வரவுக்கு மேல் செலவு செய்வார்கள் அதனால் சிலசமயம் வழியில்லா வழியிலும் செல்வதற்குத் தயங்கமாட்டார்கள். 

இவர்கள் மனைவி சொல்லுக்குத் தலையாட்டுவார்கள். ஆனால் தங்கள் விருப்பப் படியே செய்து காட்டுவதோடு அதை நியாயப்படுத்தி சமாளிப்பார்கள். பிள்ளைகளுக்கு இலக்கியம், சரித்திரம் போன்றவற்றைக் கற்றுத்தருவதில் ஆர்வம் காட்டுவார்கள். 

நாட்டுக்கு சேவை செய்யும் எண்ணம் கொண்டவர்கள். ஆதலால் தங்கள் பிள்ளைகளையும் அப்படியே ஒழுக்கத்தோடும் கட்டுப்பாட் போடும் வளர்ப்பார்கள். 

அதே சமயத்தில், எனக்குத் தெரியுமே நீ அதைத்தான் கேக்கப்போறேன்னு. இதோபார் ரெடியா வாங்கி வெச்சிருக்கேன் என்று அவர்கள் கேட்பதற்கு முன்னரே விரும்பிய பொருட்களைத் தயாராக வாங்கிக் கொடுத்து அசத்தும் பாசமிக்க பெற்றோர் இவர்கள். 

குழந்தைகள் பிறக்கு முன்னாலேயே காரும், வீடும் வாங்கிவிட முடிவெடுத்து அதற்காக இரவுபகலாக ஓயாமல் உழைக்கவும் தயங்காதவர்கள்.

இவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால் அலைக்கழிக்கும், பெண் குழந்தை பிறந்தால் பெருக வைக்கும் என்பது பழமொழி. 

மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் குணநலன்கள் mirugasirisham nakshatra characters in tamil வழிபட வேண்டிய தலங்கள் திருமண வாழ்க்கை தொழில்

தொழில் – ayilyam nakshatra character in tamil 

இவர்கள் பலரை வைத்து வேலை வாங்கவும், நிர்வாகம் செய்யவும் திறன் கொண்டவர்கள். பணி புரியும் இடங்களில் நீதி, நேர்மையைக் கடைபிடிப்பார்கள். 

இந்த ஆள் சரியில்லை என்று ஒருவரைத் தீர்மானம் செய்து விட்டால் அவருக்குத் துணை போக மாட்டார்கள். இவர்களுக்கு துணிவு அதிகம் எந்த பிரச்சனையாக இருந்தாலும் மற்றவர்களை அணுகாமல் தாங்களே தீர்த்துக் கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். 

கல்லூரி ஆசிரியர், வழக்கறிஞர், ஆராய்ச்சி செய்பவர் போன்ற பணிகள் இவர்களுக்கு ஏற்றம் தரும். அலுவலகத்திற்குள், இந்த இடம் காலியா இருக்கே! இங்கே ஏதாவது செடி கொடிகள் வைக்கலாமே என்று இயற்கையோடு வாழ்வதற்கு விரும்புவார்கள். 

கல்வெட்டு ஆராய்ச்சி, மண்பாண்ட ஆராய்ச்சி, மீன்வளர்ப்புத்துறை, கடல் சார்ந்த தொழில்கள் ஆகியவை ஏற்றம் தரும். பெட்ரோல் பங்கு, கார்களை வாங்கி விற்பது, வேதபாடசாலை நடத்துவது ஆகிய தொழில்கள் மேன்மை தரும். 

ஆயில்ய நட்சத்திரத்துக்கு ஜோதிடம், பாம்புப்பண்ணை வைத்துப் பராமரிப்பது, சினிமாத்துறை, மிமிக்ரி, பத்திரிக்கை, அச்சு எந்திரப்பணி ஆகிய துறைகள் நல்ல லாபத்தைக் கொண்டுவந்து சேர்க்கும். 

வழிபடவேண்டிய ஆலயங்கள் 

ஆயில்யம் நட்சத்திரத்தின் குணநலன்கள் ayilyam nakshatra characters in tamil சிறப்புக்கள் வழிபடவேண்டிய மற்ற தலங்கள் திருமண வாழ்க்கை 

நண்டாங்கோயில் 

ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நீங்குவதற்காக செல்ல வேண்டிய பரிகாரத்தலம் திருந்துதேவன் குடியில் உள்ள கற்கடகேஸ்வரர் கோயில் ஆகும். 

