இன்றைய (14-01-2024) ராசி பலன்கள் | Today Rasi Palan in Tamil

இன்றைய (14-01-2024) ராசி பலன்கள் | Today Rasi Palan in Tamil

மேஷம்

mesha rasi palan today

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். சமூக பணிகளில் மதிப்பு மேம்படும். கடல் சார்ந்த பயணங்கள் சிலருக்கு சாதகமாகும். வேளாண்மை பணிகளில் லாபம் மேம்படும். ஆசைகள் நிறைவேறுவதற்கான சூழல் ஏற்படும். மூத்த சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். கலை துறைகளில் திறமைகள் வெளிப்படும். நிதானம் வேண்டிய நாள்.

 • அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
 • அதிர்ஷ்ட எண் :  1
 • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
 1. அஸ்வினி : மதிப்பு மேம்படும்.
 2. பரணி : லாபகரமான நாள்.
 3. கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.

ரிஷபம்

rishaba rasi palan today

தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும்.  உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் மாற்றம் உண்டாகும்.  மனதில் உலகியல் நடவடிக்கைகள் பற்றிய எண்ணங்களில் மாற்றம் ஏற்படும். மறைவான சில பொருட்களால் ஆதாயம் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
 • அதிர்ஷ்ட எண் : 2
 • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
 1. கிருத்திகை : பொறுமை வேண்டும். 
 2. ரோகிணி : மாற்றமான நாள்.
 3. மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும். 

மிதுனம்

mithunam rasi palan today

ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் புரிதல் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வாழ்வில் சில மாற்றமான சூழல் ஏற்படும். துணைவர் வழியில் அனுகூலம் உண்டாகும். உடனிருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுகம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
 • அதிர்ஷ்ட எண் : 9
 • அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு 
 1. மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும். 
 2. திருவாதிரை : திருப்தியான நாள்.
 3. புனர்பூசம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கடகம்

kadagam rasi palan today

உழைப்பிற்குண்டான பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு வேண்டும். உத்தியோகப் பணிகளில் சாதகமற்ற சூழல் அமையும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த முடிவுகளில் சில மாற்றம் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
 • அதிர்ஷ்ட எண் : 3
 • அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
 1. புனர்பூசம் : காலதாமதம் ஏற்படும்.
 2. பூசம் : கவனம் வேண்டும்.
 3. ஆயில்யம் : குழப்பமான நாள்.

சிம்மம்

simmam rasi palan today

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். சிலரின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். நண்பர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வர்த்தகப் பணிகளில் மேன்மை ஏற்படும். சலனம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
 • அதிர்ஷ்ட எண் : 6
 • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
 1. மகம் : மகிழ்ச்சியான நாள்.
 2. பூரம் : எண்ணங்கள் ஈடேறும்.
 3. உத்திரம் : மேன்மை ஏற்படும்.

கன்னி

kanni rasi palan today

வியாபாரப் பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். சமூகப் பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். புத்திசாலிதனத்தை வெளிப்படுத்தி லாபத்தை மேம்படுத்துவீர்கள். குழப்பம் விலகும் நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
 • அதிர்ஷ்ட எண் : 5
 • அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
 1. உத்திரம் : நெருக்கடிகள் குறையும் நாள்.
 2. அஸ்தம் : கட்டுப்பாடுகள் குறையும்.
 3. சித்திரை : முன்னேற்றமான நாள்.

துலாம்

thulam rasi palan today

வியாபாரம் நிமிர்த்தமாக சில நுட்பங்களை புரிந்துகொள்வீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகும். சமயோசிதமாக செயல்பட்டு நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சோதனை நிறைந்த நாள்.  

 • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
 • அதிர்ஷ்ட எண் : 1
 • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
 1. சித்திரை : நுட்பங்களை அறிவீர்கள்.
 2. சுவாதி : முயற்சிகள் கைகூடும். 
 3. விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.  

விருச்சிகம்

viruchigam rasi palan today

பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் தெளிவு உண்டாகும். பேச்சுவன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனையின் போக்கில் புதுமைகள் ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
 • அதிர்ஷ்ட எண் : 6
 • அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
 1. விசாகம் : தெளிவு பிறக்கும்.
 2. அனுஷம் : பிரச்சனைகள் குறையும். 
 3. கேட்டை : மாற்றம் உண்டாகும்.

தனுசு

dhanusu rasi palan today

சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மனை விருத்தி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும். திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தெற்கு  
 • அதிர்ஷ்ட எண் : 7
 • அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 
 1. மூலம் : மாற்றம் பிறக்கும். 
 2. பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.
 3. உத்திராடம் : ஒத்துழைப்பு ஏற்படும்.

மகரம்

magaram rasi palan today

தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.  மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

 • அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
 • அதிர்ஷ்ட எண் : 5
 • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
 1. உத்திராடம் : வேறுபாடுகள் குறையும். 
 2. திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.
 3. அவிட்டம் : சாதகமான நாள்.

கும்பம்

kumbam rasi palan today

வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிடிவாதமின்றி சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். வெளிவட்டாரங்களில் அமைதியை கையாளுவது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆதாயம் மேம்படும் நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தெற்கு
 • அதிர்ஷ்ட எண் : 3
 • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
 1. அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 
 2. சதயம் : சிந்தித்துச் செயல்படவும்.
 3. பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும். 

மீனம்

meenam rasi palan today

விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளவும். புதிய முதலீடுகளில் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. சிந்தனையின் போக்கில் குழப்பம் ஏற்படும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். தந்தைவழி உறவுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
 • அதிர்ஷ்ட எண் :  9
 • அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்
 1. பூரட்டாதி :  விழிப்புணர்வுடன் செயல்படவும். 
 2. உத்திரட்டாதி :  ஆதாயம் ஏற்படும். 
 3. ரேவதி : ஆர்வம் மேம்படும்.

Leave a Comment