இன்றைய (21-01-2024) ராசி பலன்கள் | Today Rasi Palan in Tamil

இன்றைய (21-01-2024) ராசி பலன்கள் | Today Rasi Palan in Tamil

மேஷம்

mesha rasi palan today

பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும்.  புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்களில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட சங்கடம் தீரும். குழப்பம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
 • அதிர்ஷ்ட எண் : 1
 • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் 
 1. அஸ்வினி : வருமானம் கிடைக்கும். 
 2. பரணி : சுபச்செலவு அதிகரிக்கும்.
 3. கிருத்திகை : சங்கடம் தீரும்.

ரிஷபம்

rishaba rasi palan today

தேக ஆரோக்கியத்தில் பொலிவு மேம்படும். மனதில் சில சங்கடங்கள் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனை விலகும். பொது பிரச்சனைகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பார்ப்புகளில் பொறுமை வேண்டும். அமைதி நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
 • அதிர்ஷ்ட எண் : 9
 • அதிர்ஷ்ட நிறம் : பொன்மஞ்சள்
 1. கிருத்திகை : சங்கடங்கள் தோன்றும்.
 2. ரோகிணி : பிரச்சனை விலகும். 
 3. மிருகம்: பொறுமை வேண்டும்.

மிதுனம்

mithunam rasi palan today

மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். முயற்சியில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். நினைத்த பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்ப ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். இரக்கம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
 • அதிர்ஷ்ட எண் : 3
 • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
 1. மிருகசீரிஷம் : தடுமாற்றம் ஏற்படும்.
 2. திருவாதிரை : மனப்பக்குவம் உண்டாகும். 
 3. புனர்பூசம் : கவனம் வேண்டும்.

கடகம்

kadagam rasi palan today

வியாபாரத்தில் புதிய பாதைகள் புலப்படும். எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த நெருக்கடி விலகும். வாழ்க்கையின் மீது புதிய நம்பிக்கை உண்டாகும். உழைப்பு நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
 • அதிர்ஷ்ட எண் : 1
 • அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
 1. புனர்பூசம் : சாமர்த்தியம் வெளிப்படும்.
 2. பூசம் : திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
 3. ஆயில்யம் : நம்பிக்கை உண்டாகும்.

சிம்மம்

simmam rasi palan today

மனதளவில் புதிய மாற்றங்கள் உண்டாகும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வீட்டிற்கு  தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடலில் இருந்துவந்த பிரச்சனை விலகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.

 • அதிர்ஷ்ட திசை :  தென்கிழக்கு 
 • அதிர்ஷ்ட எண் : 5
 • அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
 1. மகம் : மாற்றம் உண்டாகும்.
 2. பூரம் : பிரச்சனை விலகும்.
 3. உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி

kanni rasi palan today

நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். முயற்சிக்கு உண்டான லாபம் கிடைக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதளவில் இருந்துவந்த கவலை நீங்கும். உடலில் ஒருவிதமான சோர்வு தோன்றும். புதிய தொழில் சார்ந்த முயற்சி கைகூடும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : மேற்கு 
 • அதிர்ஷ்ட எண் :  2
 • அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
 1. உத்திரம் : சங்கடங்கள் விலகும். 
 2. அஸ்தம் : ஈடுபாடு உண்டாகும்.
 3. சித்திரை : முயற்சி கைகூடும்.

துலாம்

thulam rasi palan today

புதிய முயற்சிகள் இழுபறிக்கு பின் முடியும். சிறு சிறு வார்த்தைகள் கூட மனக்கசப்பை ஏற்படுத்தும். அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். பலதரபட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். வேலையாட்களால் அலைச்சல் ஏற்படும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தடைகள் நிறைந்த நாள். 

 • அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
 • அதிர்ஷ்ட எண் : 1
 • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
 1. சித்திரை : இழுபறியான நாள்.
 2. சுவாதி : குழப்பம் உண்டாகும்.
 3. விசாகம் :  அனுசரித்துச் செல்லவும். 

விருச்சிகம்

viruchigam rasi palan today

சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளால் மதிப்பு மேம்படும். துணைவர் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
 • அதிர்ஷ்ட எண் : 2
 • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
 1. விசாகம் : மதிப்பு மேம்படும்.
 2. அனுஷம் : சாதகமான நாள்.
 3. கேட்டை : வாய்ப்பு உண்டாகும்.

தனுசு

dhanusu rasi palan today

உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். கமிஷன் பணிகளில் லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகளுக்கு முடிவு கிடைக்கும். எதிர்ப்புகள் படிப்படியாக விலகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். லாபம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
 • அதிர்ஷ்ட எண் :  9
 • அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்
 1. மூலம் : லாபகரமான நாள்.
 2. பூராடம் : உதவி கிடைக்கும். 
 3. உத்திராடம் : பிரச்சனைகள் விலகும். 

மகரம்

magaram rasi palan today

வருமானத்தை உயர்த்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த தொடர்புகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத அலைச்சல் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
 • அதிர்ஷ்ட எண் : 3
 • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
 1. உத்திராடம் : ஆதரவு மேம்படும்.
 2. திருவோணம் : அறிமுகம் ஏற்படும். 
 3. அவிட்டம் : அலைச்சல் உண்டாகும்.

கும்பம்

kumbam rasi palan today

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுற்றி இருப்பவர்களைப் பற்றி புரிந்துகொள்வீர்கள். அதிரடியாக ஒரு முடிவை எடுப்பீர்கள். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் நண்பர்களின் வழியில் கிடைக்கும். வியாபாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் பொறுமை வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
 • அதிர்ஷ்ட எண் : 9
 • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் 
 1. அவிட்டம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 
 2. சதயம் : திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
 3. பூரட்டாதி : பொறுமை வேண்டும்.

மீனம்

meenam rasi palan today

ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

 • அதிர்ஷ்ட திசை :  கிழக்கு 
 • அதிர்ஷ்ட எண் : 5
 • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
 1. பூரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
 2. உத்திரட்டாதி : வெற்றி கிடைக்கும். 
 3. ரேவதி : பாராட்டுகளை பெறுவீர்கள்.

Leave a Comment