கற்கடகம் என்றால் நண்டு என்பது பொருள் நண்டு வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற தலம் ஆதலால் இது நண்டாங்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த இவர்கள் கடக ராசியைச் சேர்ந்தவர்கள். 

ஆகையால் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையோ அல்லது முடிந்தபோதெல்லாமோ இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது திருப்பங்களையும், முன்னேற்றத்தையும் கொண்டுவரும். 

பல நல்ல கும்பகோணத்தில் இருந்தும், மயிலாடுதுறையில் இருந்தும் பேருந்துகள் செல்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோயில் செல்லும் வழியில் 11 கிமீ தொலைவில் உள்ள தலம் திருவிசைநல்லூர்.

இங்கிருந்து பிரியும் கிளைப்பாதையில் இரண்டு கிமீ தொலைவில் கற்கடகேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. 

திருவிசைநல்லூரில் இருந்து ஆட்டோக்கள் செல்கின்றன. இந்தத் தலத்தில் ஒரு நண்டு சிவபெருமானைப் பூசித்தது. அதனால் நண்டாங்கோயில் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. 

இறைவன் திருப்பெயர் கர்க்கடகேஸ்வரர், அம்பாள் பெயர் அருமருந்தம்மை, அபூர்வநாயகி. தீர்த்தம் பங்கய தீர்த்தம். 

தலப்பெருமை  

இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியவர் பொதுவாக சிவபெருமானுக்கு ஒரே ஒரு அயில மட்டுமே இருப்பது வழக்கம் அருமருந்தம்மை அடாவாயகி என்ற பெயர்களில் இரண்டு தேவியர் அடுத்தடுத்த சந்திரிகளில் தரிசனம் தருகிறார்கள் 

கோயிலில் முன்னொரு காலத்தில் துர்வாச மகன் இக்கோயிலுக்கு வந்து சிவபெருமானுக்கு அபிவேக ஆராதனைகள் செய்து விட்டு மெதுவாக நடந்து போனார்

அவரது நடையைப் பார்த்த ஒரு கந்தர்வன் அடேயப்பா என்ன நண்டு மாதிரி நடக்கிறீர் என்று சொல்லி கிண்டல் செய்ததோடு 

அப்படியே நடந்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் கோபத்திற்குப் பெயர் பெற்றவர் அல்லவா துர்வாசர் அவருக்குக் கண்கள் அற்பனே! சிவவழிபாடும் தரிசனமும் செய்துவிட்டு களைத்து வரும் என்னை நண்டு என்று சொல்லி கேலி செய்கிறாயா! 

நீ நண்டாக மாறக்கடவது என்று சபித்து விட்டார். தன்னுடைய தவறை உணர்ந்த கந்தர்வன் அவரிடம் மன்னிப்புக் கேட்டான், சாபவிமோசனம் வேண்டினான். 

இந்த தலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனைப் பூசித்து வா, நாளடைவில் சாபவிமோசனம் பெறுவாய் என்றார். அவனும் நண்டு வடிவத்தில் தினமும் சிவபெருமானைப் பூசித்து வந்து ஒருநாள் சாபவிமோசனம் பெற்றான். 

நண்டு பூசித்த தலமாதலால் இறைவனுக்கு கற்கடகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அந்த நண்டு லிங்கத்தின் திருமேனியில் ஐக்கிய மான துளையை இன்றும் காணலாம். 

மேலும் பாலாபிஷேகம் செய்யும் போது பொன்னிற நண்டு ஊர்வதைப் போல பெருமான் தரிசனம் தருவதை இன்றும் பார்த்து மெய்சிலிர்க்கலாம் என்கிறார்கள் பக்தர்கள். பெருமானின் திருமேனியில் இந்திரனால் வெட்டுப்பட்ட காயத்தையும் பார்க்க முடிகிறது. 

தரிசனப் பலன்கள் 

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அலுவலகத்தில் நீதி நேர்மை தவறாமல் கெடுபிடியோடு நடப்பார்கள் மனச்சாட்சிக்கு விரோதமான காரியங்களைச் செய்ய மாட்டார்கள். 

தவறு கண்டு அஞ்சாமல் எதிர்க்குரல் கொடுப்பார்கள். ஆகவே இவர்களுக்கு அலுவலகங்களில் நல்ல பெயர் இருக்காது, அதோடு மறைமுக எதிர்ப்புக்களும் அதிகமாகவே இருப்பது வழக்கம். 

