இன்றைய ராசிபலன் (12-01-2024) | Today Rasi Palan in Tamil

12-01-2024 இன்றைய ராசிபலன் | Today Rasi Palan in Tamil

மேஷம்

mesha rasi palan today

பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வீடு மற்றும் வாகனங்களை சீர் செய்வீர்கள். குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். சில முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். கலை பொருட்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். போட்டி நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
 • அதிர்ஷ்ட எண் : 5
 • அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
 1. அஸ்வினி : விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். 
 2. பரணி : அனுசரித்துச் செல்லவும்.
 3. கிருத்திகை : நம்பிக்கை மேம்படும்.

ரிஷபம்

rishaba rasi palan today

மனதளவில் தெளிவு உண்டாகும். உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும். செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எண்ணங்களில் சில மாற்றம் உண்டாகும். மனதில் சிறு சிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சிரமம் விலகும் நாள்.

 • அதிர்ஷ்ட திசை : மேற்கு 
 • அதிர்ஷ்ட எண் : 2
 • அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
 1. கிருத்திகை : பொறுமை வேண்டும்.
 2. ரோகிணி : மாற்றம் உண்டாகும்.
 3. மிருகசீரிஷம் : விவேகத்துடன் செயல்படவும்.

மிதுனம்

mithunam rasi palan today

வேகத்தை விட விவேகத்தை கையாளுவது நல்லது. வரவைவிட செலவுகள் மேம்படும். நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும்.  உழைப்புக்குண்டான பலன் காலதாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் சிறு சிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
 • அதிர்ஷ்ட எண் : 1
 • அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
 1. மிருகசீரிஷம் : செலவுகள் மேம்படும்.
 2. திருவாதிரை : கவனம் வேண்டும். 
 3. புனர்பூசம் : சகிப்புத்தன்மையுடன் செயல்படவும்.

கடகம்

kadagam rasi palan today

குடும்பத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்களின் ஆதரவுடன் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். நிதானம் வேண்டிய நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
 • அதிர்ஷ்ட எண் : 2
 • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
 1. புனர்பூசம் : சாதகமான நாள்.
 2. பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
 3. ஆயில்யம் : வரவுகள் மேம்படும்.

சிம்மம்

simmam rasi palan today

மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வாக்குறுதி அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். கடன் தொல்லை ஓரளவு குறையும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். வியாபார அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். முயற்சி நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
 • அதிர்ஷ்ட எண் : 9
 • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
 1. மகம் :  சிந்தித்துச் செயல்படவும். 
 2. பூரம் : புரிதல் மேம்படும். 
 3. உத்திரம் : மாற்றம் ஏற்படும். 

கன்னி

kanni rasi palan today

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். நிதானமான செயல்களால் நன்மை ஏற்படும். குடும்ப நபர்களிடம் மனம் திறந்து பேசுவது நல்லது. மனதில் கற்பனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். செலவு நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
 • அதிர்ஷ்ட எண் : 3
 • அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
 1. உத்திரம் :  மகிழ்ச்சியான நாள்.
 2. அஸ்தம் : கற்பனை அதிகரிக்கும். 
 3. சித்திரை : விருத்தியான நாள்.

துலாம்

thulam rasi palan today

பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் தெளிவு உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். கோப உணர்ச்சிகளை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வேலையை தொடங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.  ஆக்கம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை :  மேற்கு 
 • அதிர்ஷ்ட எண் :  6
 • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம் 
 1. சித்திரை : அனுபவம் ஏற்படும். 
 2. சுவாதி : மேன்மையான நாள்.
 3. விசாகம் : ஆதாயம் உண்டாகும். 

விருச்சிகம்

viruchigam rasi palan today

பொது வாழ்வில் செல்வாக்கு மேம்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். நினைத்த சில காரியத்தை செய்து முடிப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிடிவாத போக்கை தளர்த்திக் கொள்ளவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளால் லாபம் மேம்படும். பணி நிமிர்த்தமான முயற்சிகள் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
 • அதிர்ஷ்ட எண் : 1
 • அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
 1. விசாகம் : செல்வாக்கு மேம்படும். 
 2. அனுஷம் : ஈடுபாடு உண்டாகும். 
 3. கேட்டை : முயற்சிகள் மேம்படும்.

தனுசு

dhanusu rasi palan today

எதிர்பாராத பண வரவு உண்டாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சவாலான சில சூழல்களை எதிர்கொள்வீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும்.  வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். பாசம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தெற்கு
 • அதிர்ஷ்ட எண் : 2
 • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
 1. மூலம் : வாய்ப்பு உண்டாகும். 
 2. பூராடம் : சிந்தனை கைகூடும். 
 3. உத்திராடம் : அங்கீகாரம் கிடைக்கும்.

மகரம்

magaram rasi palan today

மற்றவர்களிடம் வீண் கோபத்தை தவிர்க்கவும். நிதானமான செயல்கள் நன்மையை தரும். குடும்ப பொருளாதாரத்தில் நெருக்கடிகள் உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்துச் செய்வது நல்லது. வியாபாரத்தில் உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மறதி குறையும் நாள்.

 • அதிர்ஷ்ட திசை : கிழக்கு  
 • அதிர்ஷ்ட எண் : 3
 • அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
 1. உத்திராடம் : கோபத்தை தவிர்க்கவும். 
 2. திருவோணம் : நெருக்கடியான நாள்.
 3. அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

கும்பம்

kumbam rasi palan today

திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும். துணை வழி உறவுகளால் அலைச்சல் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் உண்டாகும். மனதளவில் தெளிவு ஏற்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். துணைவர் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். பணி நிமிர்த்தமான பயணம் உண்டாகும். இலாபம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
 • அதிர்ஷ்ட எண் : 6
 • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
 1. அவிட்டம் : அலைச்சல் ஏற்படும்.
 2. சதயம் : நிதானம் வேண்டும். 
 3. பூரட்டாதி : தாமதம் ஏற்படும். 

மீனம்

meenam rasi palan today

சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர் பாலின மக்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  நினைத்த காரியம் எளிதாக நிறைவேறும். எதிரிகள் விலகி செல்வார்கள். சுபகாரியங்களில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
 • அதிர்ஷ்ட எண் : 9
 • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
 1. பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
 2. உத்திரட்டாதி : பிரச்சனைகள் விலகும்.
 3. ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.

Leave a Comment