கொடுக்கல் வாங்கலில் முடக்கம் இருப்பவர்கள், தொழில் வளர்ச்சி இல்லாமல் நொந்து போகும் முதலாளிகள், அலுவலகப் பணிகளில் தேக்கம் காண்பவர்கள், ஊழியர்களினால் தொல்லைகள் அனுபவிப்பவர்கள்,

நீண்ட நாட்களாக விற்காத சொத்துக்களை வைத்துக் கொண்டு அவதிப்படுபவர்கள் ஆகியோர் ஆயில்ய நட்சத்திரத்தன்று கற்கடகேஸ்வரரைத் தரிசனம் செய்து, அபிஷேகம் செய்து வழிபட்டால் நன்மைகள் பெருகும். 

இவர்கள் இக்கோயிலுக்கு வந்து பெருமானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் எண்ணிய எண்ணம் நிறைவேறும்.

ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கிரகதோஷம் நீங்குவதற்கு சென்று வழிபடவேண்டிய மற்றொரு முக்கியமான தலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள புள்ளம்பூதங்குடி. இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. 

திருப்புள்ளம் பூதங்குடி 

இது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை வழியாக திருவைகாவூர் செல்லும் டவுன்பஸ் பாதையில் சுவாமி மலைக்கு அப்பால் 5 கிமீ தொலைவில் உள்ளது. 

மூலவர்        வல்வில் இராமன், புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்         பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி) 

தீர்த்தம்        ஜடாயு தீர்த்தம், க்ருத்ர தீர்த்தம் 

தலவரலாறு 

சீதையை இராவணன் கவர்ந்து கொண்டு புஷ்பக விமானத்தில் சென்ற போது அவள் ‘ஐயோ என்னை காப்பாற்ற யாருமில்லையா?’ என்று கதறினாள். அவளது கதறலைக்கேட்ட ஜடாயு என்ற பறவை அரசன், இராவணனை எதிர்த்தார். 

இருவருக்கும் ஏற்பட்ட போரில் இராவணன் அவரது சிறகுகளை வெட்டினான். ‘ராமா ராமா கதறியடிபடியே தரையில் விழுந்தார் ஜடாயு.

என்று இராம லட்சுமணர்களுக்கு சீதை சென்ற வழியைத் தெரிவிக்க வேண்டும் என்ற கொள்கையோடு, தன் உயிரை விட்டுவிடாமல் ராம மந்திரத்தை ஜெபித்தபடியே விழுந்து கிடந்தார் ஜடாயு. 

சீதையைத் தேடிக் கொண்டு வந்த இராம லட்சுமணர்கள் அவரைக்கண்டு பதறினர். அவர் நடந்தவை களைத் தெரிவித்து விட்டு இறந்து போனார். இராமபிரான் அவரைத் தன் தந்தையைப் போல எண்ணி ஈமக்கடன்கள் செய்தார். 

அவரை மோட்சத்திற்கு அனுப்பி வைத்தார். ஜடாயுவை தனது தந்தை ஸ்தானத்தில் வைத்து கர்மகாரியங்களை இராமன் செய்ய எண்ணியபோது, பத்தினியாகிய சீதை இல்லையே என்று வருந்தினார். 

சீதையைப் பிரிந்த இராமனுக்கு உதவி செய்ய பூமாதேவியே பொற்றாமரையில் வந்து நின்று மானசீகமாகக் காட்சி அளிக்க இராமன் ஜடாயுவின் ஈமக்கடன்களைச் செய்து முடித்தார். 

பவ இத்தலத்தில் எதை இல்லாத ஸ்ரீ ராமன் மனுக்கு அருகே அவனுக்கு உற்ற துணையாக கதைகள் உற்சவ மூர்த்தியாள ப காடு காட்சி தருகிறார். 

மிய கட்சத்திரக்காரர்கள் பலர் அடிக்கடி தேவை பகலாத வாயு வழக்குகளில் மாட்டிக் கொண்டு  மேலும் அவர் வாழ்க்கையில் வசதிகள் பசி இல்லாமல் தவிப்பார்கள் அப்படிப்பட்ட இத்தலத்திற்கு வந்து சேவித்தால் குறைகள் நீங்கும்

இத்தலத்திற்கு வந்து ஸ்ரீராமபிரானை சேவித்து, பருக பிரார்த்தனை செய்வதோடு, அவருக்கு அபிஷேகம் காசு பாயசம் அமுது செய்வித்து அந்தப் பிரசாதத்தை பேக்கையோடு சாப்பிட்டால் கஷ்டங்கள் காணாமல் வால்விடும்

தற்போது வெளிநாட்டில் வேலை தேடிச் சென்று ராளமாகச் சம்பாதிப்பவர்கள் பெற்ற தந்தை இறந்து போனாலே நேரத்தில் வந்து ஈமக்கடன் செய்ய தயக்கம் காட்டுகிறார்கள் கால் காட்டுப் பறவையான ஜடாயுவையே தன் தந்தையாக நினைத்து

ஈமிக்காரியங்களைச் செய்த கருணை வள்ளல் இராமன். அப்படிப்பட்டவன் நமது கஷ்டங்களைக் கேட்டு சும்மா இருப்பானா? நிச்சயமாக இருக்கமாட்டான் உடனே தீர்த்து வைப்பான்.

ஆகவே நம்பிக்கையோடு சென்று அவன் பாதங்களைப் பிடித்துக் கொள்ளுங்கள், வாழ்வு வெளிச்ச மாகும். பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய 108 திருப்பதி அந்தாதி.

விரும்பினவை எய்தும் வினையனைத்தும் தீரும் 

அரும்பரம் வீடு அடைவீர் – பெரும்பொறிகொள் 

கள்ளம்பூதங்குடி கொள் காயமுடையீர் அடிகள் 

புள்ளம் பூதங்குடியிற் போம் 

ஐம்பொறிகளினால் அலைக்கழிக்கப்படும் உடலை உடைய மக்களே! நீங்கள் புள்ளம் பூதங்குடியில் எழுந்தருளி இருக்கும் பெருமானைக் கண்டு சேவியுங்கள் அப்படிச் செய்தால், நீங்கள் விரும்பிபவை எல்லாம் இந்த உலகத்தில் இடைக்கும். 

பண்ணைகள் அத்தனையும் தீரும், மோட்சமும் அடைன் என்று இத்தலத்தின் பெருமையைப் போற்றுகிறது. ஆகவே ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது இரக தோஷங்கள் நீங்குவதற்கும், திறமைக்கும், உழைப்பிற்கும் உரிய பலன்கள் கிடைப்பதற்கும், 

வயதிலும் அறிவிலும் மூத்தவர்களின் ஆதரவும், பக்கபலமும் கிடைப்பதற்கும் இக்கலத்துப் பெருமாளை வணங்கி வழிபடவேண்டும். பெற்றோர்களோடு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழும் பிள்ளைகள் இத்தலத்திற்கு வந்து வல்வில் இராமபிரானை மனமுருகி வழிபட்டால் குடும்ப ஒற்றுமை ஏற்படும். 

பாம்புகளுக்கு எல்லாம் தலைவன் ஆதிசேஷன். அந்த ஆதிசேஷனே ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதை. 

ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நாகதோஷம் இருப்பதால் அவர்கள் அதற்குரிய பரிகாரங்களை முறைப்படி செய்து கொள்வது இல்வாழ்க்கை மற்றும் தொழிலில் ஏற்படும் தடைகளை நீக்குவதற்குப் பெரிதும் உதவும். 

வழிபடவேண்டிய மற்ற தலங்கள் – ayilyam nakshatra characters in tamil 

திருப்பரங்குன்றம் மதுரை 

சங்கரன் கோயில் சங்கரலிங்கம் திருநெல்வேலி 

திருப்புனவாசல் சிவன் புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே திருவிடத்தை ஆதிவராகப் பெருமாள். சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில், திருப்புறம்புயம் சாட்சிநாதர் கல்லணை சாலையில் கபிஸ்தலம் சுவாமிமலைக்கு அடுத்து, 

பாபுராஜபுரத்திற்கு வடக்கே செல்லும் சாலையில் இன்னம்பூரை அடுத்து 3 கிமீ தொலைவில் இத்திருத்தலம் அமைந்திருக்கிறது.

இது போன்ற நமது பாரம்பரிய விஷயங்களை தெரிந்துகொள்ள எங்களது website – ஐ  பார்க்கவும்.நன்றி  மீண்டும் இது போன்ற நல்ல பதிவுகளோட பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே :

பூச நட்சத்திரத்தின் குணநலன்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button